IX. தெய்வபுத்திரர் சிறைமீட்சிக்கெதிர் பார்க்குதல்
IX. தெய்வபுத்திரர் சிறைமீட்சிக்கெதிர் பார்க்குதல்
(ரோம.8:10,29, லூக்.21:28, அப்.1:6,7)
1 – வது யூதச்சாதி யுயர்வின் மூலம்
ஏசா. 9: 6-8
(இராகம் தெய்வத்தின்மேலே பட்டுப்பாடிடுங்கள்)
கேதாரகௌளம் அடசாபுதாளம்
ஒரு பாலகனாய் நமக்குத்தந்தார் சுவாமி
ஒரு மகவரை நமக்குத்தந்தாரே
1 பிரபுத்வ மவர்தோள்மேல்த் தரிகொள்ளுமே அவர்
பெறுநாம மதிசய மானவர் என்றாகும் – ஒரு
2 மந்திராலோசனையோர் வல்லமைத் தெய்வம்
சந்தத நித்யபிதா சமாதானப்பிரபே – ஒரு
3 தாவீதி னாசனம் தாவீதின் ராச்யமும்
சேமமா யிதுமுதல்த் திடப்படு மவர்க்கு – ஒரு
4 நீதியினாலும் நியாயத்தினாலும்
பேதமற் றதையென்றும்பெலக்கச்செய்வதற்கு – ஒரு
5 பிரபுத்வ மவர்க்கே பெருக்கமா யிருக்கும்
நிறைவான சமாதானம் நீடிக்கும் என்றும் – ஒரு
6 சேனையின் சுவாமி திரவயிராக்கியம்
மோனையா யதையே முடித்துக் கொண்டிருக்கும் – ஒரு
7 ஆண்டவ ரிவ்வார்த்தை யாக்கோபி லனுப்பினார்
பூண்டிடும் இசரவேல்ப் புத்திரர் மேலது – ஒரு
2 – வது யூதர்சாதியதிபதிகள் நீதிநடப்பு
அவர்களுயர்வுக் கனுகூலம்
ஏசா. 11: 1-10
(இராகம் சீயோன் சபைக்கிரக்கஞ் செய்யும்)
காம்போதி ஆதிதாளம்
1 வெட்டுண்டதூர் வேர்மரமாம் ஈசாய்
வித்திலொரு கிளைதளிராய்
கெட்டியாகச் சுவாமி சுவாசம் தனக்குக்
கிடைத்தமாந்தன் எழும்பிடுவான்
2 ஞானம் உணர் வென்ற சுவாசம் மகா
நல்யோசனை பெலத்தின் சுவாசம்
வானகற்தர்க் கஞ்சுஞ்சுவாசம் அறிவு
வகையுண்டாக்கும் சுவாசம் அதே
3 தன்னுடைய சுவாசஞ்சுவாமிக் கஞ்சும்
சஞ்சரிப்பா யிருக்கச் செய்வான்
தன்னுடைய பார்வை கேள்வி சார்ந்து
சனத்தைத்கடிந்து தீர்ப்புச்செய்யான்
4 பூதலத்தில்ச் சிறுமையானோர் தம்மைப்
புனிதமாகக் கடிந்துகொள்வான்
நீதியாக ஏழைகளின் ஞாயம்
நின்று விளங்கச் செய்திடுவான்
5 தன்வாக்கென்ற கோலினாலே பூமி
தன்னையடித்தே அடக்கிடுவான்
தன்னுதட்டின சுவாசத்தாலே பொல்லாச்
சத்துருவைக் கொன்றிடுவான்
6 சத்யமவன் இடுப்பின்கச்சை நீதி
தாக்கா யவன் அரையின்கட்டாம்
சத்யமவன் இடுப்பின்கச்சை நீதி
தாக்கா யவன் அரையின் கட்டாம்
7 அப்போ தோனா யாட்டுக்குட்டி யோடே
அமர்ந்துதங்கிக் கொண்டிருக்கும்
அப்போசிவிங்கி வெள்ளாடீன்ற குட்டி
அருகில்ப் படுத்துக் கொண்டிருக்கும்
8 பாலசிங்கம் கன்றுக்குட்டி காளை
பயல்மேய்த்தோட்டக் கூடிநடக்கும்
பால்மாடு கரடிகூட மேயும்
படுக்கும் அதுகள் குட்டியொன்றாய்
9 சிங்கம் மாட்டைப் போலே வைக்கல் தின்கும்
சிறுகுழந்தை பாம்புக்குழியில்
தன்கைபாய்ச்சி விளையாடிடும் விரியன்
தங்குபுதரில்க் கையையிடும்
10 கடலாழத்தைத் தண்ணீர்மூடும் போலே
கற்தரறிவால்ப் பூமி நிறையும்
கெடுதி தீமை செய்வாரிரார் விசேட
கிரியிலெங்கும் இவ்விதத்தில்
11 அக்காலத்தில் சாதிகட்குக் கொடி
யாகநிற்கும் ஈசாயின்வேர்
தக்கஅவர் தலம்மகிமைக்காக
சாதிகள்வந் துசாவுவார்கள்
3 – வது யூதச்சாதி யுயர்வதற்கு பக்கத்துச்
சாதிகளைச் சுவாமியவர்களுக்குட்படுத்துவார்
ஏசா. 11: 11-16
விருத்தம்
1 பத்ரோஸ் எகிப்பத்து நாட்டிலெங்கும்
பலத்ததாம் அசூர்யா நாட்டிலெங்கும்
எத்யோப்பா சீனேயார் பார்சாமாத்து
இன்னம்பல சமூத்திரத் தீ விடங்களெங்கும்
கற்தர்தம் சனத்தில்மீதி யானபேரைக்
கனமாக வசப்படுத்தி மீட்டுக்கொள்ள
சத்துவமாம் தம்கரத்தைத் திரும்பநீட்டி
