50 சங்கீதம்
50 சங்கீதம்
ஆசாபின் சங்கீதம்
1 – வது பங்கு. வச.1-6
கமாஸ் ஆதிதாளம்
வல்லசெயலின் தெய்வமாகிய
எகோவாவசனித்தார் இதோஇதோ – வல்ல
1 எல்லைச்சூரியன் எழும்புந் திசைமுதல்
இறங்கியடையுந் திக்குவரைக்குமாம்
தறணிதன்னைக் கூப்பிடுகிறார் – இதோ இதோ – வல்ல
2 பூரணவடிவுபொருந்துஞ் சீயோனில்
பேரளவாய்த் தெய்வம் பிரகாசிக்கிறார்
பேரளவாய்த்தெய்வம் பிரகாசிக்கிறார் – இதோ இதோ – வல்ல
3 மவுனமாகாமல் வருவார் நம்தெய்வம்
அவர்முன் அக்கினி எரிக்கும்பெரும்புசல்
அவரைச்சுற்றிலுங் கொந்தளித்திடும் – இதோ இதோ – வல்ல
4 தம்சனஞாயஞ் சாமி தீர்த்திட
றெம்பஉயர்ந்த வானங்களையும்
நீணிலத்தையுங் கூப்பிடுகிறார் – இதோ இதோ – வல்ல
5 பலிமேல்ச்செய்தஎன் பலத்த ஒப்பந்தம்
வலுவாய்க்கொண்டஎன் பரிசுத்தர்களே
வரஎன்னிடத்தில்க்கூட்டுங்களென்று – இதோ இதோ – வல்ல
6 அப்போவானங்கள் அவரின் நீதியைச்
செப்பமாய்ச்சொல்லும் தெய்வமாஞ்சுவாமி
செகத்துக்கெல்லாம் ஞாயத்தலைவர் – இதோ இதோ – வல்ல
2 – வது பங்கு. வச.7-15
வராளி சாபுதாளம்
என்னுடைசனமே கேள்நீ
யான் பேசுவேனே
1 உன்தெய்வம்உன்சுவாமி யான்இசரவேலே
உனக்குள் நான் சாட்சியை
விளக்கமாக்கிடுவேனே – என்னு
2 என்முன்உன்முழுயாகம்
எப்போதும் இருப்பதால்
உன்பெலி நிமித்தியம்
உன்னைநான் கண்டிக்கேன் – என்னு
3 உன்வீட்டுக்காளையை
உன்கிடைக் கிடாயையும்
உன்னிடத்திருந்துநான்
உவந்தேற்றுக் கொள்ளேனே – என்னு
4 காட்டுச் சீவன்மலைக்
காட்டிலாயிரங்களாய்
கூட்டமா மிருகமுங்
கூடஎன்னுடையதே – என்னு
5 தன் நிறைவுடன்பூமி
என்சொந்தமானதால்
உன்னிடம் பசிகொண்டே
னென்றுநான் சொல்லேனே – என்னு
6 எருதுகள்மாமிசம்
அருந்தியாட்டுக்கிடாய்
இரணமாம் இரத்தத்தை
யானிங்கே குடிப்பேனோ – என்னு
7 சொன்னேன் உன்தோத்திரப்
பெலியைச்செய் சுவாமிக்கு
உன்னதற் குவந்துவாய்
சொன்னதைச் செலுத்துநீ – என்னு
8 இடுக்கத்தின் நாளிலே
எனைநோக்கிக் கூப்பிடு
விடுவிப்பேன் அதற்கென்னை
மேன்மையாய்த் துதித்திடு – என்னு
3 – வது பங்கு. வச.16-23
வராளி சாபுதாளம்
துன்மார்க்கனிடத்தில் தெய்வம்
சொல்லுவார் இதைத்தான்
1 என்ஞாயவிதிகளை
என்னுடம்படிக்கையை
உன்வாயில் வைத்திட
உனக்கென்ன ஞாயமென்று – துன்
2 கடிந்திடுஞ்சொல்லை நீயோ
கசப்பாகப் பகைத்து
இடும்பாகநீயோ என்
இன்பமாஞ் சொற்களை
எறிந்திட்டாய் உனக்குப்பின்
எறிந்திட்டா யென்றுதான் -துன்
3 திருடனைக்கண்டால் அவனோ
டொருமித்துப் போறாய்
அருவருப்பாகிய விபசாரக்காரருடன்
உரிமையதாகவேஉன்பங்குவந்ததென்று – துன்
4 பேதம்உன்வாயே சற்பனை
பிணைக்கும் உன்நாக்கு
ஏதுஉன்சகோதரன் ஏற்றதாய்மகனுக்கும்
எதிராக அவதூறாய்ப் பதிபோட்டிட்டாயென்று – துன்
5 இவைகள்நீ செய்யும்போது
மவுனமாயிருந்தேன்
இவர் என்னைப் போலேதான்
இருப்பாரென் றெண்ணினாய்
எண்பிப்பேன் ஒவ்வொன்றும்
உன்கண்முன் வைப்பனென்று – துன்
6 பிழைப்பிப்போனின்றி உங்களைப்
பீறிப்போடாமல்
அழிப்பில்லாந் தெய்வத்தை
அசட்டைசெய்வோர்களே
அனைவரும் இதையுணர்ந்
தஞ்சுங்களென்றுமே – துன்
7 எப்பவுந் தோ த்ரப் பெலிதான்
எனக்கிங்கே மகிமை
இப்படித் தன்வழிஎத்தனஞ்செய்வோற்கு
தற்பரன் ரட்சிப்புச் சாலவுமாகுமென்று – துன்