107 சங்கீதம்
107 சங்கீதம்
இந்துஸ்தன் காப்பி ஏகதாளம்
எகோவா நல்லவர் எகோவா நல்லவர்
எகோவா நற்கிருபை நமக்கு
என்றென்று முள்ளதல்லோ அவருக்
கேற்றிடத் துதிசெய்யுங்கள்
எகோவாசத்துரு கைக்கு நீக்கியே
இரட்சித்துக்கிழக்கு மேற்குவடக்கு
இசைந்த தெற்குத்திசை யானபல
இடங்களி லிருந்துவந்தோர் இப்படி
இயம்பக் கடவர்கள் -எகோ
1 வது பங்கு வச.3-9
(பிரயாணக்காரர்)
1 வாசம்பண்ணஊரைக் காணாமல்
வனத்தில்த்தாபரித்து அவாந்தர
வழியில்த்தாகம்பசி ஆத்துமம்
வதைவுமாயலைந்து நேரிட்ட
மோசத்திலவர்கள் கெஞ்சும்பொழுதில்
நேசமாகக்கற்தர் அவர்களின்
நெருக்கத்தை விலக்கிவிட்டு ஊர்பதி
தருகிடஅவர்களையே செம்மையான
வழியிலே நடத்திவந்தார் -எகோ
2 தவ – ஆத்துமாவை எகோவா
தாகந்தீர்த்துவைத்துப் பசியினால்
நீவிர்ந்தஆத்துமாவை நன்மையால்
நிரப்பினாரேயென்று அவர்கள்
புவியிலே யவருடை கிருபையினிமித்தமும்
அவரதிசயங்கள் நிமித்தமும்
அவருக்கு மனிதர்முன்னே நன்றி
யறிதலாந் துதியைப் பாடி மிகவு
மானந்தப் பட்டிடட்டும் -எகோ
2 வது பங்கு வச.10-16
(சிறைப்பட்டோர்கள்)
3 உன்னதராலோசனை நெகிழ்ந்தவர்
நன்மைச்சொல்க் கேட்டிடாமல்க் கலகித்து
துன்மரண நிழலில் இருளிலும்
பின்னிக்கொண் டொடுங்கிடந் தலைந்து
மென்மேலும்பின்னமாய் நெஞ்சமே தொய்ந்தனர்
பின்னான உதவியின்றி வீழ்ந்திட்ட
துன்பத்தில் எகோவாவை நோக்கியே
விண்ணப்பஞ் செய்தபோது அதையவர்
விலக்கி ரட்சித்தாரே -எகோ
4 இருள்துன்மரண நிழல் விட்டுவெளி
யேறிடச்செய்தனரே இவர்களை
இருகக்கட்டியகட் டறுந்தே
இறங்கியவிழச்செய்தார் எகோவா
இரும்புத்தாப்பாள்கள் வெண்கலக்கதவுகள்
நெரிந்து உடையச்செய்தார் எகோவா
கிருபைகள் அதிசயத்தி னிமித்தம்
திரளான மனிதர்முன்னே அவர்க்குத்துதி
செய்வது தகுதியாமே -எகோ
3 வது பங்கு வச.17-22
(வியாதிக்காரர்)
5 அக்ரமம்பாவவழி யாலே
அவமதிக்காராகி நோய்கொண்டு
அதிகமா யொடுங்கிநின்று சகல
அன்னமும்ஒங்கரித்து மரணத்தின்
முக்கியவாசல்கள் முன்புக்கும்போய் மகா
மோசமேயடைந்ததினால் எகோவாவை
முன்னிட்டுக்கூப்பிடும்போ தவர்களின்
துன்பத்தைநீக்கிவைத்து அவர்களைத்
தூக்கியேமீட்டுவிட்டார் -எகோ
6 அவரப்போ தம்முடைசொல் அனுப்பி
அவர்களைச் சொஸ்தமாக்கி அவர்களை
அழிவுக்குத் தப்பவைத்தார் அதற்கவர்
அதிசயம் நற்கிருபை நிமித்தம்
அவர்கள் நல்மனிதர்முன் எகோவாவைத்துதிசெய்து
