64 சங்கீதம்
64 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாம் தாவீது
பாகமாய் ஒப்புவித்த பாட்டு
சாமராகம் ஆதிதாளம்
தெய்வமே யென்கெஞ்சுதல்கேளும் பகைஞன்
திகில்நீக்கி யென்பிராணன் காரும்
1 ஜயோ! பொல்லாதோர் உள்யோசனைக்கும் துட்டர்
அமளிக்கும்இடைஞ்சலாக மறையும் – தெய்
2 கத்திபோல்த்தம் நாவைக்கூர்மையாக்கி மறைவில்
கசப்புச்சொல் அம்புகளைத்தீட்டி
உத்தமனையசுப்பிலெய்துபோட்டு எதற்கும்
ஒஞ்சாமல்த்துணிகரங் கொண்டார்கள் – தெய்
3 பொல்லாதவிசேடமுறுதிபண்ணிக் கண்ணி
புதைத்தெங்கும் விரிப்பதையேபேசி
அல்லலுண்டாக்குமதையெல்லாம் இங்கே
ஆர்காண்பா னென்கிறார்கள்சுவாமீ ! – தெய்
4 ஞாயக்கேடுதேடி முஸ்திப்பாக்கி அதை
ஆய்ந்துதேடி எத்தனஞ்செய்வார்கள்
ஈயம்போலவனவனின்உள்ளம் அவர்கள்
இதையமும்அதில் ஆழ்ந்தேயிருக்கும் – தெய்
5 தெய்வமோஇங் கவர்களையே யெய்வார் வெகு
தீவிரமாய் அம்புபட்டாப்போலே
மெய்யாகஅவர்கள் வாதையிருக்கும்அவர்கள்
விழுவார்கள் தங்கள் நாவால்த்தாமே – தெய்
6 நீதிசரிக்கட்டுதலையைவர்கள் மேலே
நேர்வதுகண்டோரெல்லாரும் ஒட
நீதித்தெய்வசெயல்தன்னையறிவித் தஞ்சி
நினைந்துணர்வார்கள்மாந்தர் யாரும் – தெய்
7 நன்மைநீதிமானோசுவாமிக்குள்ளே மகிழ்ந்து
மென்மேலுமே அவரை நம்பிக்கொள்வான்
செம்மையிதையத்தார்கள்யாரும் அவர்க்குள்மகிழ்ந்து
நேர்ந்துமேன்மை பாராட்டிடுவார்கள் – தெய்