I.கர்த்தருக் கடுத்த கற்பனை நாலே
(1) உலாவுதெய்வமருளியபத்துக் கற்பனைகள்
யாத்.20:1 – 17
ஆசிரியம்
கற்தர் தாமருளிய கற்பனை பத்தே. அதில்
I.கர்த்தருக் கடுத்த கற்பனை நாலே
(யூதவிசேடம்) எரே.23:8
1. எகிப்பத்தா மடிமை இடத்தினின்றுன்னை
யகற்றிரட்சித்த ஆண்டவர் நாமே
(வடதேசத் திருந்தும் மற்றிசர்வேல்ச்சனம்
அடிமைப் பட்டிருந்த அங்கங்கே யிருந்தும்
தந்தேசம் வரவுஞ் சஞ்சரித்திருக்கவும்
சொந்தமா யழைத்த சுவாமியாயிருக்கிற
உனதுகுல தெய்வமாம் ஒருவர் நாமவரே)
உனக்கிங்கோர் சுவாமியும் எனக்கெதிரே வேண்டாம்
(புறச்சாதி விசேடம்) ஏசா.45:22 – 24 ரோம.3:29
(பூமியின் பற்பல புறங்களிலிருந்து நம்
நாமசபை யாயுன்னை நாட்டுமனுத் தெய்வமாம்)
உனதுமெய் யேகோவா ஒருவர் நாமவரே
உனக்கிங்கோர்சுவாமியும் எனக்கெதிரே வேண்டாம்
2. பூமிவான் கடலிலே பொருந்திய சிருட்டியை
சாமியாய்த் தாபித்துத் தாழ்ந்துநீ வணங்காய்
வணங்குவதானால் மகத்துவ மான நாஞ்
சினந்து நம்பகைவர்க்குத்தெண்டனைகள் செய்வோம்
மூன்றுநாள் தலைமுறை முடிவதற்குள்ளாய்
ஈன்றவர்பாவம் இளைஞரைக் கேட்போம்
நட்புடன் நமது கற்பனைச் சொற்களை
ஒப்பியுட் கொண்டிவ் வுலகில்வாழ் மனுசர்க்
காயிரந் தலைமுறை யளவுநாந் தயவை
ஒய்வில்லாத் திரளாயுகந்து காட்டிடுவோம்
3. தற்பரன் பேர்க்குள்ச் சாற்றிடாய் பொய்யை
அப்படிச் செய்வோன் ஆக்கினைக் ககலான்
4. பூமிவான் கடலில்ப் பொருந்திய சிருட்டியை
சாமியறு தினத்தில்ச் சமையச்செய் தப்பால்
ஏழாம்நாள் தனிலே யின்பமா யோய்ந்ததை
வாழ்வுநா ளாறுதல் நாளுமாக்கினரே
ஆறுதல் நாளை யனுசரித் திடநினை
ஆறுநாளடங்கவுன் அலுவலை நடத்து
ஏழாம்நன் நாளோ இறைவராம் ஏகோவா
ஆளுகிற மாந்தர்க் காறுதல் நாளே
உன்னுடனதிலே உன்மகன் மகளூம்
உன்னுடை அடியான் உன்னடிமைப் பெண்ணும்
உன்னுடை மிருகம் உன்னுடை வாசல்
தன்னிலே தரித்துத் தங்குமன்னியனும்
என்னவோர் தொழிலும் எடுத்திட வேண்டாம்
II.மனுசருக்கடுத்த வார்த்தைகளாறே
5. தற்பர னுனக்குத் தந்திடும் புவியிலுன்
அப்பற்கு மம்மைக்கும் அஞ்சிநீ சங்கைசெய்
அப்பொநீ வாழ்ந்ததி லதிகநாளிருப்பாய்
6. அடுத்தவ னுயிரை வதைத்துநீ கொல்லாய்
7. அடுத்தவன் மனைவியினுடற்கற்பை யழிக்காய்
8. அடுத்தவன் பொருளை யெடுத்திடாய் களவாய்
9. அடுத்தவன் மேலே அலைவிதப் பொய்யாய்த்
தடித்தன மாகச் சாட்சிசொல்லாதே
10. அடுத்தவன் வீடு அவனுடைய மனையாள்
அடுத்தவ னடியான் அவனுடை அடியாள்
அடுத்தவன் கழுதை அவனெரு தப்பால்
அடுத்தவனுடைய அடங்கலு மிச்சியாய்