12 சங்கீதம்
12 சங்கீதம்
குறள் – எண்ணரம்புவீணை யிராகத் தலைவனோதும்
மன்னனாந் தாவீ தின் பாட்டு
தோடி சாபுதாளம்
றெட்சியுமே எகொவா! றெட்சியுமே
1 நிச்சயமாகச் சன்மார்க்கர்க ளற்றனர்
நீணிலமனுப்புத்திரருக்குள்
அற்சயவுண்மை யுள்ள மாந்தரோ
அநேகமில்லையே குறைந்துபோயினர் – றெட்
2 அவரவர் தங்கட் கடுத்த பேருடன்
அவத்தம்பேசுவர் இச்சக உதட்டினால்
அவர்கள்பேசுவர் இருமனதாலும்
அருமேபெருமை நாக்கிச்சக உதட்டையும் – றெட்
3 எங்களினுதட் டிசைவையே செலுத்துவோம்
எங்கள்நாவினால் மேல்வட்டமாகுவோம்
எங்களுக்கெவ னாண்டவனென்று
இடும்பதாகவே அவர்கள் சொல்வார்கள் – றெட்
4 எளியவர்களின் பெருமூச்சினிமித்தமும்
இடுக்கமுற்ற வனடைந்த பாழ் நிமித்தமும்
எழுந்திருந்திப்போ தொய்ஞ்சவன் சுகத்துடன்
இருக்கச்செய்வமென் றாண்டவர் சொல்கிறார் – றெட்
5 எகொவாசொல்லியே இவ்விதவார்த்தைகள்
எழுதரம்மண்ணின் குகையிலேபுடம்வைத்த
மிகையற்றவெள்ளிக்கொப்பான சுத்த
மேன்மையின் சொற்களா யிருக்கிறதல்லவோ – றெட்
6 அவனவனிந்தச் சந்ததிக்ககலட்டும்
அவர்களையென்றுங் காப்பாற்றும் மனுமக்கள்
அவையிற்சண்டாளர் உயர்ந்திடும்போதிலே
ஆகாதோர்எங்கெங்குஞ் சுற்றியேதிரிவார்கள் – றெட்