119 சங்கீதம்
119 சங்கீதம்
கலிப்பா
ஆலெவ். 1-வது பங்கு. வச.1-8
1 கற்தருடைய வேதந்தன்னைக்
காத்தேயதின் படிநடக்கும்
உத்தமமாம் வழிக்காரர்
உலகினிலும் பாக்கியர்கள்
2 கற்தருடைய சாட்சிகளைக்
கைக்கொண்டே யவரை முழுப்
பத்திமனதால்த் தேடவகை
பார்ப்போரும் பாக்கியர்கள்
3 அவர்களோ அஞ்ஞாயம்
அவனியிலே செய்வதில்லை
அவர் வழியைப் பிடித்திருந்து
அதிலே தான் நடப்பார்கள்
4 உம்முடைய கட்டளையை
உத்தமமாய்க் காத்துவர
இம்மையிலே நீரெமக்கு
இதமாகச் சொல்லிவைத்தீர்
5 ஆ! உமது பிரமாணத்தை
ஆசையாய்க் காத்துவர
நேர்வகையா யென்வழிகள்
நிலவரமாய் வந்தால் நலம்
6 நானுமது கடவுளை கள்
யாவையுங் கண் ணோக்குகையில்
ஈன்மாய் வெட்கமடைந்
திழிவுபட்டுப் போவதில்லை
7 உம்முடை ஞாயம் நீதி
உற்றுநான் படிப்பதினால்
உம்மைச்செம்மை யிருதயத்தால்
உட்கருத்தாய்ப் போற்றிடுவேன்
8 உம்முடைய பிரமாணம்
ஒவ்வொன்றையுங் காத்து நிற்பேன்
இம்மையிலே யென்னைக் கைவிட்
டிகழாமற் காத்தருளும்
119 r’;fPjk;
பேத். 2-வது பங்கு. வச.9-16
1 வாலிபனோ எதினால்த்தன்
வழியைச் சுத்தம் பண்ணிடுவான்
பாலான உமதுசொல்லின்
படியே தன்னைக் காப்பதினால்
2 என்முழு மெய் மனதாலும்
உம்மை நான் தேடுகிறேன்
உம்முடைய கற்பனைவிட்
டோடிவிடச் செய்யாதையும்
3 உம்மைப் பகைத் தபத்த செயல்
உலகில் நான் செய்யாமல்
உம்முடைசொல் என்மனதில்
உறுதியாய்க் காத்துவைத்தேன்
4 கற்தாவே யென்றென்றைக்கும்
துத்தியத்துக் கேற்றவர்நீர்
கற்றுக்கொடும் எனக்குமது
காதலான பிரமாணத்தை
5 தானுமது வாக்கினுடை
ஞாயங்களை எல்லாமென்
நோன்மையுதட்டால் விரித்துமகா
நுன்னிமையாய்ப் பிடித்து நிற்பேன்
6 உம்முடைய சாட்சிவழி
ஒவ்வொன்றும் எல்லாவித
நன்மைச் சொத்து மென்றுசொல்லி
நான்மகிழ்ச்சி கொள்வேனே
7 உம்முடைய கட்டளையை
உள்மனதால் யோசித்துநான்
உம்முடைய பாதைகளை
உயர்வாய்க் கண் ணோக்குகிறேன்
8 உம்முடைய பிரமாணத்தை
உகந்துமெத்த மனமகிழ்ந்தேன்
உம்முடைய வார்த்தை தன்னை
உகந்தபின் நான் அதைமறக்கேன்
119 r’;fPjk;
கிமெல். 3-வது பங்கு. வச.17-24
1 நான் பிழைத்தே உம்முடைய
நல்வசனங் காத்துநிற்கச்
சாம்பலாம் அடியேற்குத்
தயவுசெய்யுங் கற்தாவே
2 ஆ! உமது வேதத்துள்ள
அதிசயம் நான் பார்ப்பதக்கு
தேவரீர் எனத கண்ணைத்
திறந்தெனக்குக் கிருபைசெய்யும்
3 பூமியில் நான் பரதேசி
பூமியில நான் பரதேசி
சாமி உமது கற்பனையைச்
சற்றும் எனக்கு மறைக்காதையும்
4 தேவனே உமது ஞாயத்
