108 சங்கீதம்
108 சங்கீதம்
அகவல் – தாவீதினுடைய
பாவாஞ் சங்கீதம்
துசாவத்தி ஆதிதாளம்
என்னிதையம் என்தெய்வமே எத்தனமாயிருக்கும்
உன்னதமாய்ப்பாடியும்மை உயர்த்திப்புகழ்ந்திடுவேன்
1 என்மகிமையுந் தம்பூர்வீணையும்
ஏற்றகாலையில் விழிக்குமே – என்
2 சாதிகளுக் குள்ளுஞ்சனக் கூட்டங்களுக்குள்ளும்
சாமிஉமக் கேற்றதுதிச் சங்கீதங்கள்பாடுவேன்
ஆதிவானம் ஆகாச மண்டலங்கள் மட்டும்
ஆண்டவரே உமதுகிருபை சத்தியமும்எட்டும்
சோதிவானத் தலங்களின்மேல்க்கற்தர் நீரேஉயரும்
சுவாமிஉம்முடை மகிமை பூமியைச்
சூழ்ந்துமுற்றிலும் உயருமே – என்
3 உமதுநல்லநேசர்க்கிங்கே உபத்திரங்கள்வந்தால்
உமதுவலக்கரத்தாலே உதவிசெய்துகாப்பீர்
அவதிதன்னில் எங்கள்செபம் அன்புடனேகேட்பீர்
ஆண்டவரே உமதுவிசேட ஆலயத்தில்வந்தோம்
உமதுவிசேடத் தயவாலே உத்தரவைத்தந்த
உண்மைக்காகவும் நன்மைக்காகவும்
உம்மிலேகளிகூருவேன் – என்
4 சீகேமைப்பங்கிடுவேன் சுக்கோற்பள்ளமளப்பேன்
செல்கிலேயாத்தெனக்காமேசேர்மனாசேயும்எனக்கே
சேகையானஎப்பிராயீம்என் சிரசின்பெலன்தானே
செயயூதாஎன்ஞாய நெறியாளன்தானே
ஆகாதமோவாபுநான் அழுக்குக்கழுவும்பாத்திரம்
அழிபெலிஸ்தர்மே லார்ப்பரித்தேதோம்
ஆக்ரமத்தில்க்கால் நீட்டுவேன் – என்
5 அரணானநகர்க்குள் என்னை
அழைத்துப் போபவர்யார்தான்
அந்தஎதோம்மட்டும் என்னை
அழைத்துப் போபவர்யார்தான்
பரன்நீர்தான் எங்களுடை படைத்திரள்களுடனே
பயணப்படாதிருந்துகொண்ட பரன்நீர்தாமல்லோ
பாழ்க்கடிப்பிலே தள்ளிவிட்டநீர்
பார்த்தினித் தள்ளாதையும் – என்
6 கனமான இட்டகற்றிக் காப்பாற்றிடும் எங்களை
கணிசமான தயவையிப்போ காட்டிவிடும்எமக்கு
மனிதரெம்மைக் காப்பரென்று வாஞ்சிப்பதும்அபத்தம்
மகிமையுள்ள தெய்வத்தினால்
வல்லமையாயிருப்போம்
அநியாயமாயெங்களின்மேல் அடர்ந்துவரும்பகைஞர்
அனைவரையும் நம் மாண்டவர் தம
தடியினால்மிதித் தழிப்பார் – என்