100 சங்கீதம்
100 சங்கீதம்
வராளி ஆதிதாளம்
பூமியின்குடிகாள் எல்லாருஞ்
சாமிக்கென் றார்ப்பரியுங்கள்
1 சாமிக்குமகிழ்ச்சியோ டாராதித் துங்களின்
சத்தங்கெம்பீரமாய்ச் சாமிமுன்வாருங்கள் – பூமி
2 சாமிஏகொவாதான் அவர் தற்பரன்என்றறியுங்கள்
நாமல்லஅவர்தாமே நம்மைத்தம்சுயசன
நாட்டத்தின்மந்தையும் ஆக்கிக்கொண்டனர் – பூமி
3 அவருடைவாசல்களில்த் துதிபுகழ்
அறைந்தங்கே புகுந்திடுங்கள்
அவருக்கேமென்மேலுந் துத்தியம்செய்துகொண்
டவருடைநாமத்தைத் தோத்திரம்பண்ணுங்கள் – பூமி
4 ஏகொவா நல்லவரே அவர்கிருபை
என்றென்றுமிருக்கிறதே
சாகாதஅவருடை உண்மையேதலைமுறை
தத்துவமாகவே முக்கியமாகிடும் – பூமி