1 சங்கீதம்
1 சங்கீதம்
இராகம்:சங்கராபரமணம் ஆதிதாளம்
பாக்கியவாளனிவனே மகா
பாக்கியவாளனிவனே
1 மார்க்கந்தப்பினோராலோசனையில்
மசியான் அதில் நடவான் – பாக்கி
2 பாவிகளுடை வழியில் அவன்
பரிச்சேதமாய் நில்லான்
ஒவியச்சக்கந்தஞ் சொல்வோரிடத்தில்
உளுக்காராமல் நீங்குவான் – பாக்கி
3 கற்தர் வேதந்தனிலே மகா
காதல் கொண்டே யிருப்பான்
நித்தம் இரவும் பகலும் அதையே
நினைத்துத் தியானங்கொள்வான் – பாக்கி
4 வாய்க்காலோராம் நின்று இலை
வாடாதோங்தித் தளைத்து
காய்க்குங்க்காலக் கனியின் மரம்போல்க்
கையின் செயல்கள் பலிக்கும் – பாக்கி
5 காற்றிலோடும் பதர்போல்ப் பொல்லார்
கடந்தோடிய் பொழுதும்
சற்றும்ஞாயத் தீர்ப்பிலவர்கள்
தரிக்காதிருக்கும் போதும் – பாக்கி
6 நீதிமாங்கள் சபையில்ப் பாவி
நிற்கா திருக்கும் போதும்
நீதியர் வழிகள் நிலைத்த நீதர்
நெறி கள ழியும் போதும் – பாக்கி