71 சங்கீதம்
71 சங்கீதம்
1 வது பங்கு வச.1-13
நம்பினேன் உம்மைநான் எகோவாவே யென்றும்
என்புறம்வெட்கம்நான் காணாதிருக்கட்டும்
1 உம்முடைநீதியி னிமித்திய மாயென்னைச்
செம்மையாய்விடுவித்துத் தப்புவித்தருளுமே – நம்பி
2 உம்முடைசெவியைநீர் சாய்த்தென்னை ரட்சித்துக்
கன்மலையாயெனக் கெப்போதைக்கு மிரும்
கன்மலைகோட்டையும் எனக்குநீர் என்னையே
காத்திடக்கட்டளை கொடுத்தீர் நான் ஒதுங்குவேன் – நம்பி
3 ஆகாதமானிடன் அஞ்ஞாயத்துஷ்டமாம்
ஆட்டமுமுள்ளவன் கைக்கென்னை நீக்குமே
ஏகொவாவாகிய ஆண்டவாதெய்வமே
என்தஞ்சம்நீரென்றெநோக்கியேயிருக்கிறேன் – நம்பி
4 சிற்பந்தொடங்கியென் நம்பிக்கைநீர்தாமே
கெற்பத்திருந்தும்நான் உம்மையேசார்ந்திட்டேன்
அற்புதம் ! தாய்க்குடல் விட்டென்னை யிழுத்திட்டீர்
அதினாலெப்போதைக்குந் துதிசெய்வேனும்மை நான் – நம்பி
5 அநேகர்க்கொருவித அற்புதம்போலானேன்
ஆண்டவா! எனக்குநீர் உறுதியாமடைக்கலம்
எனதுவாய்உம்முடை துதியாலும்உம்முடை
கனமானமகத்தாலும் அனுதினம்நிறையுமே – நம்பி
6 தயாபரனவனைக்கை தளரவிட்டாரென்றென்
சத்துருக்கள்சொல்லிச் சக்கந்தஞ்செய்யாமல்
வயதுமுற்றிப்பெலன் வாங்கியகாலத்தும்
தயவையேநினைத்திடுந் தள்ளிப்போடாதையும் – நம்பி
7 என்னாத்மா வுயிருக்குப் பதிவைத்தபேர்களும்
என்மாற்றார்பலர்களு மாய்க் கூடிப்பேசியே
பின்னாகஅவனையே தொடர்ந்துபோய்ப் பிடியுங்கள்
பேணியேவிடுவிக்க யாருமேயிலையென்பர் – நம்பி
8 என்சுவாமி ! சுருக்காகச் சகாய்ஞ்செய்திடும்
என்னைவிட்டுத்தூரப் போகாமல் வந்திடும்
என்பிராணவிரோதிகள் வெட்கியேயழியட்டும்
துன்பஞ்செயப் பார்ப்போர்க்குசூழட்டும் மா! நிந்தை – நம்பி
2 வது பங்கு வச.14-24
யமுனாகலியாணி ரூபகதாளம்
துதியின்மேல்த்துதியை மடித்துநான்
சொல்லுவேன் உமக்கு
1 ததியிலும்மைநான் நம்பியெப்போதும்
சாற்றுவேன்துதியை யுமக்குநான்
சாற்றுவேனெது காரியத்திலும் – துதி
2 உமதிநீதியும்ரட்சிப்பும் நாள்தோறும்
எனதுவாய்விளம்பும் அதுகளின்
எண்தொகையறி யேன் தயாபரா ! – துதி
3 ஆதியாங்கடவுள் ஏகோவா உம்முடை
ஆதிக்கத்துட்புகுவேன் உமதுமெய்
நீதிமாத்திரம் நான் நினைப்பேனே – துதி
4 இழந்தைதொட்டெனக் கிதுவரையும்முடை
வளத்தைப்போதிவித்தீர் உமதுகை
நல்லதிசயஞ்சொல்லுவேன் தயாபரா ! – துதி
5 இப்போதிந்தச் சந்திக்கும்முடை
நற்புயத்தைச்சொல்லுவேன் அதுவரை
என்நரைவரை கைவிடாதையும் – துதி
6 பிற்கிளையாவுக்கும் உம்முடைவல்லமை
முக்கியமாய்ச்சொல்லுவேன் அதுவரை
என்நரைவரை கைவிடாதையும் – துதி
7 போதச்செயல்செய்யுந் தெய்வமேஉம்முடை
நீதிமகாஉயர்வாம் சுவாமியே
யார் நிகர்உமக் கார் நிகர்நிகர் – துதி
8 மிகுந்தகொடிய இடுக்கத்துள்ளென்னைப்
புகுந்துலையச்செய்தீர் திரும்பவும்
தாரும்நல்லுயிர் தாரும்நல்லுயிர் – துதி
9 திரும்பநான்பூமியின் பாதாழம்விட்டேறிப்
பெருமைமென் மேலும்பெற்று உமக்குள்ளே
தேறுதல்ப்படச் செய்யுமென்பரா – துதி
10 உம்மையும்உம்முடை சத்தியந்தன்னையும்
தம்பூரினால்த்துதிப்பேன் பெருமையாய்ச்
சொல்லுவேன்துதி சொல்லுவேன்துதி – துதி
11 இசரவேலுடைய பரிசுத்தரே உம்மை
மிசைச்சுர மண்டலத்தால்த் துதியுடன்
போற்றிப்பாடுவேன் போற்றிப்பாடுவேன் – துதி
12 இதில்நீர் மீட்டஎன் ஆத்துமாவுமென்
உதடுங்கெம்பீரிக்கும் உமக்குநான்
துதிகள் சொல்லுவேன் துதிகள்சொல்லுவேன் – துதி
13 என்நாவும்நாள்தோறும் உம்முடைநீதியைக்
கொண்டாடிநின்றிடுமே தினந்தினம்
பாடிநின்றிடும் பாடிநின்றிடும் – துதி
14 பொல்லாங்கெனக்குத் தேடுவோர்வெட்கமாய்
ஒல்கியேலெச்சைப்பட்டுப் பின்வாங்கியே
யொழிந்துபோயினர் ஒழிந்துபோயினர் – துதி