27 சங்கீதம்
27 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1 வது பங்கு வச.1 – 6
காம்போதி சாபுதாளம்
ஏகொவாவேயென் வெளிச்சமும்எந்தன்
இரட்சிப்புமாகினாரே – எந்தன் இரட்சிப்புமாகினாரே
ஆகையால் யாருக் கஞ்சுவேன் ஆமாம்
அவரென்சீவன் பெலனே
1 ஏகொவாவுக்கேயன்னியில் இனி
யாருக்குநடுநடுங்குவேன் (மகா) – ஏகொ
2 என்பகைஞரும் மாற்றாரு மாக
எனக்கிங்கே யிருக்கும்பொல்லார்
எனதுமாங்கிசம் பட்சிக்க வந்து
என்னண்டை சேரும் போது
சன்னமாய்ப்பெல னற்று அவர்கள்
தாமேதட்டுண்டு வீழ்வர்கள் (மகா) – ஏகொ
3 எனக்கெதி ராகப் பாளயம்வந்து
இறங்கியும் மனங் கலங்கேன்
எனக்குமே லாக உயித்தந் தொடுத்து
எழும்பியே வந்திட்டாலும்
இணக்க நம்பிக்கையாகவே இதில்
இருக்கிறேன் சுவாமிமேலே(மகா) – ஏகொ
4 ஒன்று நானவரைத் கேட்டேன் ஆம் அது
ஒன்றையே இன்னந்தேடுவேன்
என்தெய்வ இன்பம்பார்த்து அவர்
இல்லத்தில் ஆராய்வதுக்கு
என்சீவநாளிலெல்லாம் அவ
ரிடத்தில்த்தங்குவததுவே(மகா) – ஏகொ
5 என்னைத்தீங்குநாள்த் தமதுகூடார
இடத்திலே நன்றாயொளித்து
என்னைத்தம்முடை கூடாரஒதுக்கில்
இடுக்கம்நீங்கிடமறைத்து
என்னைக்கன்மலை மீதிலே சபைக்
கேற்கமேன்மையா யுயர்த்துவார்(மகா) – ஏகொ
6 என்னைச்சுற்றியே இப்பவுமுள்ள
என்னுடை பகைஞர் மீதிலே
என்னுடைசிரசுயரும் அதற்
கென்றவர் கூடாரத்திலே
என் துதிப் பெலியைப் பாட்டுடன் அங்கே
யிட்டுக்கீர்த்தனஞ் செய்துவேன் (மகா) – ஏகொ
2 வது பங்கு வச.7 – 14
நாகவராளி ஆதிதாளம்
என்சத்தங் கேட்டிரங்குமே நான்கூப்பிடும்
என்சத்தம் கேட்டிரங்குமே
1 என்சத்தங் கேட்டெனக்கு
இரக்கத்தைக் காண்பித்தருளும்
எனக்குநீர் உத்தரவை
ஏகோவாவே தந்தருளும் – என்
2 என்முகத்தைத் தேடுங்களென்றீர் என்றெனது
இருதயமேஉமக்குச் சொல்லுமே
என்சுவாமி உம்முடைய
முகத்தைநான் தேடுகிறேன்
எனக்கு நீர் உம்முடைய
முகத்தையே மறைக்கவேண்டாம் – என்
3 கோவமாயுமதடியேனை விலக்காதையுங்
கோவேநீர் என்சகாயமே
தேவரீர்என் ரெட்சிப்பின்
தெய்வமாகையால் என்னைச்
சிதறவிட்டிடாதையுங்
கைவிட்டிடவும் வேண்டாம் – என்
4 என்தாயுந் தந்தையுமென்னைக் கைவிட்டார்கள்
ஏகோவா என்னைச்சேர்க்கிறார்
என்மாற்றார் நிமித்தமுமது
வழியைநா னறியச்செய்து
என்னைநீர் செம்மையான
பாதையில்ப் போகச்செய்யும் – என்
5 என்னுடைய பகையாளிகள் மனப்படிக்கு
என்னைநீர் விட்டிடாதையும்
உன்னிப்பொய்ச்சாட்சிகளும்
வன்மித்துச் சீறுவோரும்
ஒருமித்தே யெனையெதிர்த்து
உரமாக எழும்பினார்கள் – என்
6 சீவனுள்ளவர்கள் தேசத்தில் சுவாமிதன்னை
தெரிசிப்பேனென்று நம்பினேன்
தேவனைக் காத்திருந்து
பெலனை நான் தரித்துக்கொண்டு
திடநெஞ்சா யிருந்துகொண்டு
தெய்வத்தைக் காத்திருப்பேன் – என்