137 சங்கீதம்
137 சங்கீதம்
நாதநாமக் கிரியை சாபுதாளம்
அழுதுகொண்டோமே சீயோனை நினைந்
தழுதுகொண்டோமே
1 அழிபாபே லாறுகள்
அண்டையி லுளுக்கார்ந்து -அழுது
2 எங்கட்டகுச் சீயோனின் பாட்டினில்ச் சிலதிப்போ
இசைவாகப் பாடுங்கள் என்றங்கே யெங்களைப்
பங்க மாஞ் சிறைகளும் பாழ்வீடு மாக்கினோர்
மங்களப் பாடல்கள்வசனிக்கச் சொன்னார்கள் – அழுது
3 அதுக்குள்ளே நிற்கின்ற அலரிமே லெங்களின்
துதிச்சுரமண்டலந் தூக்கிவைத் திருந்திட்டோம்
புதிசாக நாங்களிந்தப் புறதேசத் தெகோவாவின்
புகழ்பாட்டைப் பாடியே போற்றுவ தெப்படி – அழுது
4 எருசலேம்! உண்மையான் மறந்திட்டால் என்வலது
கரந்தானும் என்னையும் மறந்திடலாகுமே
எருசலேம் எனக்கதிக மகிழ்ச்சியாயிருக்குதென்
றெண்ணி நான் பேசாட்டால் என்வாயண்ணம் ஒட்டும் – அழுது
5 அதைத் திறப்பாக்குங்கள் அஸ்திவார மட்டுக்கும்
அதைத்திறப் பாக்கியே அழிங்களென் றறைந்திடும்
மதத்திட்ட ஏதோம் மக்கள் வம்பையிங்கெருசலேம்
வாழ்வுநாள நினைந்திடும் மகிமையின் எகொவாவே – அழுது
6 பாழ்பாபேல் மகளேயுன் பதிலுனக் குன்செயலின்
படியேசெய் திடுபவன் பாக்கிய வாளன்தான்
வாழுமுன் மக்களை மலையின்மேல் மோதியுயிர்
வாங்கிட நொறுக்குவோன் மகாபாக்ய வாளனே – அழுது