96 சங்கீதம்
96 சங்கீதம்
முகாரி சாபுதாளம்
புதுப்பாட்டைப் பாடிடுங்கள் எல்லாப்
பூதலமாந்தர்களே
1 துதித்துநம் சுவாமியி னாமத்துக் கானந்த
தோத்திரஞ்செய்திடுங்கள் அவரால்
தோன்றியஇரட்சிப்பைப் பாடியேதினந்தினம்
சுவிசேடமாய்ச் சொல்லுங்கள் -புது
2 சாதியார்க்குள்ளேகற்தர் மகிமைத்
தாரிப்பைவிவரியுங்கள் எல்லாப்
பூதலச்சங்கமாம் யாவர்க்குமவருடை
புதுமையைவிவரியுங்கள் அவர்
பூர்த்தியாய்ப்பெரியவர் மிகுதியுந்துத்தியம்
புகழ்ச்சியு மிகுத்தவரே -புது
3 தேவர்கள்எல்லாரிலும் கற்தர்
திகிழ்படத்தக்கவரே எல்லாப்
பூவுலகச்சனத் தெய்வங்கள் யாவும்வீண்
பொம்மைகள் விக்கிரகங்கள் கற்தர்
போர்ந்தஇவ்வானங்கள் சேர்ந்துருவாகவே
பூட்டியமெய்த்தெய்வமே -புது
4 மகிமையும் மகத்துவமுங் கனம்
வலுமையும் அவருடைய மகாத்
தகுஞ்சமுகத்தினும் விசேடமாந்தலத்திலும்
தாக்கமாயிருக்கிறதே உலகச்
சாதிகளேயிந்தச் சுவாமிக்கே மகிமையுஞ்
சமர்த்துமே செல்லுமென்று -புது
5 கற்தரினாமத்துக்கு மகிமை
காணிக்கைப் பெலிசெலுத்தி நமது
கற்தரின்பிரகாரத் துள்ளேபிரவேசித்துச்
சுத்தத்தின் அலங்காரமாய்ப் பணிங்கள்
காசினிக்குடித்தன மான எல்லோர்களே
கற்தருக்கஞ்சிடுங்கள் -புது
6 கற்தரேராசரிக்கஞ் செய்து
காசினியாளுகிறார் அதினால்
நித்தமுமசையாமல் நிகுதியுடனது
நேர்மையை யடைந்திருக்கும் இந்த
நீணிலச்சாதிகள் ஞாயத்தைக்கற்தரே
நேர்படச் செய்திடுவார் -புது
7 வானங்கள்மகிழ்ந்திடவே பூமி
மகிழ்ச்சியா யமர்ந்திருக்க இந்தச்
சேனை நீர்ச்சமுத்திர நிநைவுமேமுழங்கிடத்
தேசமுங்களிகூர அதில்ச்
சேர்ந்ததும்வெறுங்காட்டு விருட்சமும்யாவுமே
தெய்வத்தின் முன்களிக்கும் -புது
8 பூமிக்குநீதிசெய்யக் கற்தர்
புயபெலமாய்வருவார் அவர்
பூமிக்குநீதியாந் தீர்ப்பையு மருளுவார்
பூதலாச்சாதிகட்கு வெகு
பூரணவுண்மையாய் ஞாயங்கள் தீர்த்திந்தப்
புவியையும் நடத்திடுவார் -புது