22 சங்கீதம்
22 சங்கீதம்
வெண்பா
அதிகாலைவேட்டையில் ஆப்பட்ட பெண்மான்
ததிபோல்க் கவிகட்டிப் பாடி பதிவாக்கி
ராகத்தலன்க்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
1 வது பங்கு. வச . 1 – 21
முகாரி சாபுதாளம்
எனதுதெய்வமே எனதுதெய்வமே
என்னைக் கைவிட்ட தேதிப்போ
எனதம்பாயச்சொல்க் கேட்டுமீட்டிடா
தேன்நீர் தூரமாயிருக்கிறீர்
1 எனதுதெய்வமே பகலிற்கூப்பிட்டேன்
எனக்குமறுமொழி கொடுத்திடீர்
எனதுமனதிலோர் அமைதலுமில்லை
இரவில்நான் கெஞ்சிக்கூப்பிட்டும் – எனது
2 இசரவேலுடை துதிக்குள்வாசமா
யிருக்குந் தேவரீர்பரிசுத்தர்
விசுவாசம்உம்மில் வைத்த எங்களின்
மேன்மைமுன்னோரை விடுவித்தீர் – எனது
3 நம்பிமன்றாடுங் கெட்டியாலவர்கள்
நாசப்போங்குக்குத் தப்பினர்
உம்மைநம்பிய அவர்கள் வெட்கத்தை
ஒருக்காலுங் கண்டதில்லையே – எனது
4 நானோ மானிடனல்லப் பூச்சிதான்
நரரின் நிந்தனை யசட்டைதான்
நானோகண்டபேர் யாவராலுமே
நாணக்கேலியு மாகினேன் – எனது
5 நம்பிக்கையிவனைக் காக்கட்டுந்தெய்வ
நாட்டமீட்கட்டிப்போ என்று
வம்புபேசுவர் உதட்டைக் காட்டுவர்
வசையதாய்த்தலை குலுக்குவர் – எனது
6 என்னைக்கெற்பத்தி லிருந்திங் கிழுத்ததும்
எனது தாயின்பால் குடிக்கையில்
என்னையும்மிலே நம்பிக்கையுட
னிருக்கச்செய்ததுந் தேவரீர் – எனது
7 எனது தாய்கெற்பத் திருந்தே உம்முடை
இன்பச் சார்பில்நான் விழுந்தேன்
எனதுதாய் வயற் றுற்பத்திதொடுத்
தெனதுதெய்வமுந் தேவரீர் – எனது
8 என்னைநீர்விட்டுத் தூரமாகவே
இடுக்கமாய் விலகிடாதையும்
துன் பமாய்வெகு நெருக்கங்கிட்டிற்று
துணைசெய்வோர்களும் இல்லையே – எனது
9 அநேகங்காளைகள் என்னைச் சூழ்ந்தது
ஜயையோ பாசான்தேசத்துக்
கனதியெருதுக ளென்னைச் சுற்றிலுங்
கடினமாய் வளைந்து கொண்டதே – எனது
10 பீறிக்கெற்சிக்குஞ் சிங்கம்போலவே
பிளப்பர் வாயை என்பேரிலே
ஏறுந்தண்ணீர் போலூற்றுண்டேனென
தெலும்பெல்லாங் கட்டுவிட்டதே – எனது
11 என்னுடைஇதையம் மெழுகுபோலாகி
என்குடல்க்குள்ளே யுருகிற்று
என்சதைப்புஷ்டி ஒடுபோல்வற்றி
எனதுநாவண்ணம் ஒட்டிற்றே – எனது
12 மரணத்தூளிலே என்னைப்போடுறீர்
வந்தென்னை நாய்கள்சூழ்ந்தது
இரணத்திரள் துஷ்டர் என்னைச் சூழ்ந்தனர்
என்கைகா லுருவக்குத்தினர் – எனது
13 என்னெலும்பெல்லாம் நானேயெண்ணலாம்
என்னையே யுற்றுப் பார்ப்பார்கள்
என்னிலே தங்க ளிதைய வாஞ்சையை
இட்டமாய்ப் பார்க்கிறார்களே – எனது
14 எனதுவஸ்திரந் தங்களுக்குள்ளே
