VI. மரியாள் பாட்டு
VI. மரியாள் பாட்டு
லூக்கா 1:46-55
(இராகம் கற்தருக்குப்பயந்தேயவர்)
துசாவந்தி ஆதிதாளம்
கற்தரின்மேல்ப்புகழ்பாடுங்களிப்புடன் என்நெஞ்சங்
களிகூரும் இரட்சகராங் கற்தர்மேலென் ஆவி
1 கற்தர் தம தடிமை யெனின்
அத்தியந்த தாழ்மையை
கண்ணினால்த் திருக் கண்ணினால்க் கிருபைக்
கண்ணினாலேயே பார்த்தார் – கற்த
2 இண்ணுமுத லுலகிலுள்ள
எல்லா வங்கிச மாந்தரும்
என்னையொரு பாக்யவதி
யென்றே சொல்லுவார்கள்
திண்ணக்கமாய்க் கற்தர்மிகச்
சிறந்த பெருஞ்செயலை
தேயந்தன்னிலே யேழையென்னிடஞ்
செய்தமெய்யான தயையினால் – கற்த
3 கற்தருடையபேர் விசேடக்
காரணத்தோ டிருக்கும்
கற்தருக்குப் பயந்திருக்கும்
பத்தியுள்ளோர் மேலே
நித்தநித்தந் தலைமுறைகள்
நீடுழிகள் வரைக்கும்
நிற்குமே தெய்வ இரக்கமே மிகு
நேசமாகவும் நிற்குமே – கற்த
4 கற்தர்மகாப் பெருஞ்செயலைக்
கரத்தினாலே செய்தார்
பெத்தரிக்க நெஞ்சர்களைப்
பிறண்டிடச் சிதறடித்தார்
சத்துவத்தோ ராசனத்தில்த்
தரிக்காமல்த் தள்ளி
தாழ்ந்தமாந்தரைத் தாழ்மைநீக்கியே
தறணிமீதினி லுயர்த்தினார் – கற்த
5 பட்டிணியும் பசியுமாகப்
பரதபித்தோர் மிகுந்த
பவுசு நன்மை யடைந்திருக்கப்
பரிபூரணந் தந்தார்
மட்டடங்காச் செல்வர்களை
வரண்டவெளி தனிலே
மகத்துவத்தெய்வமோ வெறுமையாகவே
மாறிப்போய்விட அனுப்பினார் – கற்த
6 ஆம் நமது பிதிர்க்களுக்கே
அளித்த வாக்கின்படிக்கு
ஆபிரகாம் சந்ததிக்கிங்
கனந்த காலமாக
சாமிமகா உண்மையுட
னிரக்கஞ்செய்ய வுகந்து
தமதுதாசனாம் இசரவேலையே
தாங்கினார் மிகத்தேற்றினார் – கற்த