104 சங்கீதம்
104 சங்கீதம்
முகாரி திரிபுடைதாளம்
1 எகொவாவைத் துதிசெய்திடு எனக்குள்
இருக்கும் ஆத்துமமே மகா
எகொவாவைத் துதிசெய்திடு எனக்குள்
இருக்கும் ஆத்துமமே
2 மிகவுமே பெரியவர்நீர் தெய்வமாம்
மேன்மையின் ஏகொவாவே மிகுந்த
மகிமையைக் கனத்தையுமே அணிந்து
மகிழ்ந்துகொண்டுருப்பீர்
3 பரமநல் வெளிச்சந்தன்னை வஸ்திரம்
பட்டுப்போ லுடுத்திக்கொண்டு உயர்வாம்
பரமண்டலங்களையும் திரைபோல்
பாரியாய் விரித்து வைத்தீர்
4 பரமவாசஸ்தலங்கள் தண்ணீர்ப்
பந்தல்மச் சாக்கிவைத்தீர் மேகமாம்
பரிகள் ரதமாக்கிக் காற்றின்
பருஞ்செட்டை மேல் நடப்பீர்
5 உம்முடையதூதர்களை அதற்கிங்கே
யொற்றகாற்றாக்கி வைத்தீர் மற்றும்
உம்முடைவேலையாட்கள் அக்கினி
உருச்சுடராக்கி வைத்தீர்
6 திட்டமே யசையாமல்ப் பூமி
தினமும் நிற்பதற்கு அதினாதி
யொட்டிய மூலங்கள்மேல்
அதற்குநீர் ஊன்றினீர் அஸ்திவாரம்
7 ஆடையால்மூடுவது போலதை
ஆழத்தால்மூடிவைத்தீர் உயர்ந்த
மேடாம்பர்வதங்கள் மேலும்
மிகுந்தது தண்ணீர்கள்
8 உம்முடை உதம்புகளால் அதுகள
ஒடியேவிலகினது முழங்கும்
உம்முடைசத்தத்தினால் முறிந்து
ஒதுங்கிப்போயினதே
9 மலைகளேவளர்ந்திடவும் பள்ளங்கள்
வழியாய்த்தாழ்ந்திடவும் தண்ணீர்கள்
உலைந்தேயொதுங்கிடவும் ஆதாரம்
உறுதியாகச்செய்தீர்
10 தண்ணீர்கள் பூமிதன்னைமூடத்
தத்தியேதிருப்பாமல் அதுகள்
பின்னிடா எல்லைதன்னை உறுதியாய்ப்
பேணிவைத்தீரே
11 மலைகளுக்கூடாக் கடலில்
வருகிற ஆற்றைவைத்தீர் அதினால்
வெளியின்சீவனெல்லாந் தாகம்
வெப்பமுந் தீர் ந்திடுமே
12 காட்டுவீண்கழுதைகளும் அங்கே
கண்டிடுந்தண்ணீரை அங்கே
கூட்டுவாய்ப்பறவைகளுந் தழைக்குள்
கொஞ்சியே சத்தமிடும்
13 மலைகளுக்கும்முடைய மேல்வீட்டு
மழையைநீர் இறைத்திடுவீர்பூமி
பலனினால் நிரம்பிடநீர் கையைப்
பலக்கநீட்டிடுவீர்
14 புல்லுகள் மிருகத்துக்கும் பயிரின்
போசனம்மனிதருக்கும் வகையாய்ச்
செல்லவே பூமிதன்னி விருந்தப்பம்
சேரச்செய்திடுவீர்
15 முகங்கள் களை விளங்க மகிழ்ச்சியாம்
முந்திரிகைப் பழரசத்தைக் கொடுத்து
அகமதி ழாதரவாம் அப்பத்தை
அருமையாய்க் கொடுத்திடுவீர்
16 எகோவா விருட்சமென்ற பனையும்
எகோவா நாட்டிவைத்த லீபனோன்
வகையாங்கே துருவும் இரசத்தின்
வற்தனை நிரம்பிடுமே
17 குருவிக் கூட்டமங்கே தங்கள் தங்கள்
கூடுகள்வைத்திடுமே பாய்மர
விருட்சங் கொக்குகளின் தாபர
மெலுக்காங் குடியிருப்பு
18 உயர்ந்த பருவதங்கள் காட்டாடு
ஒதுங்குந்தாபரமே மிகவும்
பயந்த குழிமுசலுக் கடைக்கலம்
