102 சங்கீதம்
102 சங்கீதம்
வெண்பா
சிறுமையனுபவித்தோன் தீங்கினால்த்தோய்ந்து
கிருபைஎகோவாவின்முன்னே சிறுமையாய்த்
தன்கெஞ்சலூற்றியே தாழ்மையுடன் செய்யும்
விண்ணப்ப மானதிதுவே
1 – வது பங்கு வச.1-12
பைரவி ஆதிதாளம்
ஆ! என்விண்ணப்ப்ங்கேளும்
எகோவாஉம்மண்டைக் கென்கூக்ரல்சேரட்டும்
1 முடுகநெருக்கமுண்டாம் மோசமானநாளில்
முகமறைக்காமல்க்கேளும் வெகு
சடுதியாகஉத்தரவைத் தாருந்ததிநாளெனக்கு – ஆ! என்
2 எனதுநாட்கள்புகைபோல இற்றுப்பரியும் எந்தன்
எலும்புகொள்ளிபோலெரியும் இப்போ
எனதுநெஞ்சம் பூண்டுபோல
இற்றறுந்து உலர்ந்துபோச்சே – ஆ! என்
3 ஆகாரம்நான்புசிக்க அசதியாகமறந்தேன்
அடிக்கடிபெருமூச் செறிந்தேன்எனது
தேகம்வற்றி எலும்போடே
சேர்ந்துலர்ந்து காய்ந்துபோச்சே – ஆ! என்
4 பாழிடத்தில்த்தங்கி நிற்கும் பட்சி ஆந்தையானேன்
பாழ்வனநாரை யானேன் வீட்டுக்
கூரைமேலே தனித்திருக்குங்
கோழிபோல தூக்கமற்றேன் – ஆ! என்
5 என்பகைஞர் அனுதினமும் என்னை நிந்தைபேசி
எனக்குவிரோதமாகி என்மேல்
றெம்பஆண்வம் பேசிக்கொண்டு
என்பேராகச் சாபஞ்சொல்வர் – ஆ! என்
6 உமதுசினத்தாலும் உக்கிரத்தினாலும்
உண் பினையாச்சுதேசாம்பல் எனக்கு
எனதுபானம்கண்ணீ ராச்சே
என்னைத்தாழத் தள் ளினீரே – ஆ! என்
7 எனதுநாள்க்கள்சாய்ந்துபோகும் இறங்கும் நிழல்போலே
ஏகியோடிப்போச்சே இப்போ
எனதுதேகம் பூண்டுபோல
ஈரம்வற்றிக்காய்ந்துபோச்சே – ஆ! என்
8 எகோவா நீரென்றென்றைக்கும் இருக்கிறவராமே
எல்லாத்தலைமுறைக்கும் மகா
மகிமையானஉமது நாமம்
வல்லமையா நின்றிருக்கும் – ஆ! என்
2 – வது பங்கு வச.13-22
காம்போதி ஏகதாளம்
சீயோன்சபைக் கிரக்கஞ்செய்யும் எங்கள்
தெய்வமேநீரதற் கெழுந்தருளும்
(எங்கள்சபைக் கிரக்கஞ்சேய்யும் எங்கள்
எகொவாவேநீரதற் கெழுந்தருளும்
1 நேயதய வதின்மேல்வைக்க நீர்
நியமித்தநற்காலம் வந்ததுவே – சீயோ
2 அதின்கல்லுகள் மேலேயும் தடியார்
ஆசைகள்வைத்ததை நோக்குவார்கள்
அதின்மண்ணுக் காக அவர்கள் மகா
அக்கரையாகவே பரதவிப்பர் – சீயோ
3 எகோவாநம் சீயோன்கட்ட வெளி
(எகோவாநம் சபையைக்கட்ட வெளி
யேறியே மகிமையாய் வந்திடுவார்
சகாய மற்றவர்கள் செய்யுஞ்
ததிமனுவிண்ணப்ப மசட்டைசெய்யார் – சீயோ
4 அவர்கள்மனுவைச் சுவாமிகருத்தாய்க் கேட்கும்
அப்போதுசாதிகள் ராசரெல்லாம்
அவர்நாமம் மகிமைக்குமே உலகில்
அஞ்சியே பயந்துகொண்டிருப்பார்களே – சீயோ
5 இதுகள்பின் சந்ததிக்கே தெரிய
எழுத்தினில்த் தாபக மாகிடுமே
இதுகள்பின் சந்ததிக்கே தெரிய
எழுத்தினில்த் தாபக மாகிடுமே – சீயோ
6 கட்டுண்டபேர் பெருமூச்சையே கற்தர்
காதலிப்பாகவே கேட்டிடுவார்
வெட்டுண்கவே வைத்திருக்கும் மாந்தர்
விடுதலையாகவஞ் செய்திடுவார் – சீயோ
7 அதிவிசேட உன்னதத்தி லிருந்து
அதற்காகக்கண்ணோக்கிப் பார்த்திடுவார்
பதியானபரமண்டல மிருந்தே
பரதாபமாகக் கண் ணோக்கிடுவார் – சீயோ
8 இனிமேலும் பிறந்துவருஞ் சனம்
இதற்காகச் சுவாமியைப் புகழ்ந்திடுமே
இனிமேலும் பிறந்துவருஞ் சனம்
இதற்காகச் சுவாமியைப் புகழ்ந்திடுமே – சீயோ
9 எகொவாவுக் காராதனை செய்ய
இராச்சியங்கள் சனக் கூட்டங்களும்
ஏகப்பெரு வெள்ளங்களாய்க் கூடி
இன்னமுஞ்சேர்ந்திங்கே திரளுவார்கள் – சீயோ
10 அப்போதுசீயோனிலே அவர்
அதிசயநாமத்தைச் சொல்லுவார்கள்
அப்போது எருசலேமில் அவருக்
கனந்தமாய்த்துதியையுஞ் சொல்லுவார்கள் – சீயோ
3 – வது பங்கு வச.23-28
வெண்பா
என்பெலனைக்கற்தர் இடைவெளியில் நின்றொடுக்கி
என்நாட்குறுக இடங்கொடுத்தார் என்சுவாமீ
ஆயுசின்பாதி அளவிலே என்சீவன்
போய்விடச் செய் யாதையுமென் றேன்
ஆனந்த பைரவி ஆதிதாளம்
நீதிராஞ்சுவாமீஉமது நிலையானவருடங்கள்
நிற்குமே தலைமுறைகளாய்
1 ஆதியில்ப்பூமிக்குநீர் அஸ்திவாரமாகச் செய்தீர்
சேதமற்ற உமதுகையின்
செய்கையாமே யிந்தவானம் – நீதி
2 அதுகளோ அழிந்துபோகும்
ஆண்டவர்நீர் நிலைத்துநிற்பீர்
அதுகளெல்லாஞ் சீலைபோல
அழிந்துக்கிப் பழசாய்ப்போகும்
அதுகளைச் சால்வைபோல
அகற்றியே மாற்றிடுவீர்
அப்பொழுதே அதுகளெல்லாம்
அகன்றுமாறிப் போய்விடுமே – நீதி
3 உம்முடையிருப்போ என்றும்
ஒன்றுபோல் நிலையாயிருக்கும்
உம்முடை வருடங்களோ
ஒருக்காலும் முடிவதில்லை
உம்முடை அடியார்மக்கள்
உறுதியாய் நிலைகொள்வார்கள்
உமக்குமுன்னே அவர்கள்வித்து
உறுதியையடைந்திருக்கும் – நீதி