தேட்டத்தினா லென்னுடைய
ஆவியெந்தக் காலத்திலும்
அணுங்கியே பரதவிக்கும்
5 கற்தர்உமது கற்பனையின்
கணிசவழி விட்டுவிட்டுப்
பெத்தரிக்கச் சாப நிந்தை
பிடித்தோரை உதம்பிடுவீர்
6 நிந்தையும் அசட்டையையும்
நீக்கிவிடும் என்னைவிட்டு
சந்தோட மாயுமது
சாட்சிகளைக் கைக்கொள்வேன்
7 பிரபுக்களும் எனைப்பகைத்துப்
பேசிடுவார் உம்முடைய
பிரமாணத்தை உமதடியேன்
பெலக்கவுமே நினைத்திடுவேன்
8 உம்முடைய சாட்சிகளென்
உகந்த செல்வத் தானல்லவோ
இம்மையிலென் ஆலோசனை
இட்டர்களும் போலிருக்கும்
119 r’;fPjk;
டாலெத். 4-வது பங்கு. வச.25-32
1 என்னாவி மண்ணுடனே
இசைந்தொட்டி யிருக்கிறதே
என்னை உம்து சொற்படிக்கே
எழுப்பி உயிர் தத்தருளும்
2 என்வழிகள் இன்னதென்றேன்
எனக்குமறு மொழி கொடுத்தீர்
என்மனதுக் கும்முடைய
இன்பவேதம் போதிவியும்
3 நான் உமது அதிசயங்கள்
யாவையுமே யோசித்திட
நானுமது சாட்சிவழி
யாவையுமே யுணரச்செய்யும்
4 சஞ்சலத்தால் என்னாத்மம்
தண்ணீர்போ லாகிறதே
என்சாமி உமது சொல்லால்
என்னையெடுத்து நிலைநிறுத்தும்
5 கள்ளமார்க்கம் என்னை விட்டு
கழிந்தப்பால் விகிடட்டும்
வள்ளலே உம்முடைய
மறையெனக்குத் தயவுபண்ணும்
6 சத்யவழி தன்னையே நான்
சார்ந்து மிகத் தெரிந்து கொண்டேன்
கற்தர் உமது ஞாயமெந்தன்
கண்முன்னே நிற்கவைத்தேன்
7 தக்கதாம் உம்முடைய
சாட்சிகளொ டொட்டிக் கொண்டேன்
வெட்கத்துக்குள் என்னைச் சற்றும்
விடவேண்டாங் கற்தாவே
8 உம்முடைய கற்பனையில்
ஒடிவழி சென்றிடுவேன்
என்மனதை மெத்தவும் நீர்
எதஷ்டவிரி வாக்கி வைத்தீர்
119 r’;fPjk;
எ. 5-வது பங்கு. வச.33-40
1 கற்தர் உமது பிரமாணக்
காதல்வழி யானதை நான்
முற்றிலுங் கைக் கொள்வதற்கு
முறையாயதைப் போதிவியும்
2 எனக்குணர்ச்சி தந்தருளும்
எனதுமுழு மனதாலும்
இணக்கமா யப்போ உம
தின்பவேதங் காத்து நிற்பேன்
3 உம்முடைய கற்பனைகட்
கொத்தவழி யெனக்குப் பிரியம்
செம்மையா யதிலே யென்னைச்
செல்லச் செய்யுங் கற்தாவே
4 என்னிதையம் பொருளாசைக்
கிசைந்திருக்க வேண்டாமே
என்னைஉமது சாட்சிகளுக்
கிசைந்திருக்க செய்தருளும்
5 என்கண்கள் மாய்கையைப் பார்த்
திடாமல் விலக்கிவிட்டு
தங்கமாம் உமதுவழி
சாரஉயிர் தந்தருளும்
6 உம்மைப் பய பக்தியுடன்
உற்றறிய உமது சொல்லை
உம்முடைய அடியானுக்
குறுதியாக்கி வைத்தருளும்
7 நானஞ்சும் நிந்தையென்னை
நாடாமல் அகன்றிடட்டும்
ஞானபரனே உம்முடைய
ஞாயத்தீர்ப்பு நல்லதுவே
8 உமது நன்மைக் கட்டளைமேல்
உன்வாஞ்சை கொண்டேன் இதோ!
