90 சங்கீதம்
90 சங்கீதம்
குறள் – தேசத்தில்த் தெய்வ மனுசனாத் தென்பட்ட
மோசே செபமிந்தப் பாட்டு
கலிப்பா
1 தலைமுறைக ளாயெமக்குச்
சாமிநீர் ஒதுக்கானீர்
மலைநில முருப் பிடித்து
வருமுன்னும் நீரே தெய்வம்
2 மானிடர்கள் நிருதூளி
யாகியே மடிந்தபின்பும்
மானிடர்காள் திரும்பியிங்கே
வாருங்களென்பீரே
3 ஆச்சரியங் கற்தாவே
ஆயிரமாம் வருடங்களோ
ராச்சாமம் நேற்றொழிந்த
நாளாகும் உமக்குமுன்னே
4 பிரளயமாய் மனிதர்கூட்டம்
பேர்ந்தழியச் செய்தீரே
இருளிலே நித்திரைசெய்
ஏழைகள் போ லாகினார்கள்
5 காலையிலே பூத்தறுந்து
காய்ந்துவடி வலங்காரம்
மாலையிலே மாறிவிடும்
வனப்புல்ப் போ லாவார்கள்
6 உம்முடைய கோபத்திலே
ஒய்ந்தழிந்துபோறோமே
உம்முடைய சினத்தாலே
உக்கியே கலங்கி விட்டோம்
7 அம்மச்ச மான எங்கள்
அக்கிரமம் பாவந்தன்னை
உம்முடைய முகஒளியில்
உறுப்போல நிற்கவைத்தீர்
8 உமது சினத்தா லோடியிங்கே
யொழிந்ததெங்கள் வாழ்நாட்கள்
எமதுவருடங் கதைபோல
இயம்பியே கழிந்துவிடும்
9 எங்கள்வாழ்நா ளெழுபதெண்ப
தென்றுநிற்கும் பெலத்திருந்தால்
சங்கடம் வீண் பாடுகளும்
தானேயிங் கதின் மேன்மை
10 தீவிரமாய் செத்தறுத்து
சேர்ந்தோடிப் போறோமே
தீவிரமாய்ச் செத்தருந்து
சேர்ந்தோடிப் போறோமே
11 உமதுகோப வலுமையையும்
உம்முடைய சினத்தையுமே
உமதியற்கைப் பயங்கரமாய்
உணர்ந்துகொள்ளத் தக்கவனார்
12 ஞானமுள்ள இருதயத்தை
நாங்களிங்கே அடைய எங்கள்
ஈனவாழ் நாளை யெண்ணும்
எதார்த்த அறிவு தந்தருளும்
13 கற்தாவே திரும்புமிங்கே
காட்டம்எந்த மட்டும் வைப்பீர்
பத்தராம் எங்களின்மேல்
பரதாபங் கொண்டருளும்
14 நாட்களெல்லாம் நாங்களிங்கே
நன்றாக மகிழ்வதற்கு
ஏற்கெனவே எம்மைஉம
தின்பத்தயவால் நிரப்பிவிடும்
15 எங்கள்சிறுமை நாட்களுக்கும்
இடுக்கத்தி னாண்டு கட்கும்
பங்கீடா யும்முடைய
பலன்மகிழ்ச்சி தந்தருளும்
16 சாரும்பத்தர் எமக்குமது
தயைச்செயலைக் காட்டியெங்கள்
பேராபுத்ரா தமக்குமது
பெருமகிமை தந்தருளும்
17 எங்கள் கற்க ரின்பமெங்கள்
இடத்திலே யிருந்திடட்டும்
எங்கள் கைகள் செயலையெங்க
ளிடத்திலே திடப்படுத்தும்