101 சங்கீதம்
101 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
பைரவி ஆதிதாளம்
கிருபை நியாயத்தீர்ப்பைக்
குறித்துப்பாடுவேன் நான்
கீர்த்தனஞ்செய்திடுவேன்சுவாமீ! உம்மைத்
தோத்திரஞ்செய்திடுவேன்
1 உத்தமமாம்வழியில் யுத்தியாக இருப்பேன்
எத்ததிகாலத்திலே சுவாமீயிங்கே
என்னண்டை வந்திடுவீர் – கிரு
2 என்வீட்டுக்குள்நான் உண்மையாக நடப்பேன்
என்கண்முன்பேலியாளின் விசேடத்தை
யானென்றும் வைப்பதில்லை – கிரு
3 வழிவிலகும்பேர்கள் அலுவல்களைப்பகைப்பேன்
ஒழுகாக அதுகளென்னைச் சேர்ந்தென்றைக்கும்
ஒட்டிக்கொள்ளமாட்டாது – கிரு
4 கள்ளநெஞ்சமென்னைத்தள்ளியகலவேணும்
பொல்லாதமாந்தனையோ சுத்தமாகப்
போற்றிநானறிவதில்லை – கிரு
5 தன்னயலான்பேரில் பின்புறணிசொல்லும்
சன்மார்க்கமற்றவனை நானிங்கே
சங்காரஞ்செய்திடுவேன் – கிரு
6 மேட்டிமைக்கண்ணுடனே மேட்டிமைநெஞ்சாக
கோட்டிகொண்டமாந்தனைநான் இங்கேஎன்றும்
கொஞ்சமுமே பொறுக்கமாட்டேன் – கிரு
7 என்னுடனேதங்க என்கண்கள் நாட்டில்
உண்மையானமாந்தர்களை இங்கேஎன்றும்
உற்றறியநோக்கிடுமே – கிரு
8 உத்தமமாம்வழியில்ப் பற்றமாகநடப்போன்
நித்தம்என்னைச் சேவிப்பானே இங்கேஎன்றும்
நித்தம்என்னைச் சேவிப்பானே – கிரு
9 கபட்டுக்காரன்எனது அகத்துக்குள்ளேயிருக்கான்
அபத்தம்சொல்வோன்என்னுடைய கண்கள் முன்னே
அமைந்திங்கே நிலைப்பதில்லை – கிரு
10 ஆகாதோர்கள்யாரும் ஏகோவானின் நகரில்
ஏகமாகவேரற்றிட அதிகாலையில்
இடரடிப்பேன் துன்மார்க்கரை – கிரு