அவருக்குத் தோத்ரப்பெலி செலுத்தி
அவருடைநற்செயலைக் கெம்பீர
மாகவேவிவரிக்கட்டும் கெம்பீர
மாகவே விரிக்கட்டும் -எகோ
4 வது பங்கு வச.23-32
(கப்பல்க்காரர்)
7 பெருநீர்ச் சமுத்திரத்தில்க் கப்பலில்
தொழில்ச்செய்வோர் ஏகொவாவின் அதிசயம்
பெருஞ்செயல்காண்கிறார்கள் அவர்சொல்ல
பெருங்காற்றங் கலையெழுப்பும் ஆகாயம்
வருவதும் பாதாளந் தாழ்வதுமுண்டாகும்
மனமோவிக்கினத்தால்க் கரையும்
மலைந்துகள் வெறியன்போல தளம்புவர்
மாளும் ஞானமெல்லாம் அப்போது
மன்றாடத் தெய்வங்கேட்பார் -எகோ
8 கொந்தளிப் பமர்ந்துநிற்கும் அலைகளின்
கோட்டமுந் தணிந்துபோகும் விரும்பின
குடாக்கடல் வந்துசேர்வர் சந்தோஷங்
கொண்டாடி மனிதர்முன்னே எகோவா
நன்தயை அதிசய நிமித்தியம் தோத்திரம்
நடுச்சபை தன்னில்ச்செய்து முதிர்ந்த
நாதர்கள் முன் அவரை உயர்த்தியவர்
நாமத்தைப்போற்றிடட்டும் அவருடை
நாமத்தைப்போற்றிடட்டும் -எகோ
5 வது பங்கு வச.33-43
(யிர்க்குடிகள்)
9 நதிகளேவெறுந்தரையும் நீருற்றின்
நல்த்தரைகடுநிலமும் செழித்ததாம்
நாடுகள்குடிகள் தீமை நிமித்தியம்
நாறலாம்உருமாக மாற்றுவார்
அதுபோலவெறுந்தரை தண்ணீர்க்குட்டமும்
அதிகவறட்சிநிலம் நீரூற்று
மாகவேமாற்றிடுவார் பசித்தோரை
அங்கவர்குடியேற்ற அதிற்குடி
யாகியூர்உண்டாமே -எகோ
10 நஞ்சையை விதைத்திடுவர் கொடிமுந்திரியை
நாட்டுவர் தோட்டங்களில் அதுகளால்
நல்வரத்துண்டாகும் அவர்கட்கு
நல்லாசீர்வாதமுண்டாம் நாட்டினில்
மிஞ்சமிஞ்சவே பெருகியே வாழுவர்
மிகுத்தே யவர்களுக்குள் இருக்கும்
மிருகசீவன்களை அப்புறம்
வெறுமையாய்க்குறுகப் பண்ணாமல்
வெகுபெலமாகவைப்பார் -எகோ
11 திரும்பவுங்கொஞ்சமாகக் குறுகிக்
தீங்கானமுத்திக்கையால் சஞ்சலத்
திகிலாலுந்தாழுவார்கள் சஞ்சலத்
திகிலாலுந்தாழுவார்கள் எகோ
பிரபுக்கள்மேலேதம் அசட்டையைச் சொரிந்து
வழியற்றவாந்தரத்தில் அவர்களைத்
திரிந்தே யலையச்செய்வார் எளியோனைச்
சிறுமையை விட்டுயர்ந்த அடைக்கலஞ்
சேர்ந்தெங்குஞ் சுகிக்கச்செய்வார் -எகோ
12 வம்மிசம் மந்தைபோல பெருகி
வாழுவான்எளியவனே அதைக்கண்டு
மகிழுவர் செம்மையானோர் ஆனால்த்தன்
வாய்மூடும் ஞாயக்கேடு யாவும்
தன்மனதாலெந்த ஞானமுள்ளவனும்
சாமியாயிதுகளையே யோசிப்பான்
சாமியாம் எகோவாவின் கிருபைகள்
தறணியிலிந்தவித மனிதரால்ச்
சாரமாய்த்தெரியவரும் -எகோ