உமது நீதி யாலே எனக்
குயிர்தாருங் கற்தாவே
119 r’;fPjk;
வெள. 6-வது பங்கு. வச.41-48
1 கற்தாவே உம்முடைய
சுத்தவார்த்தைப்படிக் கெனக்கு
எத்தயவும் மீட்பும் உம்மால்
இங்குவந்து சேர்ந் திடட்டும்
2 என்னை நிந்தை சொல்பவனுக்
கெதிருத்தர வப்போ சொல்வேன்
என்ன! அதின லும்முடைய
இன்பவசனம் நம்புகிறேன்
3 மெய்வசனம் மட்டும்என்வாய்
விட்டுவிலக வேண்டாமே
தெய்வமே உமதுஞாயத்
தீர்ப்புகட்குக் காத்திருப்பேன்
4 எப்போதும் என்றென்றைக்கும்
இருக்கும் நித்ய காலமதாய்
தற்பரனே உமதுவேதந்
தன்னை நான் காத்திருப்பேன்
5 தன்னீங்க லாய் நடப்பேன்
தன்னீங்க லாய் நடப்பேன்
என்ன! உமது கட்டளையை
இதினாலே தேடுகிறேன்
6 நாணாமல் வாய்திறந்து
றாசாக்கள் முன்புக்கு நான்
பேணும்உமது சாட்சிகளைப்
பிரியமாய்ப் பேசிடுவேன்
7 நானன்பு வைத்திருக்கும்
நாதருமது கட்டளையை
பேணி மனமகிழ்ச்சியுடன்
பிரியமாய்க் கொண்டாடுவேன்
8 நாதருமது பிரமாணத்தை
நான் சினேகித் தும்முடைய
காதல்கொள்ளுங் கட்டளைக்குக்
கையெடுத்து நின்றிடுவேன்
119 r’;fPjk;
சாயீன் 7-வது பங்கு. வச.49-56
1 அமைதியாய் நான் நம்பிடவே
அமைத்துவைத்த உமதுசொல்லை
உமதடியான் நிமித்தியமாய்
உறுதியாக நினைத்தருளும்
2 அதுதான் என் சிறுமையிலே
ஆறுதலாய் எனக்கிருக்கும்
ததிநாளில் உமது வார்த்தை
தருகின்றதே எனக்குயிரை
3 அகந்தை கொண்டோர் என்னைமிக
ஆகடியஞ் செய்தாலும்
செகந்தனிலே உமது வேதச்
சீர் நிலையைத் தள்ளேனே
4 ஆதிமுத லான உம
தாழ்ந்த ஞாயத் தீர்ப்புகளைத்
தீதற்றதென் றெண்ணி யென்னைத்
தேற்றுகிறேன் கற்தாவே
5 ஆ! உமது வேதம் விட்ட
ஆகாதோர் நிமித்தியமாய்
கோவமாம் எரிச்சலென்னில்க்
குப்பென்னெக் கிளம்பினதே
6 பரதேசியாய் நான் தங்கும்
பாழ்வீட்டில் உம்முடைய
பிரமாணமென் கீதங்களாய்ப்
பிரியங்கொண் டாடிடுவேன்
7 றாக்காலம் உம்முடைய
நல்வேதந் தனை நினைத்து
காக்கிறேன் உமது வேதங்
கைக்கொள்வேன் கற்தாவே
8 நானுமது கட்டளைகள்
யாவையுங் கைக் கொள்வதினால்
ஆனபல னாக இதை
அடியானுங் கண்டானே
119 r’;fPjk;
கேத் 8-வது பங்கு. வச.57-64
1 கர்தர் நீர் என் பங்குமது
காதல்வசனங் காப்பேனென்றேன்
கற்தர் தீரென் பங்குமது
காதல்வசனங் காப்பேனென்றேன்
2 முழுமனதால் உம்முடைய
முகம்நோக்கிக் கெஞ்சுகிறேன்
ஒழுகான உமது வார்த்தைக்
கொவ்வுதலாய் எனக்கிரங்கும்
3 என் வழியைச் சித்தித்துத்கொண்
டென்காலை உம்முடைய
நல்வழியாஞ் சாட்சிதனை
நாடநான் திருப்புகிறேன்
4 கற்தர் உமது கற்பனையைக்
கைக்கொண்டு நடந்திடநான்
சற்றெனினுஞ் சோம்பாமல்ச்
சாக்கிரதை யாயிருப்பேன்
5 துன்மார்க்கர் கூட்டமென்னைத்
தொடர்ந்து கொள்ளை யிட்டாலும்
உம்முடைய வேதத்தை நான்
ஒருக்காலும் மறக்கேனே
6 தேவனுமது நீதிஞாயத்
தீர்ப்புகளின் நிமித்தியமாய்
ஆவலாய் உமைத்துதிக்க
அற்தராத்ரி யெழுந்திருப்பேன்
7 கற்தருமக்குப் பயந்துமது
