105 சங்கீதம்
105 சங்கீதம்
கேதாரகௌளம் திரிபுடைதாளம்
கற்தரைத் துதித் தவருடை நாமத்தை
வெற்றிப்பிரஸ்தாப மாக்குங்கள் சனமே
1 சுற்றிலுஞ்சனக் கூட்டங்கட் குள்ளேநாம்
சுவாமிசெய்கையை யறிவித்துச்சொல்லுவோம் -கற்த
2 அவரைப்பாடுங்கள் கீர்த்தனம்பண்ணுங்கள்
அவரின் அதிசெயம் யாவையும் தியானித்து
அவரின்தனிப்புகழ் நாமத்தின்கணிசத்தை
ஆனந்தத்துடன் பாராட்டிச் சொல்லுங்கள் -கற்த
3 எகொவாவைத்தேடும் மாந்தர்களிருதயம்
மகிழட்டுமஅவர் வல்லமைக்காய் நீங்கள்
வெகுவாகக்கேட்டு விசாரித்து நித்தமும்
மேன்மையாய் அவர் சமுகத்தைத் தேடுங்கள் -கற்த
4 அவரின் தாசனாம் ஆபிரகாம்மக்களே
அவரிங்கற்சித்த யாக்கோபின் வம்சமே
அவர்செய்த அவர் அற்புதம் அதிசெயம்
அவர் வாயின் ஞாயத்தீர்ப்பையும் நினையுங்கள் -கற்த
5 அவரே நம்முடை தெய்வமாம் ஏகொவா
அவர்ஞாயந்தீர்ப்பு ஆம்பூமி யெங்குமே
அவரே நம்முடை தெய்வமாம் ஏகோவா
அவர்ஞாயத்தீர்ப்பு ஆம்பூமி யெங்குமே -கற்த
6 ஆயிரந் தலை முறைக்கிட்ட வார்த்தையாய்
ஆபிரகாமுடன் தாம்செய்தஒப்பந்தம்
நேயஈசாக்குக் கிட்டதம் மாணையும்
நித்யகாலமும் அவரிங்கே நினைக்கிறார் -கற்த
7 யாக்கோபுக்கிதைத் தீர்மானமாகவும்
இசரவேலுக்கிதைத் தீர்மானமாகவும்
ஆக்கியுங்களுக் குங்களின் சுதந்தர
ஆட்சியாங்கானான் நாடீய்வோமென்றாரே -கற்த
8 அங்கேயவர்களோ கொஞ்சமாஞ்சனங்களும்
அந்நியநாட்டுச் சனங்களுமாகவே
தங்குங்காலத்தில் அவ்விதவார்த்தையைத்
தற்பரன்சொல்லித் தாபித்துவைத்தாரே -கற்த
9 ஒருராசாங்கம் விட் டடுத்தராசாங்கமும்
ஒருசாதிவிட்டு மற்றொருசாதியும்
இருக்கிறஇடந் தேடியுமவர்களை
ஒருத்தனும் அப்போ ஒடுக்காமல்ரட்சித்தார் -கற்த
10 யானபிசேகஞ் செய்திட்டமனிதர்க்கும்
என்தீர்க்கதரிசி மார்களா மாந்தர்க்கும்
ஈனஞ்செய்யாம லிருங்களென் றவர்கட்காய்
இராசரையவர் கடிந்துகொண்டாரல்லோ -கற்த
11 தேசமீ தினில் பஞ்சத்தை வருவித்தார்
போசனமெனுந் தாங்குகோல் முறித்திட்டார்
நேசமாய்முன்னே ஒருவனையனுப்பினார்
யோசேப்புவிலை யாகினான் அடிமையாய் -கற்த
12 அவர் சொல்ப்பூர்த்தியாய் நிறைவேறுமட்டுக்கும்
அவனைக்காலிலே விலங்கிட்டே யொடுக்கினர்
அவனின் பிராணனோ இரும்பிலேயண பட
அவனையேகோவா சொல்ப்பிடமிட்டது -கற்த
13 கணிசமாசவே ஊர்வேந்தன் அவனையே
கட்டவிழ்த்திட உத்தரவருளினான்
சனத்திரள்களி னதிபதியவனையே
சந்தோஷத்துடன் விடுதலைபண்ணினான் -கற்த
14 தன்மேன்மக்களை யவன்மனம்போல்க்கட்டி
தனதுமூப்பரை ஞானிகளாக்கிட
தன்னாஸ்திக்கெல்லா பதிபதியாக்கியே
தன்வீட்டுக்கவனை யாண்டவனாக்கினான் -கற்த
15 இசரவேலப்போ எகிப்பத்தில் வந்திட்டான்
யாக்கொப்காம் நாட்டில் பரதேசியாகினான்
இசரவேலப்போ எகிப்பத்தில் வந்திட்டான்