சா திகட்கு லிருதுக்கொடி யேற்றுவாரே
2 இசரவேல்த் துரத்துண்ட பேரைச் சேர்த்து
இயூதாவில்ச் சிதறடிக்கப்பட்டோர் தம்மை
வசமாகப் பூமியின் நால் திசையை விட்டும்
வரவழைத்து அக்காலம் கூட்டிச்சேர்ப்பார்
வசையறவே எப்ராயீம் பொறாமை நீங்கும்
வல்யூதா சத்துருக்கள் மாளுவார்கள்
வசைப்பொறாமை எப்ராயீம் யூதாமேலே
வைக்கானவன் எப்ராயீமுக் கிடுக்கண்செய்யான்
3 இருவருமே ஏகமாய்ச் சேர்ந்துமேற்கின்
இடப்பெலிஸ்தர் தோள்மேலே பாய்ந்துபின்னும்
சருகுகீழ் திசையாரைக் கொள்ளையிட்டு
தம்கையை ஏதொம்மொவாப் பம்மோன்மேலும்
திறமாக நீட்டியவர்களைத் தமக்குள்
சிறையாகக் கீழ்ப்படுத்திக் கொள்ளுவார்கள்
திறமாக நீட்டியவர்களைத் தமக்குள்
சிறையாகக் கீழ்ப்படுத்திக் கொள்ளுவார்கள்
4 எகிப்பத்தின் சமுத்திரத்து முனையைமுற்றும்
எகொவா சாபமிட்டுவரளச் செய்வார்
தகுந்த அந்தநதிமேலே தமதுகாற்றைத்
தம்கரத்தின் சத்துவத்தாலடரச் செய்வார்
பகிர்ந்த ஏழா றுகளா யதையுடைத்து
பாதரட்சை நனையாமல்க் கடக்கச்செய்வார்
பகிர்ந்த ஏழா றுகளா யதையுடைநத்து
பாதரட்சை நனையாமல்க் கடக்கச்செய்வார்
5 இசரவேல் எகிப்பத்து நாட்டைவிட்டு
எடுத்தேறிப் புறப்பட்ட காலந்தன்னில்
வசமாகப் பயணத்துக்கு இசைந்தாப்போல
வல்லவராம்எகொவாவின் சனங்களுக்குள்
அசூர்யா நாட்டில்மீர்ந் திருந்தோருக்கு
அனுகூலமாம் நடப்பு வழியுண்டாகும்
அசூர்யா நாட்டில்மீர்ந் திருந்தோருக்கு
அனுகூலமாம் நடப்பு வழியுண்டாகும்
4 – வது யூதச்சாதி யுயர்வதுக்கு அவர்கள்மேல்
சுவாமிக்கிருந்த முந்தினகோபந் தணிந்து போகும்
ஏசா. 12 அதி
வெண்பா
தானாயுமதுகோபந் தாக்கிற்றென் மேலேமுன்
ஆனாலுமந்தவெப்ப மாறிற்று பேணியென்னைத்
தேற்றரவு செய்த திடத்தால் நானும்மை யென்றுந்
தோத்திரஞ் செய்திடுவேனே
(இராகம் ஆண்டவராம் சுவாமீ)
ஈடேற்றத் தெய்வமிதோ !
இவர்தஞ்சம் அஞ்சேன்நான்
1 ஈடேற்றமாம் எனது சுவாமி
என்தெய்வங் கீதம்பெலன் – ஈடே
2 ஈடேற்ற வூற்றுகளி
லெடுங்கள் நீர் மகிழ்ச்சியோடே
கூடிச்சுவாமி நாமந்தொழுது
கொண்டாடித் துதித்திடுங்கள் – ஈடே
3 திரளாளான நரர்க்குள் அவர்
செயல்களை யறிவியுங்கள்
பெரிய அவர்பேர் உயர்ந்ததென்று
பிரஸ்தாபஞ் செய்திடுங்கள் – ஈடே
4 மகத்துவஞ் செய்தனரே
மண்ணெங்கு மிது விளங்கும்
எகோவாவான அவரைப்புகழ்ந்து
ஏற்றியே துதித்திடுங்கள் – ஈடே
5 சீயோனில் வசிப்பவளே
சிமாளிப்பாய்ச் சத்தமிடு
சீயோன் நடுவி லிசரவேலின்
செயதெய்வம் பெரியவரே – ஈடே
5 – வது யூதச்சாதி யுயர்வதற்கு அவர்களை
முந்த ஒடுக்கி வந்தவர்களைச் சுவாமி
விலக்கி ஞாயந்தீர்ப்பார்
ஏசா. 24: 21-23
விருத்தம்
1 ஆகாசத் ததிகாரப் பிரபுச்சேனை
அதைச்சேர்ந்த பூதலத்தினரசர்சேனை
ஏகமா யெகோவாவா லந்தக்காலம்
ஏற்றஞாய விசாரணைக்குள் ளாகிப்போகும்
ஏகமாய்க் கெபியினிலே கட்டுண்டோராய்
இவர்களெல்லாஞ் சேர்ந்துகாவல்ப் படுத்தப்பட்டு
வாகாக அநேகநாள்ச் சென்றபின்பு
மறுபடியும் விசாரணைக்குள் ளாகுவார்கள்
2 சேனைகளி னேகொவா அந்தக்காலம்
சீயோன்மலை எருசலேந் கலத்திலாள்வார்
ஆனதினால் சந்திரனும் நாணிப்போகும்
அருக்கனுமே கூச்சமடைந் தடங்கிப்போகும்
ஞானமுள்ள அவர் தலைவர் முன்னுக்கங்கே
நன்மகிமை யுண்டாகிப் பிரகாசிக்கும்
ஞானமுள்ள அவர் தலைவர் முன்னுக்கங்கே
நன்மகிமையுண்டாகிப் பிரகாசிக்கும்
ஏசா. 25: 1-10
(இராகம் பூமியின் ராச்சியங்காள் போற்றிடுங்கள்)
