74 சங்கீதம்
74 சங்கீதம்
ஆசாபின் சங்கீதம்
எதுகுலகாம்போதி திரிபுடைதாளம்
1 தெய்வமேயெங்களையென்றைக்கும்
ஏன்தள்ளிவிடுகிறீர் உமது
தீக்கோபம்உம்முடைமந்தைமே
லேனிங்கே புகையுது
தெய்வாலயத்துள்ள அனைத்தையுஞ்
சத்துருகெடுத்திட்டான் நித்திய
சிதைவுக்கென்றும்முடை
பாதங்களெழுந்திடச் செய்யுமே
2 நீர்மீட்டஉம்முடை சுதந்தரமாகிய
கோத்திரம் தனையும்
நீர்வாசம்பண்ணியசீயோனாம்
மலையையும் நினையுமே
நீர்பூர்வகாலங்கள் தொடங்கியே
சம்பாதித்தாக்கிய உமது
நிதானமாஞ் சபையையும்
அன்பாகநினைவுகூர்ந்தருளும்
3 உம்முடைபகைவர்கள் உம்முடைஆலயத்
துள்ளுக்குள்ப்புகுந்து
உறுமியேகெற்தித்
அடையாளக்குறிதமக் கேற்றினர்
கும்மல்மரச்சோலையில் க் கோடாலிபோட்டவன்
பேர்பெற்றான் இப்போ
செம்மையாம் பணிகளைச்
சிதைவாக வெட்டியேகெடுத்தனர்
4 பெரியநல்விசேடத்துத்
தலத்தையுந் தீக்கிரையாக்கினர் உமது
பேர்நாமவீட்டையும் தரையாக்கி
மகிமையைக் கொலைத்தனர்
நிருதூளியாக்கியே அவர்களை
யேகமாய்க்கொல்லுவோம் என்று
நெஞ்சஞ்சாதியம்பியே
எங்கள்மேலவர்களே பாய்ந்தனர்
5 தேசத்திலுண்டான செபவீடுயாவையுங்
கொளுத்தினர் எங்கள்
திடமான அடையாளம்
யாதொன்றுங்கண்ணிலே காண்கிலோம்
மோசம்இதெம்மட்டும்
இருக்குமென்ற்றிபவன் இங்கில்லை அதை
முன்னாகச்சொல் தீர்க்கத்
தெரிசியும் அப்புறம் இங்கில்லை
6 தெய்வமேசத்துரு எம்மட்டும்நிந்தனை
செய்குவான் பகைஞன்
தீழ்ப்புச்சொல்உம்முடை
நாமத்தின்மேலென்றுஞ் சொல்வானோ
கையையும் வல்லமைக் கையையும்
ஏன்மடக்கிக்கொள்ளுகிறீர் அதைக்
காட்டிடும்மடியைவிட்
டெடுத்திடும்வெளியிலே நீட்டிடும்
7 பூமியின்நடுவிலே யீடேற்றமருளிய
தெய்வம்நீர் தாமே
பூர்வநாள்முதலாக
என்னுடையராசாவும் நீர்தாமே
சாமிநீர்உம்முடைபெலத்தாலே
கடலைரண்டாக்கியே பிளந்து
தண்ணீர்ன் வலு சற்பச்
சதளத்தின் தலைகளையுடைக்கிறீர்
8 வலுவானமுதலைகள்
தலைகளை நருக்கியேஉடைத்து அதை
வனாந்தரச்சனத்துக்குப்
போசனமாவுங் கொடுத்திட்டீர்
மலையைநீர் பிளந்ததில்
ஊற்றையும்ஆற்றையும்பிரித்திட்டீர் அதுபோல
வலுநதியோட்டமும்
வற்றியேவரளவுஞ் செய்திட்டீர்
9 பகலும்உம்முடையது
இரவும்உம்முடையது தானல்லோநீர்
பலத்ததாம் வெளிச்சமும்
சூரியனுமுருவாக்கினீர்
வகுத்திட்டீர்பூமிக்கு
வரம்பானஎல்லைகள்யாவையும் அதுபோல்
மாரிக்குக் காலமுங்
கோடைக்குக்காலமும் வகுத்திட்டீர்
10 உம்மைஎம்பகைஞர்கள்
நிந்தனைசெய்வதை நினைத்திடும் சுவாமீ
உம்முடைநாமத்தை முட்டாள்க்கும்
பிகழ்வதை யெண்ணிடும்
உம்காட்டுப் புறாவுயிர்
மிருகத்தால்ச்சாகாமல்ச் செய்திடும் இந்த
உபத்திரத்துமதன்பர்
சீவனையென்றைக்கும் மறவாமல்
11 உம்முடம்படிக்கையை நினைந்திடும்
பூமியி னிருட்டுந் தலங்கள்
ஒக்கவேகொடுமையின்
குடியிருப்பாகவே நிறைந்திடும்
உம்நாமம் சிறுமையோன்
எளியவன்துதித்திடச் செய்திடும் மனம்
உடைந்தவன் நாணத்துக்
குள்ளாகித் திரும்பாமல்ச்செய்திடும்
12 முட்டாளால் நாள்தோறும்
உமக்கிங்கேவரும் நிந்தை நினையுமே இப்போ
முகனையாயெழுந்திருந்
தும்முடைய வழக்கைநீர் பேசிடும்
எட்டீடும்எப்போதும்
உம்முடைவிரோதிகளமளி உமது
எதிரிகளெக்காளச் சக்கந்தம்
மறவாமல் நினைந்திடும்