11 சங்கீதம்
11 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
நாகவராளி சாபுதாளம்
எகோவாவை நம்பிக்கொண்டேன் மகா
எகோவாவை நம்பிக்கொண்டேன்
1 பகையாயென்னாத்துமாவைப்
பட்சியைப்போல்மலைக் காட்டில்
பறந்தலையச் சொல்லிக்கேலி
பண்ணுஞ்செயல் என்னசெயல் – எகோ
2 ஆகாதமனுஷர்வில்லை வளைத்து
அந்தகாரந் தன்னிலெய்யச்
சேகையான அம்புகளைச்
சீர்மனசோர் மேலேயெய்யத்
திடமாகநாணின் மேலே
சேர்ந்துமிகத் தொடுக்கிறார்கள் – எகோ
3 அஸ்திபாரந்தானும்பேரும் நீதி
யணிந்தவனென்ன செய்வான்
கற்தரிங்கிருப்பார் பரி
சுத்தஅறமனை தன்னில்க்
கற்தருடைய ஆசனத்தைக்
காண்போம் பரமண்டலத்தில் – எகோ
4 மானிடர்கள் புத்திரரைச் சோதிக்கும்
மகிமையெகோவா கண்கள் நன்றாய்க்
காணும்சுவாமி நிமைகளோ
கண்டறியும் நீதிமானைக்
கரிசனமாய்ச் சோதித்துக்
கண்டுகொள்ளும் நித்தம்நித்தம் – எகோ
5 ஆகாதமாந்தனையுங் கொடுமையில்
ஆசைகொண்ட மாந்தனையும்
ஏகோவாவினாத்துமமோ
என்றென்றைக்கும் அருவருத்தே
இருக்குமவர் செயலைப்பார்த்து
இருதயத்தில்ப் பயந்துகொண்டு – எகோ
6 ஆகாதமாந்தர்மேலே சிதைவும்
அக்கினியுங் கெந்தகமும்
ஏகோவாவே பெய்யச்செய்வார்
இடுக்கக்கோடை கொந்தளிப்பும்
ஆகாதமனிதர் குடிக்கும்
ஆக்கினையின் பானப்பங்கு – எகோ
7 நீதித்தெய்வம் ஏகோவாதான் அவர்
நீதிதன்னை நேசிப்பாரே
நீதஞ்செம்மையுள்ளவனை
நேர்மையான சுவாமிமுகம்
நேசமாகநோக்கி நிற்கும்
நிலமைதன்னை யறிந்துணர்ந்து – எகோ