அசரவேரி ஆதிதாளம்
கற்தாவே நீரெனது கடவுள்தாமே உம்மைக்
கனப்படுத்திஉமதுநாமந் துதிசெய்குவேன்
1 சத்யம் உறுதியாம் உமது
ததியோசிப் பெங்களுடை
புத்திக்கெட்டா அதிசயத்தைப்
போரச்செயவீ ரென்றென்றைக்கும் – கற்
2 பட்டணத்தை மண்மேடாகப்
பண்ணிவைத்தீரே அரண்
பட்டணத்தை யிடிசுவரின்
பாழுமாக்கினீர்
வெட்டவெளி குடியற்றபா
ழாக்கிவிட்டீர் அந்நியரின்
விந்திலுள்ளோர் தாபரித்த
அரண்களையெல்லாம் – கற்
3 பலத்தசனம் இதில்மகிமைப்
படுத்திடும்உம்மை இதிலே
பலவந்தச் சாதிநகர்கள்
பயந்ததிர்ந்திடும்
பலத்தசனம் உம்மை மகிமைப்
படுத்திடுமே இவ்விதத்தில்
பலவந்தச் சனநகர்கள்
பதறும் உமக்கே – கற்
4 பெலவந்தர் சீறல்மதில்
மேலேமோதியே யடிக்கும்
பெருவெள்ளம் போலிருக்கப்
பெலம்நீர் நீசற்கு
எளியவற்கிங் கிடுக்கம் வந்தால்
ஏற்ற திட மாயிருப்பீர்
எளியவற்கிங் கிடுக்கம் வந்தால்
இருப்பீர் திடமாய் – கற்
5 வெள்ளத்துக்குத் தப்புந்தஞ்சம்
வெயில்க்கு நிழல் நீர் மகா
வெப்பமான அந்நியரின்
விசனந் தணிப்பீர்
வல்பந்தர் கூக்குரலை
மப்புமேகத் தாலே வெயில்
மாறுவதுபோலே தாழ்ந்து
மாயச் செய்குவீர் – கற்
6 கொழுப்புமாம்சம்
இந்தமலை மேல்ச் சுவாமி
கொடுப்பா ரெல்லாச் சாதிகட்குங்
கூட்டவிருந்தாய்
முழுக்க சேனைச் சுவாமி யெல்லா
முகமுட்டாங்கு மூடலையும்
முழுங்கிடுவார் இந்தமலை
முகனை மேலேதான் – கற்
7 சாமியான தெய்வமங்கே
சாவைச் செயமாய் விழுங்கி
சகலமுகக் கண்ணீரையுஞ்
சாப்பாய்த் துடைப்பார்
பூமியெங்குந் தமதுசனம்
பூண்டநிந்தை நீக்கீடுவார்
சாமியிதைச் செய்திடுவார்
தமது வாக்குப்போல – கற்
8 நம்முடைய தெய்வமிவர்
நம்மை ரட்சிப்பார் இவர்
நாமிவர்க்கே காத்திருந்தோம்
நாட்டமாகவே
நன்மையான அவர் ரட்சிப்பில்
நாம்மகிழ்வோம் இம்மலைமேல்
நம்மெகொவா கரந் தாங்கும்
நாம் மகிழ்வோம் – கற்
6 – வது இயூதச்சாதி யுயர்வதுக்கு அவர்கள்தேசத்துக்
கடுக்க இருந்து அவர்களை ஒடுக்குகிற அரபிகளின்
மூலமான மோவாபியரைச் சுவாமி அடக்குவார்
ஏசா. 25: 10-12
விருத்தம்
வைக்கலெருக் குழிக்குள்ளே மகியுமாய்போல்
வல்லதெய்வம் மோவாபை மசியவைப்பார்
கைச்செயலாய்ச் சதசற்பனை யகந்தையையும்
கடுமையாய் நடத்தி நிற்கு மவர்கள்மேலே
தொக்காக நீந்துபவன் கைவிரிக்குஞ்
களுவு போல்க் கைவிரித்துப் பணியச்செய்வார்
மிக்கவுயர் மதிலரண்கள் தணியப்பண்ணி
வெறுந்தரையின் தூளாக அழியச்செய்வார்
7 – வது இயூதச்சாதி யுயர்வதுக்கு தெய்வச்
செயல் முன்னேறுகிற நடபடிக்கையை அது
அமைதியோடெதிர் பார்த்திருக்கும்
ஏசா. 26: 1-21
குறள் – (சிறைமீட்சி நாள் யூதா தேசத் திது சுவாமி
கிருபைச் செயல்ப்பாட்டா மே)
(இராகம் எகோவா! உமது கிருபைத்திரள்)
நாதநாமக்கிருபை ரூபகதாளம்
ஈடேற்றமே மதிலு மரணும்
ஆகிப்பெரிய நகரம்
எகோவாவினா லிங்கே யெமக்
கிசைந்த ததினால் மகிழ்வோம்
1 ஒடியுள்ளே பிரவேசிக்க
உண்மை கைக்கொண்டிருக்கும்
உறுதி நீதிச் சாதிக்காண்
திறந்தேவரச் சொல்ங்கள் – ஈடே
2 சமதானத்தைச் சமதானத்தைச்
காப்பீரென்பதுள்ளம்
தண்ணீ ராக வுருகும் நினைவாம்
சாமீ ! உம்மை நம்புவோம்
திமிராய் உயர வாசஞ் செய்வோர்
உயர்ந்த நகரத் திருப்போர்
சிதைவாய்த் தரை மட்டில் மண்ணாய்ச்
சிதறி யிடிய செய்வீர் – ஈடே
3 சிறுமை யானோர் ஏழைமனுசர்
கால்க ளதை மிதிக்கும்
செம்மை நீதி மானின் பாதை
திருத்வீ ரவன் நடையை
