II. நரதெய்வம் படிப்பித்த மாதிரிச் செபம்
II. நரதெய்வம் படிப்பித்த மாதிரிச் செபம்
மத்.6: 9-13
துங்கவானிருக்கும் எங்கள் மெய்ப் பிதாவே
உம்கன நாமம் ஒன்றுமே விளங்க
உமமுடைய ராச்சியம் எம்மண்டை வரட்டும்
உம்முடைய சித்தம் உயர நடப் பதுபோல்
செம்மையா யுலகில் செய்யவே படட்டும்
அன்றன்றினெங்கள் அப்பத்தை யெமக்கு
இன்றைக்கும் அப்பா! இரக்கமாய்த் தாரும்
மற்றவர்க்கு நாங்கள் மன்னிக்கி றதுபோல்
குற்றங்க ளெமக்கும் மெத்தவும் பொறுப்பீர்
சோதனைகள் வந்தெமைச் சூழ்ந்திடா தகற்றும்
தீவினைகள் வந்தால்த் திருப்பிமீட்டருளும்
வல்லமை ராச்சியம் மகிமையும் உமக்கே
எல்லெல்லா நாளிலும் இருக்குதே – ஆமென்