111 சங்கீதம்
111 சங்கீதம் ;
மோகனம் ஆதிதாளம்
செம்மையானவர்கள்
சங்கஞ்சபையிலெகோவாவை நான்
என்மனமுற்றுமிசையத்துதிப்பேன் அல்லேலுயா
1 றெம்பப்பெரியதவர் செயல்கள் அதை
நினைக்கும் விருப்பங்களெல்லாம்
நிலைசரியாய்ப் பகுத்தெடுத்து
பிரித்தெடுத்துக் கொண்
டாடப் பட்டதுகளாமே – செம்
2 அவருடைய செயல்
மகிமைகனகுமானதாமே ஆமாம்
அவருடைய நீதி
என்றும் என்றும் நிலை நிற்கும் இதோ
அவர்தமதசிசயங்கள் நினைக்கும்
அன்பாம் நினைவுகூர்தல்
ஆகச்செய்தார் அவர்இரக்கம்
மனஉருக்கமுமான
அன்பி னாண்டவர் அவரல்லோ – செம்
3 தமக்கு அஞ்சினோர்
சாப்பிட்டிலங்கச் செய்தாரே என்றுந்
தமதுடம்படிக்கை
தன்னை நினைவுகூருவாரே அவர்
தமது சனத்துக்கீய்ந்தார் புறச்
சாதிகள் சுதந்தரத்தை
தமது செயலின் பெலனையதினால்
அவர்கட்கறிய
அவரே செய்துவைத் தாரே -செம்
4 அவர்கைச் செயல்கள்
ஞாயஞ்சத்தியமாமே இதோ
அவரின் கட்டளைகள்
அனைத்தும் உண்மையதாமே ஆமாம்
அவைகளென்றென்றுமுள்ள தான
அனைவரத கால முறுதி
அவைகளுண்மை செம்மையாக
அவராலமைத்து
வைக்கப்பட்டதுகளாமே -செம்
5 அவரனுப்பினார் தம்
சனத்துக்கு மீட்பை இதோ
அவருடம்படிக்கை
நித்ய உடம்படிக்கை யாச்சே ஆமாம்
அவருடைநல் நாமம் நமக்
கற்சனைப்பரி சுத்தம்
அதற்கென்றும் நரர் அஞ்ச
அஞ்சத்தக்க
நல்ல நாமம்அது அல்லோ -செம்
6 எகோவாவுக்கஞ்சும்
நடப்பு ஞானத் துவக்கம் இதோ
எகோவா கட்டளைப்
படியே செய்கிற யார்க்கும் ஆமாம்
வெகுவாம் நற்புத்தி யுண்டு இதோ
வெகுவாம் நற்புத்தியுண்டு
புகழென்றும் நிலைநிற்கும்
அப்படியதைப்
போற்றிநடந்திடுவோர்க்கு -செம்