III. வானதூதர் பாட்டுகள்
III. வானதூதர் பாட்டுகள்
ஏசா.6:3
(இராகம் எல்லாச்சாதியார்களே)
சங்கராபரணம் ஆதிதாளம்
சாமி சேனைச் சாமியே தனியேகர் ஏகர் ஏகர்நீர்
பூமியனைத்தும் உம்முடை போந்த மகிமை நிறைந்ததே
அல்லது
கற்தர் சேனைக் கற்தரே சுத்தர் சுத்தர் பரிசுத்தர்
முற்றும் இந்தப் பூமியை மூடும் அவரின் மகிமையே
எசே. 3:12
தமக்கென்றமைந்த தம்முடை தானத்திலிருந்துவிளங்கிய
சமஸ்த ஏகோவா மகிமைக்கே சாஷ்டாங்கஞ் செய்யத்தக்கதே
லூக்கா 2:14
உன்னதங்களில் மகிமையே உயர்ந்ததெய்வமானவருக்கு
மண்மேற் சமாதானமே மனுசர் பேரிற்பிரியமே