145 சங்கீதம்
145 சங்கீதம்
அகவல்:தாவீதுபாடுந் தேவதுத்தியமே
1 – வது பங்கு வச.1-9
காப்பி ஆதிதாளம்
ஒரே றாசனாம்என்தெய்வமே உம்மை
நாட்டமாய் உயர்த்திடுவேன் உமது
நேசநாமமெந்த வேளையும்
நித்தமும் போற்றிடுவேன்
1 ஆசையாக எந்த நாள்
ஆண்டுவேளையும் – ஒரே
2 எகோவா வாந்தெய்வமே என்றும்
எங்கெங்கும் பெரியவரே அவர்க்கு
மகா தோத்திரமே எவரும்
வணங்கிச் செய்வார்களே
எகோவா மகத்துவம் அளவுக்
கிவ்வளவென்றில்லை – ஒரே
3 தலைமுறை தத்துவமாய் எங்கள்
சாமீ உம்முடையகையின்
பலமாஞ் செய்கைகளை மனிதர்
பார்த்தெங்கும் புகழுவார்கள்
நிலையாம் உம்முடைகையின்
வலுமை சொல்வார்கள் – ஒரே
4 எகோவா மகத்துவத்துப் பெருமை
எங்கெங்குஞ் சொல்லிடுவேன் நமது
எகோவா ஆச்சரியச்செயலை
இன்பமாய்ப் பேசிடுவேன்
எகோவா மகத்துவம்விரித்
தெனது நாவுரைக்கும் – ஒரே
5 கற்தரின் பயங்கரத்துப் பெலத்தைக்
கருத்தாய்ச் சொல்லுவார்கள் நமது
கற்தரின் கிருபைப்புகழ் நினைத்துக்
காட்டிக் கூறுவார்கள்
கற்தரின் நீதியை மகிழ்ந்து
காட்டிச்சொல்லுவார்கள் – ஒரே
6 மிகுந்திடும் பொறுமைதய விரக்கம்
உருக்கமும் யாவர்மேலும் உள்ள
தகுந்தநல் எகோவாவைச் சகல
சிருட்டியுந் துதித்திடுமே
செகத்திலுள்ளதான எதுக்குந்
தெய்வத்தி னிரக்கமுண்டு – ஒரே
145 r’;fPjk;
2 – வது பங்கு வச.10-14
காம்போதி ரூபகதாளம்
எகோவாவின் விசேடத்தோர் இங்
கென்றென்றைக்கும்
எகோவாவைத் தோத்திரஞ் செய்யுங்கள்
1 எகோவாவின் ராச்சியத்தையும் வல்லமையையும்
மகிமையையும் மனிதர்க்கெண்பித்தே -எகோ
2 எகோவாவின் ராச்சியத்தையும் வல்லமையையும்
மகிமைவளத்தைத் தானுஞ் சொல்லியே -எகோ
3 எகோவாவின் ராச்யபாரமோ சதாகாலமும்
தகுமைராச்யமென்று விவரித்தே -எகோ
4 எகோவாவின் ஆளுகையிங்கேயெத்தலைமுறைக்கும்
வகையாக உள்ள தென்றோதி -எகோ
5 விழுகிறமாந்தர் யாரையும் ஏகோவா தாங்கி
முழுமையுங் காப்பாரென்றோதி -எகோ
6 மடங்கியே யொடுங்கு மாந்தர்கள் யாரையுந்தூக்கி
திடங்கொள்ளச் செய்வா ரென்றோதி -எகோ
145 r’;fPjk;
3 – வது பங்கு வச.15-16
எதுகுலகாம்போதி ஏகதாளம்
றாசனாம் என்தெய்வமே உம்மை
நாவினா லுயர்த்துவேனே
1 ஆசையாய் உம்மை நோக்கும் எல்லா
ஆத்துமம் சீவன் கண்ணும் -றாச
2 ஏற்றநல் வேளைபார்த்துத் தேவரீர்
எதுக்கும் நல் வகையைச் செய்து
சோற்றையுந் தீனியையும் பார்த்து
தொகையாகக் கொடுத்துக்காப்பீர் -றாச
3 உம்முடை கையைநீட்டி சுவாசம்
உள்ளதாம் பிராணியாவும்
றெம்யமாகத் திருத்தியாகி நன்றாய்
நிறைந்திடச் செய்குவீரே -றாச
145 r’;fPjk;
4 – வது பங்கு வச.17-21
சங்கராபரணம் ஆதிதாளம்
எகோவாவின் துதியை என்வாய்சொல்வதாக
எகோவாதனி விசேடநாமம் என்றென்றைக்கும் புகழே
1 ஏகோவாதம் வழிகள் எல்லாத்திலும் நீதியர்
ஏகோவாதம் செயல்களிலெல்லாங்கிருபையுள்ளவர்
2 தம்மைநோக்கிக் கூப்பிடுஞ் சகலமான பேர்க்கும்
உண்மையாகக்கூப்பிடும் ஒவ்வொருதர்க்குஞ் சமீபமாம்
3 தமக்குப்பயந்து நடப்போர் தாபந்தத்தைத் தீர்த்துத்
தமக்குச்சொன்னசெபங்கேட்டுத்தாங்கிரட்சிப்பாரே
4 தம்மிலன்பு கூர்வோர் சகலபேரையுங் காத்துத்
துன்மார்க்கர்கள் யாவரையுந்தொலைத்தழிப்பாரே