அறமாம் ஞாயத் தீர்ப்புப்பாதை
யணுயி யும்மை நோக்க
ஆத்துமத்தின் வாஞ்சை யுமது
அதனநாம நினைப்பாம் – ஈடே
3 சிறுமை யானோர் ஏழைமனுசர்
கால்க ளதை மிதிக்கும்
செம்மை நீதி மானின் பாதை
திருத்வீ ரவன் நடையை
அறமாம் ஞாயத் தீர்ப்புப்பாதை
யணுயி யும்மை நோக்க
ஆத்துமத்தின் வாஞ்சை யுமது
அதனநாம நினைப்பாம் – ஈடே
4 எனதாத்துமம் இரவிலும்மை
வாஞ்சித் தெனக்குள் ளிருக்கும்
எனதாவியால் அதிகாலையில்
ஏங்கி யும்மைத் தேடுவேன்
உமது ஞாயத் தீர்ப்பு நாட்டில்
நடக்கப் பூமிக் குடிகள்
உறுதியாக நீதிதன்னை
யுபதேசமாய்ப் படிப்பார் – ஈடே
5 ஆகாதவன் கிருபைச் செயல்
கண்டும் நீதி படியான்
அநியாயத்தை நல் நிதான
அவனியிலுஞ் செய்வான்
ஏகோவாவின் மகத்துவத்தைக்
கவனிக்காமல் நடப்பான்
ஏகோவாவே ! உமதுகரம்
எழும்பும் அதைப்பாரார் – ஈடே
6 சனத்துக்காக உமக்கிங் கிருக்கும்
பத்தி வயிராக் கியத்தை
சத்துருக்கள் கண்டுவெட்க
தணலு மவர்களை யெரிக்கும்
கனத்த சமா தான மெமக்குக்
கற்பிப்பீரே சுவாமீ !
காலம்வேளை யெல்லா மெமக்காய்க்
கனிவாய் நடத்தி வருவீர் – ஈடே
7 எங்கள் தெய்வ மான சுவாமி
உம்மைத் தொடுத்திராத
எசமான்களா யுள்ள மாந்தர்
எம்மை யிங்காண் டார்கள்
சங்கையாக உம்மை மாத்ரஞ்
சார்ந்தே யுமது நாமம்
சதமாகவே பிடித்திங்கதைத்
தழுவி நினைத் திருப்போம் – ஈடே
8 செத்தவர்கள் உயிர்க்கார் திரும்ப
மாண்ட ராட்சதர் எழும்பார்
சிதைப்பீர் அவர்கள் பேரையெல்லாம்
தீர விசாரித் திப்படி
கற்தாவே நீர் இந்தச்சாதிக்
கொட்டி மகிமைப்பட்டீர்
கடையாந்தரப் பூமியெல்லாங்
காணமகிமைப் பட்டீர் – ஈடே
9 தெண்டனைக்கே யாற்றாமையால்த்
தேடுவார்கள் உம்மை
கண்காணாம லந்தரங்கக்
காதலச் செபஞ் செய்வர்
பெண்டீர் பேறு காலவேளை
பெறும்வாதையில்க் கதறிப்
பிதற்றும்போலே யுமக்கு முன்னெம்
பீடை தவிப்பைச் சொல்வோம் – ஈடே
10 கெற்பமாகி வாதைப் பட்டுக்
காற்றைப் பெற்றோர் போல
கெடுதேசத்துக் கீடேற்றத்தைக்
கிடைக்கச் செய்ய எங்கள்
கைப்போராலே பூச்சக்கரக் காதகரு மடியார்
கைப்போராலே பூச்சக்கரக் காதகரு மடியார் – ஈடே
11 மரித்த உமது மாந்தர் எந்தன்
சவத்தோ டுயிர் பிழைப்பர்
மண்ணில்த் தங்கி யிருப்போர்களே
மகிழ்ந்து விழித் தெழுங்கள்
பரனே உமது பனிபூண்டுகள்
பனியைப் போலே யிருக்கும்
பரிகரிப்பாய் ராட்சதர்கள்
படையைப் பூமி விலக்கும் – ஈடே
12 சனமே நீ யுன் னறைக்குள்ப் புகுந்துன்
கதவுகளைப் பூட்டி
சினமே கடரு மட்டும் பதுங்கி
செற்றே கொஞ்ச நிமிஷம்
வினையாம் பூமிக் குடிதோசத்தை
விசாரித் தகற்றும்படிக்கு
எனதுசுவாமி தமதுதானத்
திருந்து புறப்படுவார் – ஈடே
13 பூமி தன்னில் ரத்தப்பழிகள்
பொதியா தப்போ திறந்து
சாமி முன்னே காட்டும் பழியின்
சாவுநரரைக் காட்டும்
பூமி தன்னில் ரத்தப்பழிகள்
பொதியா தப்போ திறந்து
சாமி முன்னே காட்டும் பழியின்
சாவுநரரைக் காட்டும் – ஈடே
8 – வது இயூதச்சாதி யுயர்வதுக்கு உலகத்திலுள்ள
பெலத்த ராச்சியங்களின் அக்கிரமங்களைச்
சுவாமி அடக்குவார்
ஏசா. 27 அதி
(கும்மிப்பாட்டு)
(இராகம் என் பெலனாகி ஏகோவா உம்மிலே)
1 நீண்டதும் பெரியதுமாகிய பாம்புகள்
நெட்டூரஞ் செய்கின்ற மிருகங்களே
ஆண்டவ ரதுகளைப் பலத்த தம் பெருங்கொடிய
ஆயுதத் தால் வெட்டிக் கொன்றிடுவார்
2 சமுத்திரத் திருக்கும் வலுசற்பந் தன்னையும்
சாமியே விசாரித்துக் கொன்றிடுவார்
