109 சங்கீதம்
109 சங்கீதம்
குறள் – றாகத் தலைவனுக்கு றாசனாந் தாவீது
பாகமா யொப்புவித்த பாட்டு
1 வது பங்கு வச.1-5
விருத்தம்
1 துன்மார்க்கன் கபடவாய் எனக்கெதீராய்ச்
சொல்லச்சொல்லத் திறந்திருக்கும் ஆதலாலே
என்துதியின் தெய்வமே மவுனமாக
இருந்திடாதெழுந்நெனது முகத்தைப்பாரும்
என்னுடனேகள்ளநாக் கெடுத்துப்பேசி
என்னைப்பகைவார்த்தைகளால்ச் சூழ்ந்துகொண்டு
என்மேலேமுகாந்தரங்கள் என்றஒன்று
மில்லாமற்போராட்டஞ் செய்கிறார்க்ள்
2 நானவர்களுடனிருந்த இஷ்டத்துக்கும்
நட்புக்கும்பதிலென்னைப் பகைத்திட்டார்கள்
நானதுக்குப் பதிலாக உம்மைநோக்கி
நாடோறுஞ்செபம்பண்ணிக் கொண்டிருப்பேன்
நான் நன்மை செய்த்துக்குப் பதிற்செயலாய்
நடத்தினர்கள் தின்மைச்செய் லென்னிடத்தில்
நானிஷ்டஞ்சாதித்தே னதுக்குப்பதில்
நட்பறுத்துப் பகையெனக்குக் காண்பித்தார்கள்
2 வது பங்கு வச.6-15
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
அவன்மேலேபேயேல் சேபூல்நிற்கட்டும்
1 அவன்வலபக்கத்தில் அணுகட்டுஞ்சாத்தான் -அவன்
2 அவன்ஞாயத்தீர்ப்பில் ஆகாதோனாக!
அவன்செபம்பாவமே ஆகியேமுடிய! -அவன்
3 அவன்நாள்க்கள்கொஞ்ச மாகுவதாக!
அவனுத்தியோகத்தை அன்னியன்பார்க்க! -அவன்
4 அவன்மக்கள் திக்கற் றலைந்துகீழாக!
அவனுடைபெண்சாதி அமங்கிலியா! -அவன்
5 அவன்மக்கள்பிச்சை யலைந்தெடுத்தேங்க!
அவர்கள்பாழ்க்கடிப்பால் அப்படியாக! -அவன்
6 அவன்கடக்காரன் அவனுக்குண்டான!
அவனாஸ்தியாவையும் அறுதியாய்ச்சிக்க! -அவன்
7 அவன்பாடுபட்ட தனைத்தையும்வம்பாய்!
அவனிடத்திலிருந்து அன்னியர்பிடுங்க! -அவன்
8 தயவவன் மேலே தாபிப்போன் நீங்க!
தயங்கிய அவன்மக்கட்கிரங்குவோன்ஒய! -அவன்
9 அவனின்பிற்கிளையே ரற்றிங்கேதொலைய!
அவன்பேர ந்நாளிலே அவன் நாமம்கொலைய! -அவன்
10 அவனின்மூதாக்கள் அக்கிரமம்சுவாமியின்!
கவனத்துச்சமுகத்தில்க் கணக்காகிநிற்க! -அவன்
11 அவன்தாயின்பாவம் ஆண்டவர்முன்னே!
கவனிப்பாய் நித்தமும் களையைப்போலாக! -அவன்
12 அவர்கள்பேர்பூமி யனைத்துமில்லாமல்!