யாக்கொப்காம் நாட்டில் பரதேசியாகினான் -கற்த
16 எகோவா தம்முடை சனம்மெத்தப்பலுகவும்
இவர்களின் கொடும் பகைஞரைப் பார்க்கிலும்
மிகபெலத்திடச் செய்திங்கே வைத்திட்டார்
மிகபெலத்திடச் செய்திங்கே வைத்திட்டார் -கற்த
17 அவர்சனத்திரள் மேல்ப்பகை வைத்திட
அவர்களின் மனம் அதினாலே மாறிற்று
அவர்பணிவிடைக் காரர்க்குச் சற்பனை
அதினால்த்தா னவர்கள் செய்திட நேர்ந்தது -கற்த
18 தமதுதாசனாம் மோசேயின் கூடவே
தாமங்கற்சித்த ஆறோனையனுப்பினார்
தமதுதாசனாம் மோசேயின் கூடவே
தாமங்கற்சித்த ஆறோனையனுப்பினார் -கற்த
19 அவர்கள்காம்தேசத் தவர்சொன்ன அற்புதம்
அடையாளங்களைக் கிரமமாய்ச் செய்தார்கள்
அவர்கள்காம்தேசத் தவர்சொன்ன அற்புதம்
அடையாளங்களைக் கிரமமாய்ச் செய்தார்கள் -கற்த
20 அந்தகாரத்தை இருளையும் வரச்செய்தார்
அவருடைவார்த்தைக் கெதிர்ப்பார்களங்கில்லை
அந்தோ! தண்ணீரை றெத்தமாய் மாற்றிவிட்டார்
அவர்கள்மச்சங்கள் செத்திடச் செய்திட்டார் -கற்த
21 அவர்கள் தேசத்தில் தவளை கள்மிகக்கலித்
தவர்கள் ராசாக்க ளரையிலும் வந்ததே
அவர் சொல்விளம்பிட அவர்களினெல்லையில்
அளவில்லாமலே பேன்வண்டும் வந்தது -கற்த
22 அவர்களின்மழை கன்மழையாகவே
அவர்களின் தேசத்தி லக்கினிசுவாலையாய்
அவர்களினத்தி கொடிமுந்திரிகைச்செடி
அவர்களினெல்லை மரங்களும் முறிந்ததே -கற்த
23 அவர்சொல்விளம்பிட பச்சைக்கிளிவெட்டுக்கிளி
அனந்தமாகவே அடர்ந்தேறிவந்தது
அவர்கள் தேசத்துப் பூண்டெல்லாம் அரித்தது
அவர்கள் தேசத்துக் கனியையுந்தின்றதே -கற்த
24 அவர்கள் தேசத்து முதற்பேறாமனைத்துமே
அவர்களில்முக்ய வீரரும்படச்செய்தார்
அவர்கள் தேசத்து முதற்பேறாமனைத்துமே
அவர்களில்முக்ய வீரரும்படச்செய்தார் -கற்த
25 இவர்களுக்கஞ்சும் பயங்கரவாதனை
எகிப்துமாந்தரைப் பிடித்துக்கொண்டதினாலே
இவர்கள் அப்புறப் பட்டிட்ட வேளையில்
எகிப்து நாடெல்லாஞ் சந்தோஷப்பட்டதே -கற்த
26 ராகவொளியாக அக்கினிவிரித்திட்டார்
நல்மேகம்மறை விடமாக விரித்திட்டார்
வாய்மனுச் சொல்லால்க் காடையும்வரச்செய்தார்
வானத்தப்பத்தால்பசியையுந் தீர்த்திட்டார் -கற்த
27 கன்மலை தன்னைத் திறந்திட்டார் அப்போது
கனதண்ணீர்களே புற்ப்பட்டுவந்தது
வெள்ளம்வெள்ளமாய் வறண்டவனாந்தர
வெளிகளிலாறாய் ஒடிக்கொண்டிருந்ததே -கற்த
28 தம்தாசனான் ஆபிரகாஞ்செவிகேட்ட
தம்தனிப்புகழ்ச்சிச் சொல்யாதுபண்ணியே
தம்சனங்களிப் போடுந் தாந் தெரிந்தபேர்
சந்தோஷத்தோடும் புறப்படப்பண்ணினார் -கற்த
29 தமதுபிரமாணங் காத்திங்கே நடக்கவும்
தமதுஞாயத்தின் நெறிகள் கைக்கொள்ளவும்
அவர்கட்காக்கினார் சாதிகள்தேசத்தை
அனேகர் பிரயாசம் அவர்கள்கை வசமாச்சே -கற்த