கட்டளையைக் கைக்கொள்கிற
அத்தனையாம் மனிதருக்கும்
அடியேன் நான் ஒரு தோழன்
8 பூமியுமது கிருபையினால்ப்
பூரணமே யடைந்திருக்கும்
சாமிஉமது பிரமாணந்
தனையெனக்குக் கற்றுக்கொடும்
119 r’;fPjk;
கேத் 9-வது பங்கு. வச.65-72
1 உம்முடைய அடியானை
உமது வார்த்தைப் படிக்குமிகச்
செம்மையாய் நடத்திவந்தீர்
தெய்வமாம் என்சுவாமீ
2 நல்லயுத்தி நிதானிப்பும்
நல்லறிவும் எனக்கருளும்
வெல்லும்உமது கற்பனைமேல்
விசுவாசம் வைத்தேனே
3 தாழ்த்த்ப்படுமுன் நானோவழி
தப்பினவன் உம்முடைய
வார்த்தைதன்னை யிப்போநான்
வரைகடவா ததில் நடப்பேன்
4 நல்லவரும் நன்மைசெய்யும்
நாதரும் நீ ரும்முடைய
சொல்ப்பிரமாண மெனக்கு நன்றாய்த்
தொனிக்கக் கற்றுத் தந்தருளும்
5 அகந்தைக்காரர் என்மேலே
அநியாயப் பொய்பிணைத்தும்
உகந்துமது கட்டளையை
யுட்கொள்வேன் முழுமனதால்
6 நெஞ்சங்கொழுப் பேறினாப்போல்
நெட்டூரம் அவர்கள் நடை
மிஞ்சுமன மகிழ்ச்சி யுமது
வேதத்தில் நான் பூண்டேனே
7 நானுமது பிரமாணத்தை
நன்றாகப் பிடிப்பதற்கு
நான்சிறுமை யாகினது
நலமாச்சு தெனக்கு இங்கே
8 அநேக ஆயிரமாம்
அபரஞ்சி வெள்ளியிலும்
வினாவான உமதுவாக்கின்
வேதமே யெனக்கு நலம்
119 r’;fPjk;
யோட் 10-வது பங்கு. வச.73-80
1 உம்முடைய கற்பனையை
உணர்வாய்க் கைக் கொண்டநிற்க
உம்கைகள் என்னை நன்றாய்
உருப்பிடித்துச் செய்ததுண்டே
2 உமதுசொல்நான் நம்புவதால்
உமக்குப் பயந் திருப்பவர்கள்
அமைதியாய் என்னைக் கண்டு
ஆனந்தத்தை யடைவார்கள்
3 தேவனே உமதுஞாயத்
தீர்ப்புகளோ நீதியென்றும்
தேவரீர் எனைச்சிறுமை
செய்த்துண்மை யென்றுங் கண்டேன்
4 உமதடியான் பெற்றுக்கொண்ட
உமதுவாக்கின் பிரகாரம்
உமதுகிருபை இங்கெனக்கு
உண்டாக்கட்டுந் தேற்றரவை
5 நான் பிழைக்க உமதிரக்கம்
நன்றாயென்மேல் வந்திடட்டும்
ஏனெனில் உமதுவேதம்
என்னுடைய மனமகிழ்ச்சி
6 அகந்தையுள்ளோர் என்னைப்பொய்யால்
அமுக்கினதால் வெட்கிடட்டும்
மகிழ்ந்துமது கட்டளையென்
மனயோசிப் பாக்கி நிற்பேன்
7 சாமிஉமக் கஞ்சியுமது
சாட்சிகளை யறிந்திருப்போர்
சேமமென்றென் னண்டையிலே
திரும்பியே ஒதுங்கிடட்டும்
8 இம்மையில் நான் வெட்கமடைந்
திருக்காமல் என்னிதையம்
உம்முடைய பிரமாணத்தில்
உத்தமமாய் நின்றிடட்டும்
119 r’;fPjk;
கப் 11-வது பங்கு. வச.81-88
1 என்னாவி தவித்துமது
இரட்சிப்புக்குத் தொய்ந்திருக்கும்
மென்மேலும் உமது சொல்லை
மேவியே காத்திருப்பேன்
2 எப்போ என்னைத் தேற்றுவீரோ
என்றுமது வார்த்தையின்மேல்
கற்பாக நோக்கியெந்தன்
கண்பூத்துப் போகிறதே
3 அவதியாய்ப் புகைசெறுமி
அடர்ந்த துருத்தி போலானேன்
தவமாயுமது பிரமாணம்
சதாகாலம் மறக்கேனே
4 எம்முடைய அடியானிங்
குயிர் வாழ்நாள் எம்மாத்ரம்
துன்பமெனக்குச் செய்வோரைத்
தொலைத்துஞாயங் கேள்ப்பதெப்போ
5 உமதுஞாயப் பிரமாணத்துக்
கொவ்வாமை யானெக்குக்
குமைதலாய் அகந்தையுள்ளோர்
