77 சங்கீதம்
77 சங்கீதம்
குறள்-எதித்தூனெனுமோர் ராகத் தலைவற்
களித்ததாம் ஆசாபின் பாட்டு
1 வது பங்கு வச.1 – 5
தோடி ஆதிதாளம்
நான் கூக்குரல்ச்
சத்தமாய்த் துயர் காட்டினேன்
1 வானோக்கிய உடனே எனின்மனு
ஆனபடி சுவாமி தயவாகினார் – நான்
2 தெய்வத்திடம் ததிநாளினில்ச் சேர்ந்தண்டியே
கையேந்திரா வெல்லா மன்றாடினேன் – நான்
3 என்னாத்துமத் துய ராறியோ ராறுதலும்
அன் நாளினில் உண்டாகிடஇல்லையே – நான்
4 என்சுவாமிமேல் நினை வோடும்போதெல்லாம்நான்
என்வாஞ்சையால் மன்னி யலறிநின்றேன் – நான்
5 மூடாமலே கண்முழி நட்டக்குத்தர
வாடியொரு வாக்கி லிருந் தோய்ஞ்சுதே – நான்
6 வேசாரலாய் மனம் பேதலிப் பாகியேநான்
பேசாமலே இருந்தே நான் ஏங்கினேன் – நான்
7 ஆதிநட படிக்கை பழைய நாட்செய்தி
யாதுவர வேதை யணுகி நின்றேன் – நான்
8 வீணைத்துதி தவறி யிரவெல்லாம் நெஞ்சில்
தோணும்நினை வென்னைத் துயராக்கவே – நான்
2 வது பங்கு வச.6 – 10
மனகலங்கியே மலைவுகொண்டேனே
1 இரங்கிடச்சுவாமியும் மறந்தாரோஎன்று – மனங்
2 அப்புறம்இன்னும் ஆண்டவரென்னை
இன்பமாயென்றென்றும்வெறுப்பாரோஎன்று – மனங்
3 சாமியோஎனக்குத் தயைசெய்யுங்காலம்
சேமமற்றென்றும் திகைந்ததோஎன்று – மனங்
4 தலைமுறைகாக்குஞ் சாமிநல்வாக்கு
நிலவரமற்றுப்பின் நின்றுதோஎன்று – மனங்
5 இரங்கிடமறந்து இரக்கத்தைக்கோப
உரங்கொண்டேயடைந்தவர்இருந்தாரோஎன்று – மனங்
6 இந்தஒர் விதத்தில் இயோசனை பண்ண
வந்துதேபெலக்கேடு வகையாக என்மேல் – மனங்
3 வது பங்கு வச.11 – 20
வெண்பா
காரியத்தின்மாறுதல்கள் கற்தருடைய வல்லமையால்
பூர்வமுறைப்படிக்குப் பொங்குமே நேரிட்ட
தெய்வபுதுமையெல்லாஞ் சிந்தித்தேன் தெய்வசெயல்
ஒவ்வொன்றும் பார்த்தேன் உவந்து
மேலுக்குமேல்த் தெய்வம் நீர்தானே உம்மைப்
போலொத்தவரென்று யாரைக்குறிக்கலாம்
1 மேலான தெய்வமே உம்முடைய நேர்வழி
விசேடத்தலத்தினிலுள்ளதுவே
ஞாலத்தில்மேல்வலுச்செய்பவர் நீர்தாமே
ஞாயத்திலதிசயஞ்செய்பவர் நீர்தாமே – மேலுக்கு
2 யாக்கோபுயோசேப்பு மக்களைவல்லமைத்
தாக்கத்தினால்ச் சிறைமீட்டதினால்
சேர்க்கையாம்மானிடக் கூட்டங்களும்முடை
திறமையைக்கண்கொண்டு பார்க்கவுஞ் செய்தீரே – மேலுக்கு
3 அருங்கடல்த்தண்ணீர்கள் உம்முடைசமுகத்தில்
அருண்டுவெருண்டிட ஆயிற்றுதே
பெருங்கடலாழங்கள் உம்மைக்கண்டதிர் ந்ததே
பெருங்கடலாழங்கள் உம்மைக்கண்டதிர் ந்ததே – மேலுக்கு
4 மேகங்கள் தண்ணீரைத் தாரையாய்விட்டதே
ஆகாசக்குமுறல்கள் தொனித்ததுவே
ஏகோவாஉம்முடை வல்லமையம்புகள்
எங்குமேவெளியேறிப் பாய்ந்திடலாச்சுதே – மேலுக்கு
5 மேகத்தினிடிவெட்டுச் சுற்றியே முழங்கிற்று
மின்வெட்டில்ப்பூமியே மினுங்கிற்றுதே
ஆகவேயிவ்விதச் சந்தியில்ப்பூமியும்
ஆண்டவர்சந்நதி தன்னிலே குலுங்கிற்று – மேலுக்கு
6 கடலிலும் பெருங்கயத் தூடேயும் வழிவிட்ட
காரணம் அதிசெயமாகினதே
நடந்திட்டஉம்முடை காலடிதானுமே
நரருடைகண்ணுக்குத் தெரியாமலிருந்ததே – மேலுக்கு
7 ஆரோனும்மோசேயும் உம்முடைசனங்களை
அவ்விதச்சந்தியில் முன்னேநின்று
நேராகமந்தைபோல்க் கொண்டங்கே நடந்ததாம்
நீர்செய்த அதிசயம் பார்த்திடும்போதிலே – மேலுக்கு