அவமாய்வேரறுத்து அடியோடேபோக! -அவன்
3 வது பங்கு வச.16-20
நாகராளி சாபுதாளம்
சாபம் நேர்ந்திடுமே யவனுக்குச்
சாபம் நேர்ந்திடுமே
1 தாபந்தம் எளிமையாய்ச்
சஞ்சலப்பட்டோனை
சதிசெய்யத் தொடர்ந்திட்டான்
தயைசெய்ய மறந்திட்டான் – சாபம்
2 அவனாசீர்வாதத்தை
யணைக்காமல் விட்டிட்டான்
அவனைவிட் டகலுமே
அந்த ஆசீர்வாதம் – சாபம்
3 அவன்சாபந் தன்னுடை
அங்கியா யுடுத்திட்டான்
அவனுடை வுள்ளத்தில்
அதுநீர்ப்போல்ப் பாயுவே – சாபம்
4 அவனுக்கது போர்வையாம்
அஸ்திக்கு ஊனாகும்
தவறாம லவன் நித்தம்
தரித்திடுங் கச்சையாம் – சாபம்
5 இதுஎந்தன் விரோதிகள்
என்பிராணன் போக்கிட
சதம்பல்சொல் மாந்தர்க்குஞ்
சாமியால் வருங்கூலி – சாபம்
4 வது பங்கு வச.21-29
ஆண்டவராஞ் சுவாமி
ஆதரித்தருளும் என்னை
1 வேண்டிக்கொண்டேன் உமதுநாம
மேன்மையின் நிமித்தியமாய் – ஆண்ட
2 நான்மிக எளியவனே
நலிவுகொண்டிருப்பவனே
ஞானஎகோவா உமதுகிருபை
நலமாக இருப்பதினால் – ஆண்ட
3 என்மனம் உடைந்துள்ளுக்குள்
இடிந்து நைந்திருக்கும்
மென்மேலும்நான் சாயும்நிழல்போல்
விசையற்று நொந்து போனேன் – ஆண்ட
4 வெட்டுக்கிளிப் பூச்சியைப்போல்
மிரட்டுவர் அவர்களென்னை
பட்டிணியாய் எனதுமுழங்கால்
பாறியே தடுமாறும் – ஆண்ட
5 மாங்கிசம் புஷ்டியற
வாடிமெய் யுலர்ந்தேன்நான்
ஈங்கிசையா யவர்கள் கண்முன்
இகழ்ச்சிக்கு மிடமானேன் – ஆண்ட
6 பங்கமா யவர்களென்னைப்
பார்த்திடும் வேளைகளில்
தங்கள்தலையைக் குலுக்கியசைத்து
சக்கந்தம் பண்ணுவார்கள் – ஆண்ட
7 என் தெய்வ மான சுவாமீ
எனக்குநீர் உதவிசெய்யும்
என்னை உமது கிருபைப்படிக்கு
இரட்சித்துக் காப்பாற்றும் – ஆண்ட
8 அமைதியாய் என் சுவாமீ!
அவர்களு மிதைத்தானே
உமதுகரம் உமதுசெயலென்
றுணர்ந்திடச் செய்தருளும் – ஆண்ட
9 அவர்களே சபித்தாலும்
அதிகமாய் வாழ்த்தும்என்னை
அவர்களெழும்ப வெட்கம் அவர்கள்
அடைந்துபின்வாங்கச் செய்யும் – ஆண்ட
10 யானென்றும் மகிழ்ந்திடட்டும்
எனைப்பகை செய்பவர்க்கு
ஈனவெட்கஞ் சால்வையாகி
இலட்சையே நேர்ந்திடட்டும் – ஆண்ட
5 வது பங்கு வச.30-31
சாமியை யான்புகழ்வேன் வெகுசனத்துள்
சாமியை யான் புகழ்வேன்
1 ஆமவரை மிகவும்
அதிகமா யென் வாயால்
ஆனந்தமாய்த் துதிப்பேன்
வெகுசனத்துள் – சாமி
2 அநாதியினுயிரை
ஆக்கினைப்படுத்திய
அழிம்பரின்கைக்கு நீக்கும்
இவ்வுலகில் – சாமி
3 அவன்வலது பக்கம்
அரணிலைக் காவல்
ஆகியே நின்றிடுவார்
இவ்வுலகில் – சாமி