66 சங்கீதம்
66 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு நன்றாக ஒப்புவித்த
பாகமாஞ் சங்கீதப் பாட்டு
1 வது பங்கு வச. 1 – 9
சைந்தவி ஆதிதாளம்
சாமிமுன் சிமாளியுங்கள்
சகலபூமியின் குடிகளே
1 சாமியின்நாமத்தின் கன
மேன்மையைப்புகழித்து மிகச்
சந்தோஷித்தவர் துதிகளை
சாலவுங்கணிசமாக்குங்கள் – சாமி
2 செயல்களில்த்தெய்வம்நீர் மிகப்
பயங்கரஞ்செய்பவ ரென்று
வயணமாய்மிகுவணக்கமாய்
வசனித்தவருடன் சொல்லுங்கள் – சாமி
3 உம்முடைவல்லமைத் திரள்
நிமித்தியம்உம்முடை பகைவர்
உம்முடைமுன்னுக்கு வணங்கியே
எண்ணமாய்ப் பேசுவார்களே – சாமி
4 உம்மையேபூமியின் உயிர்
ஒக்கவேபணிந்திடும் அதுகள்
உம்மைஉம்முடை நாமத்தை
ஒக்கக்கீர்த்தனஞ்செயுமென்று – சாமி
5 தெய்வத்தின் செயல்களை வந்து
திட்டமாகப்பாடுங்கள் அவர்
செய்யுஞ்செயல்களில் மாந்தர்க்குள்
மெய்யாய்ப் பயங்கரமானவர் – சாமி
6 வெட்டாந்தறையாகவே கடல்
வற்றிப்போகச்செய்தனர் மிக
வற்றிக்கால்நடை நடந்தங்கே
மகிழ்ச்சியடைந்தோம் அவருக்குள் – சாமி
7 தம்முடைவல்லமையாலே
தாமென்றென்றும் ஆளுவார் அவர்
தம்முடைகண்களின் நோக்கத்தைச்
சாதிகள்மேலே தாம் வைப்பார் – சாமி
8 தங்களைத்தாங்களே மிகத்
தறுகுறும்பா மனுடர்கள் இங்கே
இங்கிதமாக உயர்த்திடா
திருக்கவேண்டிய தாகுமே – சாமி
9 நம்முடைதெய்வத்தை மிக
நமஸ்காரஞ்செய்துமே மகாச்
செம்மையா யவர்துதி கேட்டிடச்
செயங்கள்சனத்தின் சதளங்காள் – சாமி
10 நம்முடைகால்களை அவர்
நழுகிப்பிறண்டிடவிட்டிடார் அவர்
நம்முடைஆத்துமம் உயிருடன்
நாட்டினில் வாழ்ந்திடச் செய்கிறார் – சாமி
2 வது பங்கு வச. 10 – 15
கலிப்பா
1 தொல்லையாலெங்களையே
சோதித்தீர் தெய்வமேநீர்
வெள்ளியைப்போலெங்களைநீர்
மிகவும்புடமிட்டீரே
2 எங்களை நீர் வலைக்குள்ச் சிக்க
இனம்பண்ணிப்போட்டீரே
எங்களுடை இடுப்புகள்மேல்
இருத்துகிறபாரம் வைத்தீர்
3 எங்கள்தலை மேல்மனிதர்
ஏறிப்போகச் செய்தீரே
எங்களைத்தீத் தண்ணீர்க்குள்
முங்கப்பண்ணி வைத்தீரே
4 ஆனாலும் சம்பூரணம்
அடையநாங்கள திலிருந்து
மேன்மையுடன் நீங்கலாகி
வெளியேறச் செய்தருள்வீர்
5 சருவாங்கத்தகனத்துடன்
சார்வேனுமது வீட்டுக்குள்ளே
சருவாங்கத்தகனத்துடன்
சார்வேனுமது வீட்டுக்குள்ளே
6 என்னிக்கட்டிலுதடுவிட்டு
என்வாயாலுமக்குச் சொன்ன
நன்னயமாம் பொருத்தனைகள்
நான்செலுத்தி நிற்பேனே
7 கொழுப்பான தகனப்பெலி
கொம்புக்கிடாய் நிணப்புகையும்
செழிப்பான மாடுகிடாய்ச்
சேர்மான்மும் நான் படைப்பேன்
3 வது பங்கு வச. 16 – 20
கேதாரகௌளம் திரிபுடைதாளம்
தெய்வநாமத்துக் கஞ்சும்நீ மெல்லாருஞ்
செவிகொடுங்கள் என்னண்டையில் வந்து
1 தெய்வம்என்னுடை ஆன்மாவுக்கன்பாக
செய்தசெய்கையை நான்சொல்லுவேனே – தெய்வ
2 அவரைநோக்கியென் வாயினால்க்கூப்பிட்டேன்
அவரென்வாயினால் உயர்த்தப்பட்டாரல்லோ
அவரைநோக்கியென் வாயினால்க்கூப்பிட்டேன்
அவரென்வாயினால் உயர்த்தப்பட்டாரல்லோ – தெய்வ
3 என்னுடைஇதையத் தக்ரமநோக்கமா
இருந்தாலாண்டவர் என்செபங்கேளாரே
என்செபம்மெய்யாத் தெய்வமேகேட்டிட்டார்
என்செபசத்தந் தெய்வமேகவனித்தார் – தெய்வ
4 என்செபம்அல்லத் தட்டாமல்த் தம்கிருபை
என்னைவிட்டென்றும் விலக்காமலிருக்கிற
என்னுடைதெய்வமானவர் தோத்திரம்
என்றும் ஏற்றிடத் தக்கவர்தக்கவர் – தெய்வ