குழிகளையே வெட்டினார்கள்
6 கனப்பரனே உம்முடைய
கற்பனைகள் யாவுமுண்மை
எனைப்பொய்யால்த் துன்பஞ்செய்வர்
எனக்குநீர் உதவிசெய்யும்
7 பூமிவிட்டு என்னையவர்கள்
போக்கமிகக் கிட்டினர்கள்
சாமிஉமது கட்டளையைத்
தவற நான் விட்டதில்லை
8 உமதுகிருபைப் படியே யெனக்
குயிர்தாரும் அப்போது
உமதுவாக்கின் சாட்சியைநான்
உறுதியாய்க் காத்து நிற்பேன்
119 r’;fPjk;
லாமேட். 12-வது பங்கு. வச.89-96
1 எகோவாவே உமதுவார்த்தை
என்றென்றும் நித்தம்நித்தம்
மகாமேல் உயரங்களில்
வல்லமையாய் நின்றிருக்கும்
2 சாமிஉமது சத்தியந்தான்
தலைமுறைகளாக நிற்கும்
பூமியை நீர் உறுதிசெய்தீர்
பூமியதினால் நின்றிடுமே
3 திரமான உமதுஞாயத்
தீர்ப்புகளை நிறைவேற்ற
இருக்கும் அதுகள் இன்றுமட்டும்
எல்லாம் உமக்குப் பணிவு செய்யும்
4 உமதுவேதம் எனக்குமன
வூர்ச்சிதமல் லாதிருந்தால்
அவதியாமென் சிறுமையிலே
அப்போதே அழிந்திருப்பேன்
5 உமது நல்ல கட்டளையால்
உயிரெனக்குத் தந்தீரே
உமக்காக அதுகளை நான்
ஒரு நாளு மறக்கேனே
6 உமது நல்ல கட்டளையை
உண்மையாய்த் தேடுவதால்
உமதுசொந்தமானேன் என்னை
உருக்கமாய் ரட்சியுமே
7 ஆகாத மாந்தர் என்னை
அழிக்கவே காத்திருந்தும்
ஏகோவா உமது சாட்சி
யாவையும் நன் நினைத்திருப்பேன்
8 சம்பூரண எல்லையான
சமஸ்தமும் நான் கண்டேனே
றெம்பவிரிவே உம்முடைய
நேர்மையாங் கற்பனைகள்
119 r’;fPjk;
மேம். 13-வது பங்கு. வச.97-104
1 எத்தனைக்கோ உமதுவேதம்
எனக்கின்ப மாகி நிற்கும்
நித்தம்நித்தம் அது எனக்கு
புத்தியிலே யோடி வரும்
2 என்னோடே உம்முடைய
நன்மைச்சொற்கள் தங்குவதால்
என்பகைஞர்க் கதனப்பற்றாய்
எனக்கதிக ஞானமுண்டே
3 எனக்குமது சாட்சிகளே
இஷ்டயோசிப் பானதினால்
எனக்கதிகப் புத்தியுண்டு
என்குருக்கள் மாரைவிட
4 காப்பான உம்முடைய
கற்பனை கைக் கொள்வதினால்
மூப்பான மாந்தரிலும்
முக்கியமாம் உணர்வுபெற்றேன்
5 கற்தருமது வசனந்தன்னைக்
கைக்கொண்டு நடப்பதற்கு
எத்தான பாதைக்கெல்லாம்
என் காலை விலக்குகிறேன்
6 ஆண்டவரே நீரெனக்கு
அறிவுதன்னைப் போதிப்பதால்
வேண்டும் உமது ஞாயங்களை
விட்டுவிலக மாட்டேனே
7 எவ்வளவின்பம் என்ருசிக்கு
எகோவாவே உமதுவார்த்தை
செவ்வையது என் வாய்க்குத்
தேனைவிட இன்பம் இன்பம்
8 உம்முடைய கட்டளையால்
உணர்வடைந்து கொண்டேன் நான்
இம்மையிலே கள்ளவழி
யாவையும் நான் பகைத்திடுவேன்
119 r’;fPjk;
நூன் 14-வது பங்கு. வச.105-112
1 என் பார்வைக் குமது வார்த்தை
ஏற்றவெளிச்ச மாகினதே
என்காலுக் கதுவோ என்றும்
இசைந்த தீப மாகினதே
2 உமதுநீதி ஞாயங்களுக்
கொத்தபடி நடப்பேனென்றே
அமைதியாய் ஆணையிட்டேன்
அந்தப்படி நடந்திடுவேன்
3 எனக்கு நீர் வாக்களித்த
இன்பவசனப் பிரகாரம்
எனக்குயிரைத் தந்தருளும்
இடுக்கமிக அடைந்தேனே
4 மனப்பூர்வ மாக எனது
வாய்ப்பெலியை யேற்றுமது
இணைப்பான ஞாயங்களை
எனக்குக் கற்றுத் தந்தருளும்
