31 சங்கீதம்
31 சங்கீதம்
குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
1 – வது பங்கு வச .1 – 8
செஞ்சுருட்டி ஆதிதாளம்
உம்மைநம்பினேன் எகோவா
உம்மை நம்பினேன் – எனக்
கோர்நாளும் வெட்கம் நேரிடவேண்டாம்
உம்மை நம்பினேன்
1 உம்முடைநீதியி னிமித்தியம் என்னை
உகந்துவிடுவித் தருளுமே – உம்
2 என்னண்டைக்குமது செவிதனைச்சாய்த்து
என்னைச்சீக்கிரந் தப்பவையும் – உம்
3 என்னைரட்சிக்க எனக்கு நீர்பெலத்த
கன்மலையரண்மனை யாகஇரும் – உம்
4 கன்மலைகோட்டை யெனக்குநீரென்னை
உம்முடை நிமித்தியம் வழிநடத்தும் – உம்
5 எனக்கென்றுமறைவாய் அவர்களிங்கமைத்த
வலைக்கென்னைவிலக்கி விடுவியுமே – உம்
6 என்னுடைபெலன்நீர் உம்முடைகையில்
என்னாவிஒப்புக் கொடுக்கிறேன் நான் – உம்
7 சத்தியபரனாம் எகோவாநீர் தாமே
முற்றிலும்என்னை மீட்டுவிட்டீர் – உம்
8 வீண்மாய்கைதன்னைக் கைக்கொள்வோரை
நான்பகைத்தும்மை நம்பிக்கொண்டேன் – உம்
9 உம்முடைகிருபையில்ப் பூரித்துமகிழ்வேன்
என்மகாச்சிறுமைநீர் பார்த்தீரே – உம்
10 உருக்கமாயெனது ஆத்துமாதனைநீர்
நெருக்கத்தில்த்தானும் அறிந்துகொண்டீர் – உம்
11 பாதகன்கையி லெனைவிட்டிடாமலென்
பாதத்தைவிசாலத்தில் நிற்கவைத்தீர் – உம்
2 – வது பங்கு வச .9 – 13
செஞ்சுருட்டி ஆதிதாளம்
எனக்கிங்கிரங்கும் எகோவாவே
1 எனக்கிங்கே நெருக்கமுண்டா
யிருக்கிற திருக்குதே – என
2 என்கண்என் ஆத்துமா என்வயறுங்கூட
கன்மத்துச் சலிப்பனாலே
கருகியேபோயிற்று – என
3 சஞ்சலத் தென்பிராணன் சலிப்பாலென்வருடமும்
தொய்ஞ்சு வம்பராய்க் கழிந்து
தொலைந்திங்கே யோடிற்று – என
4 என்னுடைசத்துருக்கள் எல்லாரின் நிமித்தியம்நான்
என்னயலார்க்குமகா
இகழ்ச்சியுமாகினேன் – என
5 அறிமுக மானமாந்தர்க் கதிர்த்தியு மாகினேன் நான்
தெருவில்க்காண்போரும் என்னைச்
சீயென்பர்விட்டோடுவர் – என
6 செத்தோனைப் போலெல்லாருஞ்
சிந்தையால் என்னைமறக்க
பொத்தஒர் பாத்திரத்தைப்
போலநா னாகினேன் – என
7 அவதூறே யனேகர் செய்தார்
அவர்களிங் கெனக்கெதிராய்
விவத்தாலோசனை கூடி
வினைவிளைத்தார்களே – என
8 ஆகையினாலே திகில்
அடியேனைமிகச் சூழ்ந்தே
சாகஎன் பிராணன்வாங்கத்
தாப்புக்கொண்டார்களே – என
3 – வது பங்கு வச .14 – 24
செஞ்சுருட்டி ஆதிதாளம்
உம்மை நம்பினேன் என்ஏகோவாவேநான்
உம்மை நம்பினேன் நீர் என்தெய்வமென்றே
உம்மை நம்பினேன்
1 உம்முடை நல்லகரத்தில் உற்றதே என்காலங்கள்
ஒகோஎன்பகைஞர் பொல்லாக்கைக்கென்னை தப்பவையும்
உக்ரமாயென்னைப் பின்னேதொடரும்
அக்கிரமக்காரரின் கைக்கென்னை விலக்குமே – உம்
2 உமதூழ்யக்காரன்மேலே உம்முடைநல்முகத்தின்
ஒளிவீசச்செய்துமது தயையால்க்காப்பாற்றுமென்னை
உமைநோக்கிக்கூப்பிடும் எனைவெட்கஞ்சூழ்ந்திட
ஒருக்காலுமிடங் கொடுத்திடவேண்டாம் – உம்
3 ஆகாதமாந்தர்வெட்கி ஆதேசில்மவுனமாகப்
போகட்டும் நீதிமான்மேல் பொங்கிய அகந்தையோடும்
அசங்கத்தோடேயுங் கடினமாய்ப்பேசியே
அசத்தியஉதடுகள் கட்டுப்படட்டுமே – உம்
4 உமைநம்பும்மனிதருக்கும்உமக்கஞ்சிநடப்போருக்கும்
உலகமக்கட்கெதிரேஉண்டுபண்ணிவைத்திருக்கும்
உமதுமெய்நன்மைகள் எத்தனையோதிரள்
உமதுமெய்நன்மைகள் எத்தனையோதிரள் – உம்
5 அவர்களைஉம்முடைய முகத்தின்நன்மறைவினாலே
ஆகாதமனுடர்களினிடும்புக்கே யகற்றிக்காத்து
அவர்களைஉம்முடை கூடாரந்தனில்
அமளிசெய்நாவின் போரைவிட்டொளிக்கிறீர் – உம்
6 ஏகொவாவுக்குத்தோத்ரம் என்னையிங் கரண்நகரில்
இருத்தினமேரையாக என்மேலே அதிசயம்
ஆகச்செய்தனர்தம்முடை கிருபையை
ஆகச்செய்தனர் தம்முடை கிருபையை – உம்
7 உம்முடைகண்முன் இல்லா
தறுந்திட்டேனென்று நானே
என்மனசுக்கலக்கத்தில்ச்
சொல்லிநான் முறையிட்டாலும்
உம்மைநான் நோக்கியே கூப்பிட்ட வேளையில்
என்னுடை விண்ணப்பச்சத்தத்தைக்கேட்டீரே – உம்
8 எகொவாநல்விசேடத்தோரேஎல்லாரும் அவரைநேசித்
திவரைக்காந்திருக்கும் நீங்கள்
எல்லாருந் திடன்கொள்ளுங்கள்
எகொவாஉத்தமர் தமைத்தற்காத்தே
அகங்கொண்டவனுக்கு
மிகப்பதில் செலுத்துவார் – உம்