சமுத்திரத் திருக்கும் வலுசற்பந் தன்னையும்
சாமியே விசாரித்துக் கொன்றிடுவார்
3 அக்காலம் மேல்த்தரத் திராட்சம்பழ ரசந்தரும்
அதனத் தோட்டமும் பயிருமுண்டாம்
முக்கியமாயந்தத் தோட்டத்தின் மேல்ப் பாட்டு
முறைமாற்றி மாற்றியே பாடுவார்கள்
4 எகொவா நாமத்தைக் காப்பாற்றி யடிக்கடி
இதமாய்த் தண்ணீர் பாய்த்திடுவோம்
பகைஞரில் எவனுமேகெடுத் திடாப்படிக்கதை
பகலிலும் இரவிலும் காத்திடுவோம்
5 முட்செடி நெரிஞ்சிலாய் நம்மோடார் உயித்தத்தில்
மோதியும் நாமதின் மேலேவந்து
ஒட்டுக்கும் ஏகமாய் எரித்திடுவோம்தகா
உக்கிரம் நமக்கிதில் இல்லையில்லை
6 அல்லவென்றால் அவன் நம்மோடே ஒப்புர
வாகிநம் பெலன் தொடுத்திருக்கவேணும்
நல்லதே யிதிலவன் நம்மோடே ஜக்கியம்
நாடி நம்பெலன் தொடுத் திருக்கவேணும்
7 யாக்கோபு வேர்பற்றி இசரவேல் பூப்பூத்து
நாடெங்குங் கனிதரும் நாள்வருமே
தாக்கமாயவனை யடிப்போரைப் போலடி
சாவுக்குமவனை வைப்பாரோ?
8 அவனுடைசனத்தைநீ ரப்புறப் படுத்தும்போ
ததனோடேமட்டாக வழக்காடுவீர்
அவமாய்க்கொண்டற்காற்றடிக்கிற நாளிலே
அதைவலு கரத்தாலே விலக்கிடுவீர்
9 அதோடேயாக்கோபினக்ரமம் நீங்கிடும்
அகன்றிடு மப்புறஞ் சிலைகள் தோப்பும்
சிதறுண்ட சுண்ணாம்புக்கற்கள்போல்த் தூசியாய்
சிலைப்பீடக்கற்களின் பாவமும்போம்
10 அரணானபட்டணம் அவாந்தரை யாகிவிடும்
அதின்தளம் தள்ளுண்டு வனாந்தரமாம்
நரையின் கன்றுகள் அங்கேயும் தழைமேய்ந்து
நாட்டமாய்ப் படுத்துக்கொண்டிருக்கும்
11 தழையிங்கொப்புக ளுலர்ந்திடும் அங்கேபெண்
சனங்கள் முறித்ததை யெரிப்பார்கள்
பிழைதனையுணர்ந்ததை நெகிழ்ந்திடாச் சனமிவர்க்
கிரங்கித் தயைசெய்யார் சிருட்டிக்கற்தா
12 ஏகோவா நதிக்கரை விளைவுதொட்டப்போது
எகிப்பத்து நதிமட்டும் போரடிப்பார்
ஆகையாலிசரவேல்ப் புத்ரரே நீங்களங்
காளாளாய் வந்தொன்றாய்ச் சேருவீர்கள்
13 அக்காலம் பாரியான் மெக்காளத் தொனியுண்டாம்
அசூரும் * மிகருமாய்ச் சிதறுண்டபேர்
முக்கிய எருசலேம் மலைமேல் வந்தப்போ
முகனையாய்ச் சுவாமியைப் பணிந்துகொள்வர்
9 – வது தற்கால வறட்சியை யெண்ணாமல்
தெய்வ நம்பிக்கையாய் யூதர் தங்கள்
தேசத்தில்க் குடி யேறுதல்
ஆப். 3: 17-20
(இராகம் சாமியையான் புகழ்வேன் வெகுசனத்)
தில்லானா ஆதிதாளம்
கற்தாவுக்குள் மகிழ்வேன் என்னைக்காக்கும்
கற்தாவுக்குள் மகிழ்வேன்
1 அத்திமரந் துளிர்க்கா ததிகமாய்வாடி
மெத்தமெத்தக் காய்ந்திட்டாலும் ஆம்அதுவே – கற்
2 திராட்சக்கொடிப் பண்ணை கனிதராதிருந்து
வரட்சியே நேரிட்டாலும் அதில் மிகவும் – கற்
3 ஒலீவமரத்திற் செய்த வேலைபிசகி
பலனற்றுப் போய்விட்டாலும் ஆம்அதுவே – கற்
4 வயல்வெளிப் பொருளாந் தானியவிளைவு
பயனற்றுப் போய்விட்டாலும் ஆம்அதுவே – கற்
5 ஆட்டுக்கிடையாடு மாட்டுத்தொழுமாடு
கூட்டோடே போய்விட்டாலும் ஆம்அதுகள் – கற்
6 உன்னதத்தின் தெய்வமாகிய எகோவா
என்பெலனாயிருக்கிறாரே அவர்என்றும் – கற்
7 நான்என் உயர்தலத்தில் நடப்பதற்கென காலை
மான்கால் போலாகச் செய்வார் என்காலை – கற்
8 வீணைத்தொனிக்கிசைக்க சாலத்தலைவனுக்கு
நானிதைக் கொடுத்துப்பாடி அரங்கேற்றி – கற்
* மிசுர் எ – து எகிப்துத்தேசமான மிஸ்ராயீம் தேசம்
(எபிறேயுப் பாசைப்படி வந்த மகம்மதியச் சொல்)
10 – வது உலகமாறுதலினாலே
யூதருடைய மனக்கடினத்தை நீக்கும்
தெய்வசகாயப் பாக்கியம் செப்.3:8 – 13
விருத்தம்
