35 சங்கீதம்
35 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
1 என்னுடைய எதிரிகளோ
டென்வழக்கைப் பேசும்
என்னுடன்போர் செய்வோருடன்
எகோவாவேபோர் செய்யும்
2 கேடயத்தைப் பரிசையையுஞ்
சோடாகப் பிடியும்
பாடகற்றி யெனக்குதவி
பண்ணஇப்போ எழும்பும்
3 என்னைப்பின்னே தொடர்வோரை
யெதிர்த்தீட்டியோங்கும்
என்னான்மா வுடன் நானுன்
இரட்சிப்பென்று சொல்லும்
4 எனதுபிராணக் காதகர்க்கு
ஈனம்தோல்வி தீழ்ப்பும்
எனக்குப்பொல்லாங் கெண்வோர்க்கு
இகழ்ச்சியுமே வரட்டும்
5 பறந்திடட்டுங் காற்றுமுகப்
பதர்போலேயவர்கள்
தொடர்ந்திடட்டும் எகோவாதூதன்
சுருக்காயவர்கள்பின்னே
6 கிலேசமுடன் அவர்களென்னைக்
கிடங்கில் விழத்தள்ள
வலையெனக்கு காரணமாய்
மறைத்துப் பதித்தார்கள்
7 ஏதொருநல் முகாந்தரமு
மில்லாமலே குழியை
தீதாயென் ஆன்மாவுக்குத்
திறந்துவெட்டினார்கள்
8 அவனறியாப் பாழ்க்கடிப்பு
அவனுக்குவந்திடட்டும்
அவன்பதித்த வலைதனிலே
அவனே பிடி படட்டும்
9 அவனே பாழ்க் கடிப்பாக
அதிலேதான் விழணும்
அவனேபாழ்க் கடிப்பாக
அதிலேதான் விழணும்
10 அப்படியே எகோவாவிலென்
ஆத்துமங் களி கூரும்
எப்பொழுதும் அவருடைய
இரட்சிப்பிலே மகிழும்
11 சிறுமையோனை அவனைவிடச்
செயல்பெலத்தோன் கைக்கும்
சிறுமையானோன் எளியவனைத்
திருடிப்பறிப்போன் கைக்கும்
12 தப்பவைக்கும் உம்மைப்போலார்
தற்பரனேயென்று
தப்பாமலென் எலும்புயாவுஞ்
சந்தோஷித்துச் சொல்லும்
13 கொடுமையான சாட்சிகளோ
எனக்கெதிராயெழும்பி
இடும்பாகநா னறியாம
லிருந்ததைக்கேட்டார்கள்
14 என்நன்மைக்குப் பதிலாகத்
தின்மைசரிக்கட்டி
என்னாத்மம் முதலழிந்து
இடிந்திடப்பார்த்தார்கள்
15 அவர்களுக்கு வியாதிவந்து
அணுகியிருக்கும்போது
தவமாக ரெட்டுடுப்பைத்
தரித்துக்கொண்டேயிருந்தேன்
16 உபவாசத்தால் லென்னாத்மம்
உபத்திரப்படச் செய்தேன்
செபமும் எந்தன் மடிதனிலே
சேர்ந்து ரெட்டிப் பாச்சே
17 என் அன்பனும் பிறவியும்போல்
இனம்பாராட்டி நடந்தேன்
தன்தாய்க்குப்போல்த் துக்கத்துணியாய்த்
தலைகவிழ்ந்து நடந்தேன்
18 எந்தன்மேலே ஆபத்துகள்
எழும்பிவரும்போதோ
சந்தோசமாய்க் கூட்டங்கூடிச்
சக்கந்தஞ்செய்வார்கள்
19 எனக்கெதிராய் நொண்டிகளும்
யானறியாப் பேரும்
பிணக்குக் கூட்டங் கூடியென்னைப்
பீறியமராதிருப்பர்
20 சோற்றுக்காக மாயங்கேலிச்
சொல்லுகளும் விளம்பி
வீற்றிருப்போர்க் குள்ளிருந்தென்
மேலே பல்லைக் கடிப்பார்
21 ஆண்டவரே யெந்தமட்டும்
அதைப் பாரா திருப்பீர்
ஆண்டவரே யெந்தமட்டும்
அதைப் பாரா திருப்பீர்
22 என்னாத்மம் அவர்கள்செய்யும்
இடருக்ககலச் செய்யும்
என்தனிமை சிங்கக்குட்டிக்
கிடைந்து விலகச் செய்யும்
23 பெரிதான சபையிலும்மைப்
பிரபலமாய்த் துதிப்பேன்
திரளான சனத்துக்குள்ளே
தேட்டமாகப் புகழ்வேன்
24 வீணாகஎன் சத்துருக்க
ளானோர்களென் னிமித்தம்
ஈனமாகச் சந்தோஷப்பட்
டிருக்காமற் செய்யும்
25 காரணமில்லாமலென்னைக்
காய்ந்து பகைப்போர்கள்
பார்வையினால்க் கண்சிமிட்டிப்
பழிக்காமல்ச் செய்யும்
26 சமாதானமாய்ப் பேசாமல்ச்
சற்பனையாய் விபத்தை
அமர்ந்து தேசத் திருப்போர்க்கெதி
ராகயோசிப்பார்கள்
27 எனக்கெதிராய்த் தங்கள்வாயை
எதஷ்டமாகத் திறந்து
அதைக்கண்டதே எங்கள் கண்கள்
ஆகா என்கிறார்கள்
28 காண்பீர் அதை ஏகோவாவே
காட்டாதிரும் மவுனம்
ஆண்டவரே என்னைவிட்டு
அகன்றுபோகவேண்டாம்
29 எந்தெய்வமாம் எகோவாவே
என்னுடைய ஞாயம்
என்வழக்கும் பெலக்கவிழித்
தெழும்பி நில்லும்இப்போ
30 என்தெய்வமாம் எகோவாவே
என்நிமித்தம் அவர்கள்
சந்தோஷியா துமது நீதிச்
சார்பா யென்னைக் கேளும்
31 அவர்கள் தங்க ளிதையங்களில்
ஆகா! ஆத்துமாவே
அவனைக்கொன்று விளுங்கினோமென்
றறையாதிருக்கட்டும்
32 என்தீங்குக் காக மகிழ்ந்
திருப்போர்கள் வெட்கிக்
குந்தியேக மாக நாணிக்
கொண்டிருக்கச் செய்யும்
33 எனக்கெதிராய்ப் பெருமைகொள்வோர்
இகழ்ச்சியாக வெட்கி
ஒடுக்கமாக இலட்சையாலே
உடுத்தப்படக்கடவர்
34 என்நீதியை விரும்புகிற
எதார்த்தமான மனிதர்
மென்மேலுமே கெம்பீரித்து
மிகவும் மகிழச்செய்யும்
35 தம்மடியான் சமாதானத்தைச்
சார்ந்துசொள்ளும் எகொவா
தம்மகிமைக்குடையோரென்று
சாற்றட்டும் எப்போதும்
36 என்நாவு உமதுநீதி
மென்மேலுமே சொல்லும்
எந்நாளிலும் உமதுதுதியை
எண்ணமாகப் பாடும்