5 என் சீவன் எப்போதும்
எனதுகையி லிருந்தாலும்
வின்னமா யுமமுடைய
வேதத்தையான் மறக்கேனே
6 துன்மார்க்கர் கண்ணிகளைத்
தொடர்ந்தெனக்கு வைத்தாலும்
உம்முடைய கட்டளையை
யொதுக்கிவழி தப்பி நில்லேன்
7 உமதுசாட்சி என்னிதைய
உள்மகிழ்ச்சி யாகினதால்
அமர்ந்த நித்ய சுதந்தரமென்
றதைப் பிடித்துக் கொண்டேனே
8 என்றும் உமது பிரமாணம்
யாவுஞ்சரி யாய் முடிக்க
என்றுமென திருதயத்தை
இதற்கேநான் சாய்த்துவிட்டேன்
119 r’;fPjk;
ஸாமேக். 15-வது பங்கு. வச.113-120
1 வீண் சிந்தை பகைத்துமது
வேதத்தையே நேசிக்கிறேன்
வீண் சிந்தை பகைத்துமது
வேதத்தையே நேசிக்கிறேன்
2 என்னுடைய கேடயமும்
என்மறைவும் நீர்தாமே
எந்நாளும் உமது சொல்லை
இன்பமாகக் காத்துநிற்பேன்
3 என்தேவன் கற்பனையை
யான்பிடித்துக் கொள்வதினால்
என்னைவிட்டப் பால்ப் போங்கள்
இடும்பராம் மாந்தர்களை
4 என்பிழைப்பை யுமதுவர்த்தைக்
கேற்றபடி யாகச் செய்யும்
நம்பிக்கை யழியாதென்னை
நாணத்துக்குள்ப் படுத்தாதையும்
5 எனைத்தாங்கும் அப்போது
இரட்சிக்கப் படுவேன் என்றும்
எனக்குமது பிரமாணம்
ஏற்றமன மகிழ்ச்சியுமாம்
6 உம்முடைய பிரமாண
வொழுங்கைவிடுவோர் ரெத்தமிதிபட்
டும்மாலழிவர் அவர்கள் கபடம்
ஒக்கவெறும் பொய்தானே
7 களிம்புபோல் புவியிலுள்ள
காதகர்க ளெல்லாரையும்
அழிந்தகலச் செய்வீருமது
சாட்சிகளி லன்புகூர்வேன்
8 உம்மால் வருந்திகிலாலென்
உடம்போடிச் சிலுக்கிறதே
உம்முடைய ஞாயத்தீர்ப்புக்
கொடுங்கியச்ச மாகுகிறேன்
119 r’;fPjk;
ஆயின். 16-வது பங்கு. வச.121-128
1 கற்தாவே நீதிஞாயங்
கருத்தாக நடப்பிவிப்பேன்
சத்துருக்கள் கையிலென்னைத்
தள்ளிவிட வேண்டாமே
2 எனக்கு நன்மை யுண்டாக நீ
ரேற்பட்டுக் கொண்டு நில்லும்
பிணக்கந்தைக் காரரென்னைப்
பிடித்தொடுக்க ஒட்டாதிரும்
3 நிவிர்த்தியா மீட்புமது
நீதிவார்த்தைக் காகவுமே
கவர்ச்சியாய்க் காத்திருந்தென்
கண்பூத்துப் போகிறதே
4 உம்முடைய அடியானை
உமதுள்ளன்புப் படி நடத்தி
உம்முடைய பிரமாணம் நான்
உட்கொள்ளக் கற்றுக் கொடும்
5 உம்முடைய சாட்சியை நான்
உத்தமமா யறிவதற்கு
உம்முடைய அடிமையென்னை
உணர்வுள்ளோ னாக்கி விடும்
6 நீதி செய்யக் கற்தருக்கு
வேளைவந்து நேர்ந்ததுவே
பேதகமா யுமதுஞாயப்
பிரமாண முறித்தார்கள்
7 அதைக்கண்ட நானோபொன்
அபரஞ்சி தனைப் பார்க்க
கதிக்கவே உம்முடைய
கற்பனையை நேசிக்கிறேன்
8 உம்முடைய கட்டளைகள்
ஒவ்வொன்றும் முற்றிலுமே
செம்மையென்று தீர்த்துச்சகல
திருட்டுவழியும் பகைத்திடுவேன்
119 r’;fPjk;
பே. 17-வது பங்கு. வச.129-136
1 உம்முடைய சாட்சிகளோ
ஒப்பில்லா அதிசயந்தான்
என் மனது அதுகளையே
இட்டமாய்க் கைக்கொள்ளும்
2 நாதருமது வார்த்தைகளின்
நட்புவெளிச்சந் தந்திடுமே
பேதைகட்கும் உணர்வையது
பெலக்கவே யுண்டாக்கும்
3 உம்முடைய கற்பனைக்கென்
உள்ளத்தின் வாஞ்சையினால்
செம்மையாயென் வாய்திறந்து