1 நமதுகொடுஞ் சினத்தாலே சாதிராச்சியம்
நாடெல்லாஞ் சேர்த்ததுக ளழியச்செய்வோம்
நமக்குளது தீர்மானம் அதுக்குள்க்கொள்ளை
நாம்நடத்தும் நாள்வரைக்குங் காத்திருங்கள்
நமதுபேரை யப்போது சனக்கூட்டங்கள்
நாடியோர்மை யாகத்தொழு திருப்பதற்கு
அமலமா யவர்களுடை உதட்டைநாமே
ஆயித்தஞ் செய்வமென்று சுவாமிசொன்னார்
2 சிதறுண்டு, ஏத்யோப்யா நதிகட்கப்பா
லிருந்துசெபஞ் செய்யுமெந்தன் சபைமனுசர்
விதவிதமாங் காணிக்கையோ டென்னிடத்தில்
வேண்டல்செய்ய உவந்துவந்து கூடுவார்கள்
எதிர்த்தெனக்குச் செய்தபிழைக் காகவெட்கி
இகழ்ச்சியடையா திருப்பா யந்தநாளில்
மதத்துந்தன் மகிமைதங்கள் செயல்தானென்கும்
வாய்வீண ருன்னிலிரா தழிந்துபோவர்
3 இனிநமது விசேடமலை தனிலேயுன்னில்
எழும்பாது அகங்காரம் சிறுத்தெளிமைச்
சனமானோர் உன்னடுவில் மீர்ந்திருப்பார்
சாமிபேரில் நம்புதலாய்த் தரிகொள்வார்கள்
அநியாயஞ் செய்யார்கள் இசரவேலில்
அப்புறம்மீர்ந் திருப்போர்கள் கபடப் பொய்நா
அணுப்போலுந் தோன்றாது பயமில்லாமல்
அவர்களங்கே தின்றுசுகித் துறங்குவார்கள்
செப்.3:14 – 20
(இராகம் தேனினி மையிலும் ஏசுவின்னாமம்)
சீயோனின்மகளாம் இசர்வேல்ச் சனமே
சிமாளித்துக் கெம்பீரி நல்ல
செருசலைமகளே முழுமனதாலும்
சிமாளித்துக் கெம்பீரி
1 நேயமாய்க் கற்தருன் னாக்கினையகற்றி
நீக்கினார் சத்துருவை மகா
நேயமாய்க் கற்தருன் னாக்கினையகற்றி
நீக்கினார் சத்துருவை – சீயோ
2 இசரவேலரச ராகிய எகொவா
இருக்கிறா ருன்னடுவில் இனிமேல்
வசையா யென்றுங் காணாதிருப்பாய்
மகா நிற் பாக்கியத்தை – சீயோ
3 அந்நாளி லெருசலேம் நகரைப்பார்த்து
அஞ்சாதே யென்பார்கள் சீயோனே
உன்கையைத் தளர் வொட்டாதேயென்று
உறுதியாய்ச் சொல்வார்கள் – சீயோ
4 எகொவாஉன் தெய்வம் இருப்பாருன் நடுவில்
ரட்சிப்பார் வல்லமையாய் அவரே
மகிழ்வார் மிகவுங் களிகூர்ந் தமர்ந்து
மகாஅன்பு காட்டிடுவார் – சீயோ
5 பண்டிகை யாசரிப் பில்லாத நிந்தை
பாரமாய்ச் சுமர்வதினால் மிகவும்
சஞ்சலப் பட்டவுன் சபையின் மனுசரை
தளமாய்ச் சேர்ப்பமென்றார் – சீயோ
6 தள்ளுண்ட நொண்டியைத்தற்காத்துச்சேர்த்தவனைத்
தாழ்த்தின யாவருக்கும் அததற்
குள்ளதின் படிக்கே ஞாயமாய் வேறே
உண்டாக்கி வைப்பமென்றார் – சீயோ
7 வெட்கமும் நிந்தையும் அனுபவித் திருந்த
வெகுவித நாட்டிலெல்லாம் அவனுக்
கக்காலம் நல்ல புகழ்ச்சியங் கீர்த்தியும்
ஆகிடச் செய்வமென்றார் – சீயோ
8 உங்களின் சிறையிருப் புங்கள் கண்காண
உலைவிதப் படும்போது நாமே
உங்களின் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக
உலகத்தில் வைப்பமென்றார் – சீயோ
9 அக்கால முங்களை நாமேயெழுப்பி
அழைத்துவந் திடுவமென்றார் இதோ
அக்கால முங்களை யெகோவா நாமே
அரவணைத் திடுவமென்றார் – சீயோ
11 – வது யூதச்சாதியின் மாதிரிபற்றி
சீர்ப்படுஞ் சகல தேசங்களுக்கும்
வருஞ் சலாக்கியம் ஏசா.35 அதி
(இராகம் கெம்யீரம் மிகவும் நிறையும் நமது நாவு)
உசேனி ஆதிதாளம்
வனாந்தரம் வறண்டவெளியும் மகிழ்ந்திடுமே
வலுகானல் வெளியே செழிக்கும்
மலர்போலே செழித்தே யோங்கும்
1 புனற்புரமாயது செழிக்கவே செழித்திடும்
பூரிப்புக்கெம்பீர மாகவே களித்திடும்
பொற்பான லீபனோன் கற்மேல் சாரோனின்
புறத்தலங்காரமும் மகிமையுமாகிடும் – வனா
2 எகோவாவின் மகிமை தன்னையும் நமதுதெய்வ
மிருக்கிற முக்யத்தையும்
இசைவாக மனுசர் காண்பர்