யெடுத்துப் பங் கிடுகிறார்களே
எனது அங்கிமேல்ச் சீட்டுப்போட்டொருவ
னெடுத்துக்கொள்ளவும் நேர்ந்ததே – எனது
15 எனக்குத் தூரமாய்ப் போய்விடாதையும்
ஏகோவா உயிர்த் தெய்வமே
எனக்கொத்தாசைகள் பண்ணிடவிரைவாய்
எழுந்தருளும் என் பெலனே – எனது
16 எனதுஆத்துமம் பட்டயத்துக்கு
இடைந்துவிலகிடச் செய்யுமே
எனதுதனிமையை நாய்களின்துட்ட
இடருக்கு விலக்கி யருளுமே – எனது
17 காண்டாமிருகங்கள் கொம்புக்கென்னைநீர்
கடத்திரட்சியுந் தெய்வமே
மீண்டுஞ்சிங்கவாய்க் கென்னைநீர் விலக்கி
விண்ணப்ப மனுக்கேளுமே – எனது
2 வது பங்கு. வச . 22 – 31
வெண்பா
உம்முடையநாமத்தை உத்தமமாயென்னுடைய
சென்மச்சகோதரருக் கெண்பித்து உம்மைத்
திரண்டசனங்கூடுந் தெய்வசபைக்குள்ப்
பரனே துதிசெய்குவேன்
ஆனந்த பயிரவி சாபுதாளம்
எகோவாவுக்குப் பயப்பட்டோர்களே நீங்களவரை
யேற்றிப்போற்றியே தோத்ரஞ்செய்யுங்கள்
1 மகாயாக்கோபின் வித்தும் இசரவேல்
வங்கிசமுமாம் நீங்கள் யாவரும்
ஏகோவாவுக்கே யஞ்சிக்கையுடன்
இருந்தவரையே கணிசஞ்செய்யுங்கள் – எகோ
2 அல்லல்பட்டவன் சிறுமையைக்கற்தர்
அசங்கதஞ்செய்யார்
அருவருப்பதில்க் கொள்ளவுமாட்டாரே
செல்லமாந்தமது முகத்தையிங்க வனுக்குத்
திரும்பத் திரும்பவும் மறைத்திடாரவன்
தெய்வமாந்தம்மை நோக்கிக்கூப்பிடுஞ்
சிறுமைக்கூக்குரல்
கேட்டுத் தயைசெய்வார் – எகோ
3 உம்மைக்குறித்துநான் திரண்டசபையிலே
துதிகள்சொல்லுவேன்
உமக்குப்பயந்திடும்
மாந்தர்முன்னேதான்
செம்மையாயெனது பொருத்தனைசெலுத்துவேன்
சிறுமையானபேர் வயறாரப்புசிப்பார்கள்
தெய்வதேட்டர்க ளவரையேதுதிப்பார்கள்
செழிக்குமென்றென்று முங்களி னிருதயம் – எகோ
4 பூமியெல்லைகள் யாவும்இதுகளை
நினைந்தே யெகோவா
புறமாகவே திரும்பிவந்திடும்
சாமியுமக்குமுன் புறச்சாதியார்களின்
சகலசனங்களும் பணிந்திடச்செய்யுமே
பூமிராச்சியஞ் சுவாமிக்கே யுரியது
புறச்சாதிச் சனத்தையும்
அவரேயாளுவார் – எகோ
5 பூமியில்ச்சதைப் புஷ்டியுள்ளபேர்
அடங்கலாகவே
புசித்துத்தெய்வத்தைப்
பணிந்துகொள்ளட்டும்
சேமச்சீவனுஞ் செய்து தூளில்த்தம்
தேகம்பட்டிட மனமில்லாதபேர்
சாமிசமுகத்தி லடங்கலாகவே
சரணங்செய்திடக் குனிந்துபணியட்டும் – எகோ
6 தெய்வாராதனை செய்யும்வித்துதான்
தலைமுறைகளாய்த்
தெய்வத்துடையதென்
றெண்ணப்படுகுமே
மெய்யாயிதுகளை
யவர்செய்தா ரென்றிங்கே
மென்மேல்ப் பிறந்திடுஞ்
சந்ததிக்கவருடை
மேன்மைநீதியைத் திறமையுடன்வந்து
விவரிப்பார்களே தெரிவிப்பார்களே – எகோ