தேட்டமா யேங்குகிறேன்
4 உமது நாம நேசர்களுக்
கொத்தவழக்கம் போலநீர்
உமதுநோக்கம் என்மேலே
உண்டாக்கி யெனக்கிரங்கும்
5 என்காலடியை உம்முடைய
இன்பவார்த்தை தனில் நிறுத்தி
என்னிடத்தோ ரஞ் ஞாயமும்
இருந்தாள ஒட்டாதையும்
6 வேந்தனுமது கட்டளையை
மிகக்காக்க என்னையிங்கே
மாந்தரிடுக்க வல்லிடிக்கு
மறைத்துவிடுவித் தாண்டருளும்
7 உம்முடைய அடியான்மேல்
உமதுமுக ஓளிவீசி
உம்முடைய பிரமாணத்தை
உட்கொள்ளடக் கற்றிக்கொடும்
8 கற்தருமது வேதந்தன்னைக்
காத்து நட வார்களென்று
மெத்தவுஎன் கண்ணினின்று
வெள்ளக்கால் பாய்கிறதே
119 r’;fPjk;
த்சாடே. 18-வது பங்கு. வச.137-144
1 நன்மையின் பரனே நீர்
நடுவான நீதிபரர்
உம்முடைய ஞாயத்தீர்ப்புஞ்
செம்மையாக இருக்கிறதே
2 உமதுசாட்சி நீதியுண்மைக்
கொத்தபடி நான் நடக்க
எனதுகற்தர் நீர்மிகவும்
ஏற்றபடி சொல்லிவைத்தீர்
3 என்பகைஞர் உமதுசொல்லை
இகழ்ந்து மறந்தார்களென்று
என்பத்தி வைராக்கியம்
என்னைமிக அருக்கிறதே
4 உம்முடைய வசனமெத்த
உலையில்ப் புட மாகினதே
உம்முடைய அடியானதை
உட்கருத்தாய் நேசிக்கிறேன்
5 நான் சிறியோன் மற்றோரால்
நாடப்படா திருக்கிறவன்
ஆனாலுமது கட்டளையை
அனுவாகிலு மறக்கேன் நான்
6 உமதுநீதி நித்ய நீதி
உமதுவேதஞ் சத்தியமே
உமதுநீதி நித்ய நீதி
உமதுவேதஞ் சத்தியமே
7 நெருக்கத்தோ டிடுக்கமுமே
நேரிட்டென்னைப் பிடித்திருந்தும்
பெருக்கஉமது கற்பனையென்
பேரின்ப மனமகிழ்ச்சி
8 உம்முடைய சாட்சிகளின்
உத்தமமோ என்றும் நிற்கும்
உம்மில் நான் பிழைக்க என்னை
உணர்வுள்ளோ னாக்கிவிடும்
119 r’;fPjk;
கோப். 19-வது பங்கு. வச.145-152
1 றெம்யமனதால் கூவியே நான்
நிற்கிறேனென் செபங்கேளும்
உம்முடைய பிரமாணத்தை
உட்கருத்தாய்க் கைக்கொள்வேன்
2 உம்முடைய சாட்சியை நான்
உட்கருத்தாய்க் காப்பதற்கு
உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்
உதவிசெய்து எனைரட்சியும்
3 அதிகாலை வேளை வந்து
அபையச்சத்த மிட்டு நிற்பேன்
ததியிலுமது வசனத்துக்குச்
சடையாமல்க் காத்து நிற்பேன்
4 ஆமுமது வசனந்தன்னை
ஆலோசிக்க எனதுகண்கள்
சாமங்களுக்கு முன்னாகச்
சந்தோஷ மாக விழிக்கும்
5 உமது கிருபைப் படிக்கெனது
உதட்டின் சத்தங் கேட்டருளும்
உமதுஞாயப் படிக் கெனக்கு
உயிர் தாருங் கற்தாவே
6 தீவினையைப் பின்பற்றுவோர்
சேர்ந்துகிட்டி வந்தார்கள்
ஆ! உமது வேதத்துக்கோ
அகன்று தூரமானார்கள்
7 சமீபமா யிருக்கிறீர் நீர்
சாமியாம் எகோவாவே
சமஸ்தஉமது கற்பனையும்
சத்தியமா யிருக்கிறதே
8 என்றும் உமது சாட்சி நிற்க
இட்டீர் அஸ்தி வாரமென
நன்றாக அதினாலே
நானறிந்தேன் பூர்வமுதல்
119 r’;fPjk;
ரேஷ். 20-வது பங்கு. வச.153-160
1 என் சிறுமை தனைப் பார்த்து
என்னை விடுவித் தாண்டருளும்
என்ன! அதினா லும்முடைய
இன்பவேதம் மறக்கேனே
2 என்வழக்கை வழக்காடி
என்னை விடுவித் தாண்டருளும்