இவ்வித மாவதாலே
நெகிழ்ந்திடுங் கைகளையே திடப்படுத்தி
நெரிவான முழங்கால்களைப்
பெலப்படச் செய்திடுங்கள்
நெஞ்சுடைந்த மாந்தருடனே
திடன் கொள்ளுங்கள்
நீதிசரிக்கட்டவும் நேர்பதிற்கொடுக்கவும்
பூதலத்துங்களின் புனிதபரன் வருகிறார்
ஏதமில்லா துங்களை யிரட்சிக்க வருகிறார்
என்றுதிடன் சொல்லியே தைரியப்படுத்துங்கள் – வனா
3 அப்போது செவிடர்செவிகள் திறவுண்டுபோம்
அந்நகர்கண்கள் திறக்கும் அமர்கூறும் ஊமன்நாவு
சப்பாணி மான்போல்க் குதிப்பான்
அப்போது வனாந்தரத்திலே தண்ணீர்களும்
அவதியின் கானல்வெளியில்
ஆறுகளும் பிரிந்தேயோடும்
ஆகிடுந் தண்ணீர்த்தடாகம் கடுந்தரையில்
அல்லல்வெட்டாந்தரை நீருற்றாகிவிடும்
வல்லசற்பத்திடங்களில் புல்நாணல் சம்புமாம்
அவ்விடந்துயர்வான பாதையும் வழியுமாம்
அதுசுவாமி விசேடப்பாதையுமாகிடும் – வனா
4 தீண்டல்க்கார னந்தவழியில் நடவான் புத்தித்
திறமற்றோர் அதிலே நடத்துந்
திசைகெட்டுப் போவதில்லை
திடமாக யாரும் நடப்பர்
மீண்டமாந்தர் அதிலேநடப்பர் சிங்கந்துஷ்ட
மிருகமேயதில்வராது மீட்கப்பட்டோரே நடப்பர்
மிகமகிழ்வாக நடப்பர் சீயோனுக்கு
மெத்தச்சந்தோஷமும் மகிழ்ச்சியுமவர்களைப்
பற்றியே தொடர்ந்திடுங் கற்தரின் கிருபையால்
நித்தியமகிழ்வார் சிரசின்மேல்த் தங்கிடும்
நீங்கிடுஞ்சஞ்சலந் தவிப்புமே யோடிடும் – வனா
12 – வது யூதச்சாதியின் வேதமகத்துவம்
உபா.33:1-5
(இராகம் மங்களம் மங்களம் மன்னன் கிறிஸ்)
நெருப்பான ஞாயத்தின் பிரமாணமேயிருந்தது
வரம்பான சுவாமியின் வலபாரிசத் திருந்தது
1 பெருத்தகூட்ட மிசரவேற் பிள்ளைகட்காயிருந்தது
2 சீனாயில்ப்பாரானில்ச் சேயீர்தேசத் திருந்துமே
பானுபோல்ப் பிரகாசப் பளிங்காய் விளங்கி நின்றாரே
அனேகலட்ச ங்கொலுமன்ன
ரடர்ந்தசேனை யுடன் வந்தார் – நெரு
3 உண்மையைச்சொல்கிறேன் உலகசனக்கூட்டங்கள்
நன்மையாய்த்தெய்வத்தின் நாட்டத்துக்குள்ளானார்கள்
உமதுகையிலிருக்கிறார்கள் அவர்பரிசுத்தரெல்லாரும் – நெரு
4 உம்முடை பாதத்திலுவந்தேயவர்கள் பணிவர்கள்
உம்முடை சொற்களில் உயர்ந்தகல்விபடிப்பர்கள்
உம்முடை சொற்களில் உயர்ந்தகல்விபடிப்பர்கள் – நெரு
5 தோராவே யாக்கோபின் சுத்தசபைக்குச் சுதந்திரம்
*சீரியர் ராசவாய்ச் சிறந்தமோசே யதைத்தந்ததின்
கோத்ர ந்தலைவர் இசரவேல்க்கூட்டமாகிநிற்கையில் – நெரு
*சீரியர் = செம்மை மார்க்கத்தார் (சமஸ்கிருதமூலப்படிக்குஜேசூரன்
வங்கிசத்தார் என்றாகும்)
13 – வது யூதச்சாதியின் மேய்ப்பனும்
அஸ்திவாரக் கல்லுமென்னப்பட்ட யோசேப்புக்கு
சொல்லப்பட்ட பூமிமக்த்துவம் உபா.33:13 – 17
(இராகம் எத்தனை மகிமை யுமது நாமம் பூமி)
நாதநாமக் கிரியை ஆதிதாளம்
தேசம் எகோவா தயையாலேமகா
ஆசீர்வாதம் பெற்றிருப்பதாக – (நமது)
1 ஆசை நல் லருமையாக இறங்கும் வானத்
தாகாச நற்பனியினாலும் – (நமது) தேசம்
2 தாழ்வாக இருக்கும் ஆழத்தாலும் உதிக்குஞ்
சூரியனருமைப் பலங்களாலும் – (நமது) தேசம்
3 சந்திர னருமைப்பலன்களாலும் ஆதிச்
சுந்தரமலைகள் வரத்தினாலும் – (நமது) தேசம்
4 நித்திய மேடுகளி னருமையுள்ள
சொத்துக்களான நன்மையாலும் – (நமது) தேசம்
5 நாடுமதின் நிறைவுங்கொடுக்கும் நன்மையான
நீடிய நற்கனிகளாலும் – (நமது) தேசம்
6 முட்செடிவசித்த சுவாமிகிருபை யோசேப்
புச்சியின்மேல் என்றும் வருவதாக – (நமது) தேசம்
7 அவனுடைய சகோதரன் மாரிறதனத்
