10 சங்கீதம்
10 சங்கீதம்
1 வது பங்கு. வச. 1 – 11
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
ஏன்தூ ர நீற்கி றீர் என
தெகோவாவே யேன்மறைகி றீர்
1 மானிடர் துன்பஞ்செய்கிற வெகு
வருத்தமானகாலத்தில் – ஏன்
2 அகந்தையால்துன்மார்க்கனே சிறுமை
யானவனுக்குக் கொடூரமாய்
மிகுந்ததுன்பஞ்செய்கிறான் தங்கள்
வினையிலவரவர் படட்டுமே – ஏன்
3 ஆகாதவன்தன் ஆத்துமங்கொண்ட
ஆசையால் அகந்தையைக் காட்டுவான்
ஏகோவாவைப் பொருளாசைக் காரன்
இகழ்ந்துதன்னையே வாழ்த்துவான் – ஏன்
4 ஆகாதவன்முகநெறிப்பினால் எதுக்கும்
அஞ்சான்விசாரங்கொள்ளானே
ஆகையால் அவனுடை நினைவெல்லாந் தெய்வம்
அவனியில்இல்லை யென்பதே – ஏன்
5 எவ்வேளையுமவன் வழிகளோ வாதைக்
கிடமுண்டாக்கிற வழிகள் தான்
தெய்வஞாயத்தீர்ப்புகள் அவன்
திருட்டிக்கெட்டா உயரமே – ஏன்
6 அவனோதன் எதிராளிக ளான
அனைவரையும் மிகச்சீறுவான்
அவன்தன்னிருதயந்தன்னிலே தான்
அசையே னெனச்சொல்லிக்கொள்வான் – ஏன்
7 தலைமுறைத்துவமாகவே தீங்கு
தனக்கில்லையென்றெண்ணிச் சொல்லுவான்
சலியாதவன் வாய்சற்பனை கபடந்
தந்திரத்தாலும் நிறையுமே – ஏன்
8 அவன் நாக்கடியில்த் தீவினை வெகு
அக்கிரமச் சொல்லுமுலாவுதே
பலமற்றவனைக்கொல்லுவான் கிராமப்
பதிவொழிப்பிடங்க ளானதில் – ஏன்
9 அவன்கண்ஏழையைக் கமுக்கமாய் வெகு
ஆங்காரத்துடனே பார்க்குது
அவன்கெபிச்சிங்கம்போலவே மறைவில்
அடங்கிப்பதிபோட் டிருக்கிறான் – ஏன்
10 சிறுமையானவனைப் பிடித்திட அவன்
தீங்காகப் பதிபோட் டிருக்கிறான்
சிறுமையானவனைத்தன்னுடை வலைக்குள்த்
தீங்காகஇழுத்துப்பிடிக்கிறான் – ஏன்
11 ஏழைகள்கூட்டமானது மிக
இடைஞ்சல்பட்டுத் தவிக்குமே
பாழாயொடுங்குண்டவனுடை இந்தப்
பலத்காரவினையத்துள் விழுந்திடும் – ஏன்
12 அதையோதெய்வம் மறந்தாரே பின்னும்
அவர்தம்முகத்தை மறைத்தாரே
அதையென்றும் பார்க்கவும் மாட்டாரே யென்று
அவன்தன்னிதையத்தில்ச் சொல்லுவான் – ஏன்
2 வது பங்கு. வச. 12 – 18
மோகனம் ரூபகதாளம்
கையை உயர்த்தும் எழுந்திருமே
1 தெய்வமான ஏகோவாவே
சிறுமையோரைமறவாமல் – கையை
2 இதைத் தெய்வம்விசாரிப்ப
தில்லையென்றுதுஷ்டன் தனது
இதையத்தில்ச் சொல்லியும்மை
யேனசட்டைசெய்யவேணும் – கையை
3 இவர்களுக்குப்பதில்செய்ய
யாவையும்பார்த்திருக்கிறீரே
இவர்கள் தீயவினையும்அலட்டும்
ஏதென்றுநீர்நோக்கினீரே – கையை
4 அது உமதுகையிலுண்டு
அனுசாரிநீர் திக்கற்றோர்க்கு
உதவிசெய்யும் உமக்கேளை
ஒப்புவிக்கிறானேதன்னை – கையை
5 ஆகாதவன்புயம்முறித்து
அக்கிரமக்காரனுடை
ஆகாமியம் ஒழியமட்டும்
அதைத்தேடிவிசாரியும் – கையை
6 கற்தரென்றென்றைக்குமுள்ள
காலத்துக்கும் ராசாதானே
கற்தர்தேசம்விட்டேஒழிவர்
கடினப்புறச்சாதியார்கள் – கையை
7 ஏகோவாவே சிறுமைப்பட்டோர்
ஏங்கல்வேண்டல் கெட்டிவீர்
திகைக்குமவர்களிருதயம்
திட்டப்படத்தானும்செய்வீர் – கையை
8 மண்மனுஷன்பெலவந்தம்
வந்துசெய்யத்தொடராமல்
துன்பப்பட்டோன் திக்கற்றவன்
சொல்லைநீதிசெய்யக்கேட்பீர் – கையை