படர்ந்த கல்மலைகள்
19 சந்திரன் காலக்குறிப் பாகுஞ்
சார்பாய்ப் படைத்துவைத்தீர் மகா
சுந்தரச் சூரியனோ அறியுந்
தொகுத்த தன் அஸ்தமிப்பை
20 ராத்திரி யாவதற்கே இருளை
நட்புட னாகவைத்தீர் அவரையே
பார்த்தெங்குந் திரிந்தலையும் காட்டுப்
பதுங்கல்ச் சீவனெல்லாம்
21 எங்களின் தெய்வமான உம்மால்
இரையிங்கே கிடைப்பதற்கு அப்போ
சிங்கத்தின் குட்டிகளும் ஆகாரந்
தேடிக் கெற்சிக்குமே
22 சூரிய னுதித்திடவே அதுகள்
தூரமா யகன்றுதங்க ளிடமாஞ்
சூரைச்செடி கீழ்படுத்துச் சுகமாய்த்
தூங்கிக்கொண்டிருக்கும்
23 மனிதன் அப்போதன்வேலைக்கும்
மந்தைக்கும் பண்ணைகட்கும்புறப்பட்டுக்
கனமாய்த் திரிந்தலைவான் சாயுங்
காலமாம் எல்லைமட்டும்
24 எத்தனை திரளுமது செயல்கள்
எகோவா என் சுவாமீ ஆகா!
எத்தனை திரளுமது செயல்கள்
எகொவா என் சுவாமீ
25 சாமிநீர் அதுகளெல்லாம் ஞானமாய்ச்
சமையச் செய்துவைத்தீர் இந்தப்
பூமியும் உம்முடைய பொருட்களால்ப்
பூர்த்தியாய் நிறைந்திடுமே
26 பரனே சமுத்திரம் மிகவே
படர்ந்த விஸ்தாரம் அதிலே
பெரிதுஞ் சிறிதுமாகக் கணக்கின்றிப்
பிரளுஞ்சீவனுண்டு
27 அதிலே கப்பல்களில் மனிதன்
அலைந்து திரிவதல்லால்க் குதித்தே
அதில்த்துள்ளி விளையாடும் நீர்பெரி
தாக்கிய திமிங்கலங்கள்
28 தங்களி னாகாரம் ஏற்ற
தருணத்தில் வாங்கிக்கொள்ள அதுகள்
சங்கையாய் உம்மைநம்பிக் காத்துத்
தவித்துக் கொண்டிருக்கும்
29 அமைதியாய் நீர்கொடுக்கும் எதையும்
அதுகள் வாங்கிக்கொள்ளும் அதுகள்
உமக்கு கைதிறக்க நன்மையை
உண்டிங்கே திருத்தியாகும்
30 உமதுநல் முகம்மறைக்கத் திகைக்கும்
உயிரைவாங்கிவிட அதுகள்
தமதுமண் தூள்களுக்குத் திரும்பிச்
சாம்ப லாகிவிடும்
31 உமது காற்றதனை யனுப்ப
உருவாகும் மறுபடியும் பூமி
அமைந்த ரூபத்தையும் புதிதாய்
அழகு தோன்றவைப்பீர்
32 எகோவாவுக் கதிக மகிமை யுண்டாக
என்றென்றும் என்றென்றுமே மகா
எகோவா தமதுசெயல்த் திரளால்
மகிழ்வாராக என்றும்
33 சாமி பூமிதன்னை நோக்கினால்
தத்தளித் ததிர்ந்திடுமே நமது
சாமி மலைகளையே தீண்டினால்ச்
சணத்தில்ப் புகைந்திடுமே
34 என்னுயி ருள்ளமட்டும் பாடுவேன்
என்னுடை ஏகொவாவை மிகவும்
எந்தெய்வந் துதித்திடுவேன் நானிங்கே
இருக்குங் காலமெல்லாம்
35 ஏகோவா மேலே யெனக் கிருக்கும்
என்யோசிப் பினிமையாகும் மகா
எகோவாவுக் குள்நானோ இங்கே
என்றைக்கும் மகிழ்ந்திடுவேன்
36 துட்டர்கள் பூமிவிட்டு இனிமேல்த்
தொலைந்து போய்விடட்டும் பாவிகள்
கெட்டபேர் தேசம்விட்டே அறுந்து
கிழம்பிப் போய்விடட்டும்