84 சங்கீதம்
84 சங்கீதம்
சவலை வெண்பா
கோராகின்புத்திரரின் ராகத் தலைவனுக்கு
கோர்வையாய்க் கீதத்தின் நாதமாய் வாசிக்க
நேராக ஒப்புவித்த பாட்டு
வராளி ஆதிதாளம்
சேனைத்திரளின் ஏகோவாவே உமது வீட்டின்
செல்வவாச ஸ்தலங்களெத்தனை யின்பம்
1 ஞானஎகோவா பிரகாரங்களின்மேலே மகா
நாட்டமும் வாஞ்சையு
மாகும்என்னுடை ஆத்துமம் – சேனை
2 என்னுடைஇதையம் மாம்சமும் சீவனேயுள்ள மகா
எகொவாவைநோக்கியே கெம்பீரச்சத்தமிடுமே
என்னுடைஇதையம் மாம்சமுஞ்சீவனேயுள்ள மகா
எகொவாவைநோக்கியே கெம்பீரச்சத்தமிடுமே – சேனை
3 தகைவிலான் குருவிக்கும்
அடைக்கலான்குருவிக்கும் அங்கே தங்கத்
தகுந்தகூடும் இடமுங்கிடைப்ப துண்டே
எகோவாவான எனதுராசனாம் சுவாமீ உமது
இடமாம்பீடங்கள் என்னுடை வாஞ்சனை தானே – சேனை
4 உம்முடைவீட்டில் வாசமாயிருந்தெப்போதும்உம்மை
இன்பமாய்த்துதிக்கும் மானிடர் பாக்கியவான்கள்
உம்மில் பெலன்கொண்ட
மாந்தனுந்தங்களின் நெஞ்சில் வழியைச்
செய்மையாக்கின மாந்தரும்பாக்கியவான்கள் – சேனை
5 அழுகைப்பள்ளங் கடந்தேயவரை நீருற் றாக்க
அதனமழையால் குளங்கள் நிரம்பிப்போகும்
அழகுச்சீயோனில்த் தெய்வசமுகங்காணும் வரைக்கும்
அவர்கள்பெலத்தி லிருந்து பெலத்தையடைவர் – சேனை
6 மிகுந்தசேனையின் தெய்வமாம் எகோவாவே எனது
விண்ணப்பச்சத்தத்தைக் கேட்டருளும்வெகுதயவாய்
தகுந்தயாக்கோ புடையதெய்வமேஎனதுமகாத்
ததியின்செபத்தைக் கேட்கச் செவியைச்சாயும் – சேனை
7 எங்கள்கேடைய மாகிய தெய்வமானவரே நீர்
எங்கள்பேரில்க்கண் நோக்கமாயிருந்தருளும்
மங்களமாகநீரபிசேகஞ்செய்துவைத் திருக்கும்எங்கள்
மன்னவராகிய தலைவர் முகத்தைப்பாரும் – சேனை
8 ஆயிரம் நாளிலும் உம்முடையபிரகாரத் தலத்தில்நாங்கள்
ஆசையாய்க்கூடிய ஒரே நாள்மிக நல்லதே
ஞாயக்கேடுள் ளோர் கூடாரம் வசித்திருப்பதிலும்
நாயன் ஆலய வாசல்க்காப்பதை ஒப்புவேன் [ எனது – சேனை
9 எகோவாவாகிய தெய்வமோசூரியன் கேடயம் அவர்
ஏற்றகிருபை மகிமைமென்மேலுந் தருவார்
உகந்து நன்மையை வழங்காதிருக்கமாட்டார் மன
உண்மையாய்நடக்கும் மாந்தர்களாகியபேர்க்கே – சேனை
10 சேனைத்திரளின் ஏகொவாவே உம்மை நம்பித்
திடத்தமானிடன் பாக்கியவாளன்தானே
சேனைத்திரளின் ஏகொவாவேஉம்மை நம்பித்
திடத்தமானிடன் பாக்கியவாளன்தானே; – சேனை