45 சங்கீதம்
45 சங்கீதம்
கோறாகின் மக்களிலோர் ராகத் தலைவனுக்கு
ஆறுதந்தி வீணையில் வாசிக்கத் தேறின
போதகமும் நேசப் புகழ்பாட்டு மாக வைத்த
தீதில்லா உன்னதப்பாட்டே
சௌராஷ்டகம் ஆதிதாளம்
( ஏசல் )
1 நல்விசேடம் என்னிதையம்
ராசனின்மேல்க் கவியாக ஊற்றும் எனது
நாவதற்குத் தேறினஒர்
கணக்கனுடை எழுத்தாணி தானே
எல்லாவித மாந்தரிலும்
சிறந்தஅழகு பொருந்தியிருக்கிறீரே உமது
நல்லுதட்டில் கிருபைசிந்தும்
நன்மைமிகச் சிறந்திருக்கு மல்லோ
2 சுவாமிஉம்மை என்றென்றைக்குஞ்
சுகமாக ஆசீர்வதிப்பாரே மகா
சுத்தவீரா! உம்முடைய
மகத்துவத்தில்ச் செயமாயேறி வாரும்
தவமகிமை மகத்துவமாம்
பட்டையத்தை அரையிலே நீர் தரித்து மகா
சத்தியம்நன் னீதியென்ற
சாந்தத்துக்கு மகாஇங்கே வாரும்
3 உம்முடைய வலதுகரம்
படிப்பிக்குமே பயங்கரமாஞ் செயலை உமக்கு
உம்முடைய அம்புகளோ
உயித்தத்துக்குக் கூர்மையாக இருக்கும்
கும்மலாக அதுகளினால்
சனக்கூட்டம் உமக்குக் கீழாய்விழுமே அதுகள்
குடைந்தரசன் சத்துருக்கள்
இருதயத்தை யூடுருவப்பாயும்
4 உம்முடைய ராசாசனம்
நிற்குஞ்சதாகாலம் என்றுமாக பிரபே
செம்மைச்செங்கோலாயிருக்கும்
உம்முடைய ராச்சியத்தின் செங்கோல்
றெம்மியமாய் நீதிதன்னில்
அன்புகூர்ந்து நடந்திடுவீரல்லோ கெட்ட
துன்மார்க்கம் பகைத்துமது
சுவாமிக்கேற்க நடந்திடுவீரல்லோ
5 உமது தெய்வம் இதினாலே
மனமகிழ்ச்சி எண்ணையினாலும்மை இங்கே
உமது தோழன் மாரைவிட
நலமாக அபிஷேகஞ்செய்தார்
உமதுடுப்பு வெள்ளைப்போளங்
காசியாவுஞ்சந்தணமும் மணக்கும் மன
துகந்த தந்த அரண்மனையி
லிருந்தெழுந்து வெளியேறும் பொழுது
6 ராசர்களின் குமாரத்திகள்
உம்முடைய நாயகிகளாமே தலைமை
ராசாத்திஒப்பிரின்
தங்கமாகவலபாரிசம் நிற்பாள்
நேசசங்கை குமாரத்தியே !
நீகேட்டுச் செவிசாய்த்துன் சனத்தை தகப்பன்
நெடுநாளின் வீட்டையுமே
மறந்தெசமான் வீட்டிற்பற்றம் வைப்பாய்
7 அப்போது தானுமது
அரசனுன தழகை விரும்பிக்கொள்வார் ஆமாம்
அவரேஉன் எசமானன்
அவரையேநீ வணங்கிக்கொண்டேயிருப்பாய்
அப்போதுதீறுநகர்ச்
சனமும்பணக்காரர்களும் வந்து உனக்
கதிகவெகுமானந் தந்து
வருந்துவார்கள் உனக்குமுன்னே நின்று
8 ராசாவின்மகள் உள்ளாக
நல்மகிமை பொருந்தியவளாமே அவள்
ராசன்முன்னே சரிகைச்சேலை
வருணப்புடவையுடுத்துக் கொணரப்படுவான்
நேசதோழிக் கன்னியர்கள்
அவள் பிறகேதொடர்ந்து வருவார்கள் அவர்கள்
நிற்சயமாய் உன்னண்டையில்ச்
சேர்க்கப்பட்டுக் கூடியிருப்பார்கள்
9 மகிழ்ச்சிகளிகூருதலாய்
மகாராசன் அரமனை சேர்வார்கள் உமது
மக்களெங்கும் பிரபுக்களாய்ப்
பிதாக்களுக்குப்பதில் பூமியாள்வார்
ஏகொவாவே உமதுபேரை
எல்லாத்தலைமுறைகளிலும் புகழ்வேன் உம்மை
இதுக்காகச் சனத்திரள்கள்
என்றென்றைக்குந் தோத்திரஞ்செய்வார்கள்