65 சங்கீதம்
65 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாய்த் தந்த கீதப்பாட்டு
1 வது பங்கு வச. 1 – 4
சங்கராபரணம் திரிபுடைதாளம்
சீயோனில்மெய்த்தெய்வமேஉம்மை நோக்கிச்
சேர்ந்துநல்த் துதிகள் சொல்கிறார்கள்
1 வாயாலேயுமக்குச் சொன்ன
மாட்சிமைப்பொருத்தனைகள்
ஒயாமல்க்கொண்டே வந்து
உமக்கிங்கே செலுத்தப்படும் – சீயோ
2 செபத்தைக்கேட்டேற்பவரேஉமது வசத்தில்
சேருமேமாம்சம்யாவும் பணிவாய்
அபத்தத்தின்விசேடங்கள் என்மேல் மிஞ்சி
ஆணவங்கொண்டே யிருந்தாலும்
ஆண்டவர்நீரேயெங்கள்
அக்ரமத்திரள்தன்னை
மீண்டுமேநிவர்த்தியாக்கி
மேன்மையையெமக்குத் தந்தீர் – சீயோ
3 செபப்பிர திட்டையானஉமது வீடாந்
திவ்யவீட்டரணின் நன்மையாலே
கபத்துடன்திருத்தியாகிநன்றாய் நாங்கள்
சுகித்திங்கேமகிழ்ந்து கொள்வதாலே
தெய்வமே உம்முடைய
திவ்வியபிரகாரத்தில்ச்
சேர்வதாய்த்தெரிந்தே யும்மால்
சேர்ந்தவன்பாக்யவாளன் – சீயோ
2 வது பங்கு வச. 5 – 13
வெண்பா
தூரக் கடற்கரைகள் சூழ்பூமியந்தமெல்லாம்
நேராகநம்புகிறநம்பிக்கைக் காரணராம்
எங்களுடைரட் சிப்பின்ஏகொவாதெய்வமே
எங்களுக்குக்கேள்வி கொடுப்பீர்
உசேனி ஆதிதாளம்
பயங்கரச்செய்கைசெய்குவீர் நீதியுள்ள
பதில்ச்சொல்லை யந்தப்படிக்கே
பட்சமாயெமக்கிங்கருள்வீர்
பயங்கரச்செய்கைசெய்குவீர்
1 தயவாகஉம்முடைய பெலத்தினாலே
மலைகளை நிற்கச் செய்வீர்
வல்லமைகொண்டிடையைச்
சாலவுங்கட்டிக்கொள்ளுவீர் அவ்விதமாய்ச்
சமுத்திரஉக்கிரம் அதினலைஉக்கிரஞ்
சனத்திரளமளியும் அமர்ந்திடச்செய்குவீர்
உமதடையாளத்தி னிமித்தமாய்ப் பூமியின்
ஒதுங்கலின்குடிகளும் பயப்படுவார்களே – பயங்
2 விடியற்காலத்திலேயுஞ் சாயுங்கால
வேளையிலேயும்வெளியே புறப்படுஞ்சீவன்களை
மிகக்கெம்பீரிக்கச் செய்குவீர்
திடலானபூமியைநீர் விசாரணை
செய்குவீர் அதற்குத்தவனம் உண்டாக்கிப்பின்பும் அதைநீர்
திருத்தியாயமையச்செய்குவீர் மிகுதியாகத்
தெய்வத்தின்வாய்க்கால் தண்ணீரால் நிரம்பிடும்
திருத்துவீரிப்படியானபின் அங்கே
எவ்வகைவிளைச்சலும் விளைந்திடச்செய்குவீர்
எளிமையின்சனங்களும் அனுபவிப்பார்களே – பயங்
3 தண்ணீரையிரைத்திடுவீர் உழவுகட்டி
தணிந்திடப்படைச்சாலுக்குத் தந்திடுவீர்மழையை
தறைப்பயிராசீர்வறிப்பீர்
நன்மையால்வருடந்தன்னை முடிசூட்டுவீர்
நாதராம்உமதுபாதை நெய்யாகப்பொழி ந்திடுமே
நடுக்காட்டுத்தளிரின்மேலும் பொழிந்திடுமே
மேடுகள்சுற்றிலும் பூரிப்பையடைந்திடும்
மேய்ச்சலின் வெளிகளி லாடுகள் நிரந்திடும்
மூடிடுந்தானியம்பள்ளங்கள் தாவினில்ப்
பாடுவர்மகிழுவர் இதுகளினிமித்தமாய் – பயங்