Author: admin

46 சங்கீதம்

46 சங்கீதம் வெண்பா ஆல்மோத்தில் வாசிக்கக் கோராகின் அங்கிசத்தில் மேலாளாய்ப் பாட்டை விளம்பியே ஆலயத்தில் பாடினவனுக்குப் பதிவாக ஒப்புவித்த பாடலாங்கீதமிந்தப் பாட்டு காம்போதி                                   ஆதிதாளம் திறமும்நல் அடைக்கலமுந் தெய்வம் நமக்காகினாரே நிறைவனுகூலம் அவர் நெருக்கங்களிலே       1  தறைமலைபற்வதங்கள் தளம்பி நிலைமா றினாலும்    சமுத்திரத்துப்பெருக்கிலது சாய்ந்தும் அஞ்சோமே        – திறமும்

45 சங்கீதம்

45 சங்கீதம் கோறாகின் மக்களிலோர் ராகத் தலைவனுக்கு   ஆறுதந்தி வீணையில் வாசிக்கத் தேறின   போதகமும் நேசப் புகழ்பாட்டு மாக வைத்த தீதில்லா உன்னதப்பாட்டே சௌராஷ்டகம்                                   ஆதிதாளம் ( ஏசல் ) 1  நல்விசேடம் என்னிதையம்    ராசனின்மேல்க் கவியாக ஊற்றும் எனது    நாவதற்குத் தேறினஒர்    கணக்கனுடை எழுத்தாணி தானே   …

44 சங்கீதம்

44 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக் கோர்வையாம் போதகப்பாவே 1 – வது பங்கு.  வச.1 -3 ரீதிகவுளை                                   சாபுதாளம் எங்கள் பிதாக்கள் எங்களிடத்தினில் விவரித்தார்கள் எங்களின் செவிகளாலே கேட்டோம் 1  தங்கள்நா ளானபூர்வ தருணத்தில்ச் சாமிநீரே    தயவாகநடப்பித்த சமாதானச் செயல்களை               – எங்க

43 சங்கீதம்

43 சங்கீதம் வெண்பா   சன்மார்க்க மில்லாத சாதி யெனைவிலக என்சுவாமி என்னைநீர் ஞாயம் விசாரித்து என்வழக்கைப் பேசி அநியாயஞ் சூதாம் மனுசற் கெனைவிலக்குமே ஷகானா                                    திரிபுடைதாளம் என்பெலனானதெய்வம் நீர்தாம் ஏனென்னைந் தள்ளுகிறீர் 1  என்னையென் சத்துரு ஒடுக்கிறதெம்பினால்    ஏன்முகங்கருத்து நான் திரிந்தலையவேணும்                – என்

42 சங்கீதம்

42 சங்கீதம் குறள்- கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்கு   கோர்வையாம் போதகப்பாவே சங்கராபரணம்                                    திரிபுடைதாளம் என்னுடை ஆவி உமது மேலே வாஞ்சித் தேங்கிக் கதறு தெந்தன் சுவாமீ 1  தண்ணீ ராறுகள் கண்டு    தவனமும் வாஞ்சையுமாய்    மன்னிமன்னிக் கதறுகின்ற    வனவேனல் மானைப்போலே                     – என்னு

41 சங்கீதம்

41 சங்கீதம் குறள்- ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது   பாகமா யொப்புவித்த பாட்டு விருத்தம் 1  சிறுமைப்பட்டவன்மேலே கவனிப்பான    சிந்தையுள்ளோன் பாக்கியவா னவனைக் கற்தர்    சிறுமைவரும் நாளதிலே விடுவிப்பாரே    சீவனைத்தற் காத்துயிரைத் திடத்திவைப்பார்    தறணியிலேஅவன்பாக்யன் அவனை நீர் தான்    சத்துருக்கள்மனதுக்கொப்புக் கொடுக்கமாட்டீர்    திறனிழந்துபிணிப்பட்டுக் கிடக்கும்போது   …

40 சங்கீதம்

40 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது   பாகமா யொப்புவித்த பாட்டு குறிஞ்சி                                    ஆதிதாளம் ஏகோவாவை நோக்கியேகாத் திருந்தேன் அவர் என்னண்டை சாய்ந்தெனது விண்ணப்பங்கேட்டார். 1  மிகுபயங்கரக்குழியும் உழையும் சேரும்    விட்டென்னைக் கைதூக்கி    வெளியேற்றி வைத்தார்                           – ஏகோ

39 சங்கீதம்

39 சங்கீதம் குறள் – எதித்தூன் எனுமோர் இராகத் தலைவற்   கதிபன் தவிதுதந்த பாட்டு முகாரி                                    ஆதிதாளம் நாவினால்ப்பாவஞ் செய்யாப்படிக்கென் நடைகளைக் காப்பேனென்றேன் பாவிமுன்என் வாயைக் கலினத்தால்ப் பத்திரப் படுத்துவேனே 1  ஊமையோ லிருந்து நலமானதையும்    உதட்டால்ப் பேசேனென்றேன்    சேம மற்றென் நோவோ அதிகத்    தீவிரமாயினதே                                   – நாவி

38 சங்கீதம்

38 சங்கீதம் குறள் – நினைப்பூட்டலாக நிருபனாந் தாவீ திணைத்திட்ட சங்கீத மே சயிந்தவி                                                   சாபுதாளம் 1  உம்முடைய கடுமையிலே என்னை    உறுக்காதேயும் ஏகொவாவே    உம்முடைய உக்கிரத்தில் எனக்    குயிர்த்தெண்டனை செய்யாதேயும்

37 சங்கீதம்

37 சங்கீதம் தாவீதின் சங்கீதம் உலா 1  பொல்லார்மேல் வீணெரிச்சல்    கொள்ளாதே ஞாயக்கே    டுள்ளோர்மேல்ப் பொறாமை    யாகாதே புல்லைப்போல்