136 சங்கீதம்
136 சங்கீதம்
Music Mp3
1-வது பங்கு. வச.1-9
கமாசு ஆதிதாளம்
ஏகோவாவைத் துதியுங்கள் அவர்
கிருபை நித்தியம்
1 ஏகோவாவே நல்லவர்
என்றுந் தாமாயுள்ளவர்: (மகா) -ஏகோ
2 தேவாதி தேவனை
ஆவலாகத் துதியுங்கள்: (மகா) -ஏகோ
3 கற்தாதி கற்தரை
நித்தம்நித்தந் துதியுங்கள்: (மகா) -ஏகோ
4 பெரிய அதிசயங்களை
ஒருவராகச் செய்கிற: (மகா) -ஏகோ
5 வானம் பரமண்டலம்
ஞானமாகச் சிருட்டித்த: (மகா) -ஏகோ
6 நேமியென்ற கடலுக்குப்
பூமி உயரச் செய்திட்ட: (மகா) -ஏகோ
7 பெரியபெரிய வெளிச்சங்கள்
உருவமையச் செய்திட்ட (மகா) -ஏகோ
8 பகலிலாளச் சூரியன்
வகையாயமைத்து வைத்திட்ட: (மகா) -ஏகோ
9 இரவிலாள்ச் சந்திரன்
கிரகம்வெள்ளி வகுத்திட்ட: (மகா) -ஏகோ
2-வது பங்கு. வச.10-22
ஏகோவாவைத் துதியுங்கள் அவர்
கிருபை நித்தியம்
1 எகிப்துநாட்டுத் தலைச்சன்கள்
அகத்திலழிய அழித்திட்ட (மகா) -ஏகோ
2 இசரவேலை அங்கிருந்
திசைந்தகலச் செய்திட்ட (மகா) -ஏகோ
3 பலத்தகையால் நீட்டின
புயத்தாலதைச் செய்திட்ட: (மகா) -ஏகோ
4 சிவந்தகடல் நீர்றெண்டு
பவிஞ்சாயொதுங்கச் செய்திட்ட: (மகா) -ஏகோ
5 இசரவேலை யதின் நடு
விசைந்துநடக்க வழிவிட்ட: (மகா) -ஏகோ
6 பார்வோன்சேனைப் பெலத்துடன்
நீரிலழியச் செய்திட்ட: (மகா) -ஏகோ
7 அநேகமான தம்முடை
சனத்தைவனத்தில் நடத்தின: (மகா) -ஏகோ
8 பெரியபெரிய அரசர்கள்
நெரிந்தழிய அடித்திட்ட: (மகா) -ஏகோ
9 வல்லமையின் வேந்தரைக்
கொல்ல அற்புதஞ் செய்திட்ட: (மகா) -ஏகோ
10 ஏமோர்வேந்தன் சீகோனை
நாமப்படக் கொன்றிட்ட: (மகா) -ஏகோ
11 பாசான்வேந்தன் ஒகையும்
நாசமாக்கிக் கொன்றிட்ட: (மகா) -ஏகோ
12 இவர்கள் நாட்டைச்சுதந்தரப்
பவிசாகத்தந் தருளின: (மகா) -ஏகோ
13 தமதூழ்ய இசரவேல்
வமிசச் சொந்த மாக்கின: (மகா) -ஏகோ
3-வது பங்கு. வச.23-26
ஏகோவாவைத் துதியுங்கள் அவர்
கிருபை நித்தியம்
1 நம்முடைய சிறுமையில்
நன்மையன்பாய் நினைந்திட்ட: (மகா) -ஏகோ
2 பகைவர் கையி னின்றெம்மைச்
சுகமாய்மீட்டு ரட்சித்த: (மகா) -ஏகோ
3 சீவராசி யாவுக்குந்
தேவையுணவு கொடுக்கிற (மகா) -ஏகோ
4 பரமண்டலம் யாவுக்கும்
பெரிய தெய்வமாகிய: (மகா) -ஏகோ