87 சங்கீதம்
87 சங்கீதம் குறள்-குப்பமாய்ப் பாடிவந்த கோராகின் புத்திரர்க்கு ஒப்புவித்த சங்கீதப் பாட்டு பரிசுத்த பற்வதத்தில்ப் பாரஸ்திவாரம் இருக்கவைத்த ஏகொவா யாக்கோ பரண்பதிகள் எல்லாஅரணைவிட இஷ்டசீயோன் மெய்த்தலத்தை நல்லாச் சிநேகிக்கிறார் துசாவந்தி ஆதிதாளம் மாதெய்வ பட்டணமே மகிமைவிசேடங்கள் வகையாக உன்னிடத்தில் வசனிக்கப்பட்டிருக்கும் 1 ஆதிமுத லிசராவேல் அறிந்த எகிப்துத் தேசம் அந்தப்பாபிலோன் நாடுங்கூடவே …