115 சங்கீதம்
115 சங்கீதம் ;
1 – வது பங்கு வச.1-8
பயிரவி ஆதிதாளம்
மகிமை பேர் உமக்கே ஆவதாக
1 எகோவா உம்முடைகிருபை சத்யமாம்
இரண்டினிமித்தமுமே
மகிமை உம்முடை நாமத்துக் காகுமே
மாந்தராம் எங்கட் கல்ல – மகிமை
2 எங்கள் தெய்வமாம் ஏகோவா நீரிப்போ
யெங்கே யெங்கே யென்று
பங்கமுடன் புறச் சாதிகள் சொல்லியே
பரிகாசம் பண்ணுவானேன் – மகிமை
3 நம்முடை தெய்வமோ பரமண்டலங்களில்
நட்புடன் வாசஞ்செய்வார்
தம்முடை சித்தமாம் யாவையுந் திட்டமாய்
சரியாய் நடத்திடுவார் – மகிமை
4 அவர்களின் விக்கரகம் மனிதர் கைகளின்
அழிம்பு வேலை தானே
சவம்போல்ச் செய்திட்ட வெள்ளியும் பொன்னுமாந்
தகடடிவேலைதானே – மகிமை
5 கண்களால்க் காணாது வாயினால்ப் பேசாது
காதினால்க் கேளாதே
தங்களின் மூக்கினால் முகர்ந்திட மாட்டாது
தடவாது கைகளினால் – மகிமை
6 தங்களின் தொண்டையால்ச் சத்தமுங் காட்டாது
தம்காலால் நடந்திடாது
தங்களின் தொண்டையால்ச் சத்தமுங் காட்டாது
தம்காலால் நடந்திடாது – மகிமை
7 அதுகளைப் பண்ணுவோர் அதுகளை நம்புவோர்
அனைவர்க்குந் தீர்ந்ததென்ன
அதுகளைப் போலவே அவர்களுஞ் சவம்போல்
அபத்தமாவது தான் – மகிமை1
2 – வது பங்கு வச.9-18
ஆனந்தபயிரவி ஆதிதாளம்
உங்களுக் கெகோவாதாமே
ஒத்தாசை கேடயந்தான்
ஒருவராம் அவரை நம்புங்கள்
1 சங்கையின் இசர்வேல் ஆறோன்
சாமிக்குப் பயந்தோர்களின்
வங்கிச மென்றுவந்த
மானிடரின் புத்திரரே – உங்க
2 கற்தரின் ஆசீர்வாதம்
காதலும் நமதுமேல்த்தான்
கொத்தாக இசர்வேல்ஆறோன்
குலத்துக்கு வளத்தைத் தருவார்
நித்தமும் அவர்க்குப் பயந்த
நீசர்கள் பெரியோருக்கும்
வற்தனை யாசீர்வாதம்
வரமாகக் கொடுத்தருள்வார் – உங்க
3 கற்தரே உங்கள் கற்பக்
கனியான பிள்ளைகளையும்
வற்தனை யாக்கி வைத்து
மகிழ்ந்திடச் செய்குவாரே
இத்தலம் பரங்களையும்
இசைவாக அமைத்துவைத்த
கற்தரால் ஆசீர்வாதம்
கண்டிட வந்தோர் நீங்கள் – உங்க
4 பரனுக்குப் பரங்கள் சொந்தம்
பார்பூமி நரர்க்குத் தந்தார்
மரணத்தின் தலத்திலுற்ற
மாந்தர்கள் யாருந் துதியார்
திரமாக இதுநாள் முதல்நாம்
தெய்வத்துக் கென்றென்றைக்கும்
அருமையாந் தோத்திரங்கள்
அனுதினஞ் செய்வமாக – உங்க