என்னை உமது சொற்படிக்கே
எழுப்பி உயிர் தந்தருளும்
3 துன்மார்க்கர் ரட்சிப்புக்குத்
தூரமா யொதுங்கினர்கள்
உம்முடைய பிரமாணத்தை
உணர்ந்து தேட மாட்டார்கள்
4 உமதிரக்கம் மிகுதியல்லோ
உமது ஞாயப் படிக்கெனக்கு
உமதுஞாயப் படிக்கெனக்கு
உயிர்தாருங் கற்தாவே
5 இம்மிசைப் படுத்தி யென்னை
இடுக்கஙஞ்செய்வோர் மிகுத்திருந்தும்
உம்முடைய சாட்சிவிட்டு
ஒருநாளும் நான்விலகேன்
6 சுவாமி உமது சொல்க்காக்காத்
துரோகிகளைக் காண்கையில் நான்
அவதிநோயை வெறுத்தாப்போல்
அவர்களையே அருவருப்பேன்
7 உம்முடைய கட்டளையில்
உள்ளன்பு வைத்தேன் எனக்
கும்முடைய கிருபைப்படிக்
குயிர்தாருங் கற்தாவே
8 உமது சொல்லோ முழுவதும்
உத்தமமாஞ் சத்தியமே
உமதுநீதி ஞாயமெல்லாம்
உறுதியாய் என்றும் நிற்கும்
119 r’;fPjk;
ரேஷ். 21-வது பங்கு. வச.161-168
1 பிரபுக்கள் எனக்கிடுக்கம்
பிசகாகச் செய்தாலும்
பரனுமது வசனத்துக்கே
பயந்திருக்கும் என்னிதையம்
2 வெகுகொள்ளை யுடைமைதன்னை
வெளியிற்கண்டு பிடித்ததுபோல்
எகோவாவே உமதுசொல்மேல்
எக்களிப்பா யிருக்கிறேன் நான்
3 பொய்யைப்பகைத் தருவருத்துப்
போற்றுவேன் உமதுவேதம்
பொய்யைப் பகைத்தருவருத்துப்
போற்றுவேன் உமதுவேதம்
4 உமது நீதி ஞாயத்துக்காய்
ஒரு நாளி லேழுதரம்
உமதுதுதி சொல்லி நிற்பேன்
உமதுதுதி சொல்லி நிற்பேன்
5 தகுந்தஉமது வேதந்தன்னைச்
சார்ந்தபற்ற முள்ளோர்க்கு
மிகுந்த சமா தானமுண்டு
மிரளலா மிடரலில்லை
6 கற்தாவே உம்மிடத்தில்க்
காத்திருப்பேன் ரெட்சிப்புக்கு
கற்தாவே உம்முடைய
கற்பனையின் படியே செய்வேன்
7 உம்முடைய சாட்சிகளை
உட்கொள்ளும் எனது நெஞ்சம்
செம்மையா யதுகளை நான்
சிநேகித்து மிருக்கிறேனே
8 உமதுசாட்சி கட்டளைக்கு
ஒத்தபடி நடந்துகொள்வேன்
உமதுமுன்னே என்வழிகள்
ஒவ்வொன்று மிருக்கிறதே
119 r’;fPjk;
தெள. 22-வது பங்கு. வச.169-176
1 உமதுமுன் என் கூக்குரல்கள்
ஒடிவரட்டுங் கற்தாவே
உமதுவார்த்தைப் படிக்கு என்னை
உணர்வுள்ளோ னாக்கிவிடும்
2 உமதுமுன் என் விண்ணப்பமே
ஒடிவந்து சேர்ந்திடட்டும்
உமதுவார்த்தைப் படியே யென்னை
உயர்த்தி விடுவித் தாண்டருளும்
3 எனக்குமது பிரமாணம் நீர்
இசைவாய்க் கற்றுத் தருவதாலென்
உதட்டால் உமது துதியோ இந்த
உலகத்தினில் வெளிப்படுமே
4 உம்முடைய கற்பனைக
ளொக்க நீதி யானதினால்
உம்முடை சொல் லென்னாவு
உத்தமமாய்ப் பகர்ந்திடுமே
5 உமது நல்ல கட்டளை நான்
உற்றுத் தெரிந்து கொண்டதினால்
உமதுகரம் எனக்கு நல்ல
உதவியாய் நின்றிடட்டும்
6 கற்தருமது ரெட்சிப்பின்மேல்க்
காதல்கொண்டேன் ஆசைகொண்டேன்
கற்தருமது வேதமெனது
காதலான மனமகிழ்ச்சி
7 உமதுதுதிக்கெனது நெஞ்சம்
உயிரடைந்து பிழைத்திடட்டும்
உமது ஞாயத் தீர்ப்பெனக்கு
ஒத்தாசை யாகிடட்டும்
8 அப்பனுமது கட்டளையை
அயர்க்காமல் நானிருப்பதினால்
தப்பிப்போன ஆடுபோல
தவித்தஎன்னை நீர் தேடும்