112 சங்கீதம்
112 சங்கீதம்
எதிர்குலகாம்போதி ஏகதாளம்
பாக்யவானல்லோ அல்லேலுயா
பாக்யவானல்லோ இம்மனிதன்
பாக்யவானல்லோ
1 தாக்கமாய் ஏகொவா கற்பனை மேலேகண்
நோக்கிமிகப் பிரியங் கொண்டிடு மானிடன் – பாக்ய
2 வல்லபமாகிடும் அவன்வித்துப் பூமியில்
நல்லோர்கள் சந்ததி யாசீர்வாதம்பெறும் – பாக்ய
3 அவன்வீட்டிலாஸ்தியும் ஜஸ்வரியமுமாம்
அவன் நீதியென்றென்றும் அசையாமல் நிலைநிற்கும் – பாக்ய
4 இருளில் நல்லோருக்கு வெளிச்சமுங் குதித்திடும்
இரக்கம் நெஞ்சுருக்கமும் நீதியுமங்குண்டே – பாக்ய
5 இரங்கியே கடன் கொடுத்தெதார்த்தத்தின்படிக்குத்தன்
கிரியைகள் நடப்பிக்கும் மானிடன் பாக்யவான் – பாக்ய
6 ஏதொன்றாலும் இவன் என்றுமசையாதவன்
நீதிமான் நித்திய கீர்த்தியையுடையவன் – பாக்ய
7 துற்செய்தி கேட்டவன் சோர்ந்திங்கே பயப்படான்
கற்தரை நம்பியேமனத்திடனாகுவான் – பாக்ய
8 அவனோதன் பகைஞரில் சரிக்கட்டல் காண்கிற
உவாமட்டுமஞ்சிடான் அவனெஞ்ச முறுதியே – பாக்ய
9 வாரியிறைத்தேழைக்கிங் கீவானே அவன் நீதி
தேறுமே அவன்கொம்பு உயருமே மேலாக – பாக்ய
10 ஆகாதோன் ஆசைகள் அழியவே இதைத்கண்டு
வேகமாய் பற்கடித் துலைந்தவன் கரைவதால் – பாக்ய