24 சங்கீதம்
24 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
வெண்பா
பூமியதின்நிறைவு பூமண்டலங்குடிகள்
சாமியெகோவாவின் சம்பத்தே பூமிக்கு
அஸ்திவாரம்போட்டுறுதி யாக்கினாராறுகடல்
வற்றமுங்க லாயிருக்கவே
துசாவந்தி ஆதிதாளம்
யார்எகோவா பரிசுத்தமாந்
தலத்தில் நிலைத்திருப்பான்
யார்எகோவா பற்வதத்தில்
ஏறுவானவனிவனே
1 காரியமாய் ஆத்துமாவை
மாய்கைக்கொப்புக்கொடுக்கான்
கையில்மாசற்றோன் இருதயசுத்தன்
கவடாயாணைசொல்லான் – யார்
2 தன்ரெட்சிப்பின் தெய்வத்தாலே
நீதிபெறுவோன் இவனே
தற்பரனாலாசீர்வாதம்
பெறுபவனும் இவனே
அன்புடனே யவருக்காக
விசாரித்துக்கேட்டு
அவரின்நற்சமுகம் தேடும்யாக்கோபின்
அங்கிசவித்து இதுவே – யார்
3 வாசல்களே அனாதியின்
வாசல்களே உயர்ந்து
மகிமைராசன் உள்ளேவரத்
தலைகள் நிமிர்ந் திடுங்கள்
வாசமுள்ள இந்தமகிமை
ராசனானவர் யார்தான்
வல்லமைவீரம் உயித்தவீரமாய்
வந்தஎம்சுவாமி தாமே – யார்
4 வாசல்களே அனாதியின்
வாசல்களே உயர்ந்து
மகிமைராசன் உள்ளேவரத்
தலைகள் நிமிர்ந்திடுங்கள்
வாசமுள்ள இந்தமகிமை
ராசனானவர் யார்தான்
மகாசேனையின் எகோவாதாமே
மகிமைராசனும் அவரே – யார்