தவமுள்ளோன் மேலுமது வரட்டும் – (நமது) தேசம்
8 அவன் தலையீற்றுக்காளைச் சியப்புப்போலே
அவனலங்காரமிலங்கி வரவே – (நமது) தேசம்
9 அவன்கொம்பு காண்டாமிருகக் கொம்பாம் அதினால்
அவன்சனத்திரளைத் துரத்துவானே – (நமது) தேசம்
10 எப்ராயீம் பதினாயிரம்சேனை மனாசே
ஒப்பஅதோடாயிரமாஞ் சேனை – (நமது) தேசம்
11 தன்தேசக் கடையாந்தர மட்டும் அஃதால்
பின்றொடர்ந் தடர்ந்துதுரத்துவானே – (நமது) தேசம்
14 – வது யூதசாதிக்கு தெய்வ விசேடத்தாலாகிற
செயமகத்துவம் உபா.33:27 – 29
(இராகம் சுந்தர வானத்தினின்று தூயநந்)
செம்மை மார்க்கத்தாருடைய
தெய்வத்தைப்போல் யாருமில்லை
ஜேசூரனே யுன்தெய்வம்போல்
யாருமில்லையே நல்ல
1 தம்முடைய முக்கியத்தில்
சாமியுனக்கனுசாரியாய்
எண்மைவானம் விண்ணின்மேலும்
எறியேவாரார் மகா – செம்
2 அனாதித்தெய்வந்தாழ இருக்கும்
அவரின் நித்ய புயமுன்தஞ்சம்
உனதெதிரி யுனக்குமுன்னே
ஒடஅழியென்பார் என்றும் – செம்
3 தனிவாசமுஞ் சுகமுமாக
தங்குமிசர்வேல் யாக்கோபூற்று
கனிதானியந் திராட்சரசக்
காணியிலிருக்கும் என்றும் : – செம்
4 அவன்தேசத்தின் ஆகாசத்தில்
அமிர்தபனிப் பெய்துவரும்
அவன்தேசத்து வானப்பனியோ
அமிர்தப் பனியாமே என்றும்; : – செம்
5 உன்சகாயக் கேடயமும்
உன்முக்கியப் பட்டயமும்
என்றுவந்த எகொவாமீட்ட
இசர வேல்ச்சனம் நீ சுவாமி: : – செம்
6 உன்பகைஞர் உனக்கிடங்கி
ஒஞ்சிப்பேச நீயோ அவர்கள்
மின்மேடுகள் மேலேறி
மிதித்திடுவாயே அவர்கள் : : – செம்
7 பாக்கியங்கள் மிகுத்தசனம்
பாரில் நீதான் பாரில் நீதான்
பார்க்கிலுன்னைப் போலேயாரும்
பலத்துக் குடந்தையல்ல உற்றுப் ; : – செம்
15 – வது பங்கு யூதச்சாதி விசுவாசிகளும் புறச்சாதி
விசுவாசிகளும் ஒன்றுகூடுங் கடைசி விசேஷம்
ஏசா.66:18 – 24
(இராகம் நடப்போம் வாருங்கள் சீயோன் மலை)
சகலசாதியும் பாசைக்காரரும்
சந்திக்க நாம் கூட்டுக் காலம்வரும்
1 எகொவாவாம் நமது மகிமையைக் காண
இவர்கள் வருஞ்செயல் நினைவையுமறிவோம் – சகல
2 அவர்களில் நாமொரு அடையாளந்தந்து
அவர்களில்த் தப்பினோ ரெழும்பச் செய்வோம்
நவமாய்நமது கீர்த்தியை மகிமையை
நாடுத்தூரத் தீவுகட்கு மனுப்பிடுவோம்
யவனந்தூபால் தற்சீசுலூதெனும்
நாடுவில்லவர்பூழிக் கனுப்பிடுவோம்
அவர்களங்கங்கே நம்முடை மகிமையை
அறிவிப்பர் பலபல சாதிகட்குள்ளேயும் – சகல
3 கற்தரின் வீட்டுக் கிசரவேல்மனுசர்
காணிக்கை சுத்தமாம் பாத்திரத்தில்
பற்றமாய்க் கொண்டு வருவதுபோலே
பரிரதம்வேசரி வண்டியொட்டை
தத்தியதீவிரத் தியூதரினம் யாவையும்
சகலசாதிக ளிடத்திருந்தும்
சுத்தபற்வதத் தெருசலேம் நகர்க்குச்
சுவாமிக்குக் காணிக்கை யாகவேசேர்த்திட – சகல
4 பூசாலிமார்களும் லெவியருமாகப்
புறச்சாதிகளிற்சிலர் தெரிந்தெடுப்போம்
நேசமாயுங்கள் நாமமும் வித்தும்
நிற்குமே நாமினிப் படைத்தருளும்
வாசப் புதுப்பூமி வானமும் நமக்குமுன்
வயங்கும்போல் நமக்குமுன் விளங்கிடுமே
மாசத் தமாவாசி ஒய்வுநாள்தோறும்
மாம்சஞ் சமஸ்தமும் நமக்குமுன் பணியவரும் – சகல
5 நமக்கிங் கெதிராய்ப் பாதகஞ்செய்த
நரரின் பிணம் புறம் பார்ப்பார்கள்
கடிக்கும் புழுவுஞ் சாகாதிருக்குங்
கனலு மவியா தெரிந்திடுமே
சுகிக்க நம்மிடஞ் சேர்ந்திடும் எல்லாச்
சுகிர்த மாமிச தேகத்துக்கும்
பெருக்க வெறுப்பா யிருப்பர்க ளவர்கள்
பெரியசுவாமியின் பிரஸ்தாபவாக்கிது – சகல
அனுபந்தக் கீதம் முற்றும்