110 சங்கீதம்
110 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
காம்போதி ஏகதாளம்
மகா எகோவா எந்தன் ஆண்டவ
ருடனே நீரெனது
வலப்பக்கத்தாசனத்தில் உட்கார்ந்
திருமென்று வாழ்த்தினரே
1 பகைவரை உமது பாதத்தின்கீழ்நான்
படியாகக் கீழ்ப்படுத்தும்
வகையைநான்செய்து முடித்திடும்வரைக்கும்
நீரிங்கே இருமென்றார் – மகா
2 உம்முடைவல்லமைச் செங்கோலைச் சீயோன்
உன்னதத்திருந்தனுப்பி
உம்முடைபகைஞர் நடுவிலேயாளுகை
செய்தருளு மென்றாரே – மகா
3 உம்முடைசனங்கள் பரிசுத்த அழகு
உற்சாகம் நிறைவதல்லால்
உம்முடைவீர பராக்ரமம் விளங்கும்
நாளினிலே இலங்குவார்கள் – மகா
4 அதிகாலையிருட்டின் கெற்பத்தில்ப் பிறக்கும்
பணிவளம் போல் மிகவும்
புதிதாயுமது இழந்தைச் சனமுமக்
கிங்கேதான் பிறந்திடுமே – மகா
5 என்றென்றும் நீதி ராசவுத்தரவால்
பிரபுவா யாள்வீரென்று
நன்றாய்எகோவா ஆணையிட்டாரே
அதைத்திரும்ப மறுத்தழியார் – மகா
6 உம்முடைவலது பாரிசத்தாண்டவர்
உக்கிரமா யெழும்பும்
தம்முடைகோப நாளினிலுலகத்
தரசர்களை வெட்டுவாரே – மகா
7 சாதிக ளிடத்தில் ஞாயத்தீர்ப் பளித்துச்
சவமங்கெல்லாம் நிரப்பி
மோதிவிஸ்தாரத் தேசத்துக்கதிபனா
யிருப்பவனை நொறுக்கிவிடுவார் – மகா
8 நதியிலே குடிப்பார் அவரோ வழியில்
நதியிலேதாம் குடிப்பார்
கெதியாயதினால் அவரேபின்பு
தலையெடுப்பார் உயர்ந்திடுவார் – மகா