23 சங்கீதம்
23 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
மலகரி ஆதிதாளம்
தற்பரனே எனதுமேய்ப்பர்
தாழ்ச்சியைநான் அடையேன்
1 மெய்ப்பரன்புல்த் தறையிலென்னை
மேய்த்துக் காப்பாரே (மகா) – தற்ப
2 ஊற்றின்சுத்த தண்ணீ ரண்டை
சேர்த்திடுவாரே என
தாத்துமத்தின் தாபம் என்னில்
அமரச்செய்வாரே (மகா) – தற்ப
3 நம்நாம நிமித்தமென்னில்த்
தயவுவைப்பாரே வெகு
செம்மையுள்ள வழியிலென்கால்
செல்லச்செய்வாரே (மகா) – தற்ப
4 மரணநிழல்ப் பள்ளத்தில்நான்
வழிபோய்வந்தாலும் என்னைப்
பரன்காப்பார் மோசத்துக்குப்
பயப்பட்டஞ்சேனே (மகா) – தற்ப
5 எனதுதுணை யாக இருந்
தென்னைக் காப்பாரே ஆமாம்
தமதுதண்டங் கோலா லென்னைத்
தாங்கியாற்றுவாரே (மகா) – தற்ப
6 என்னுடைய சத்துருக்கட்
கெதிரில்நல்லபந்தி யமர்த்தி
என்னையதில் மகிமையுடன்
இருத்திவைத்தாரே (மகா) – தற்ப
7 என்தலையி லபிசேகம்
இதமாய்ச்செய்து வைத்தார் எனின்
சந்தோஷப் பாத்ரம்ரெம்பிச்
சவுக்கியம்பெற்றேனே (மகா) – தற்ப
8 தேவநன்மை கிருபையென்ற
செல்வபாக்கியங்கள் என்பின்
சீவனுள்ள நாளிலெல்லாஞ்
சேர்ந்துசெல்லுமே (மகா) – தற்ப
9 கற்தருடைய நல்வீட்டில்க்
காதலுடனே நான்
நித்தநித்த காலமெல்லாம்
நிலைத்திருப்பேனே (மகா) – தற்ப