81 சங்கீதம்
81 சங்கீதம்
குறள்-கீதத்தில் வாசிக்க ராகத் தலைவனுக்கு
வீதித்த ஆசாபின் பாட்டு
1 வது பங்கு வச.1 – 5
காம்போதி ஆதிதாளம்
கெம்பீரமாக நீங்கள் பாடிடுங்கள் பரனைக்
கெம்பீரமாகநீங்கள் பாடிடுங்கள்
1 அன்பானஏகோவா நம்முடை பெல
னானாரென்றவரையே வாழ்த்திவாழ்த்தி – கெம்
2 யாக்கோபின் தெய்வத்துக்கென்றார்ப்பரித்துதம்பூர்
நாதகீதம் மேளஞ்சுரமண்டலத்தோடே
யாக்கோபின் தெய்வத்துக்கென்றார்ப்பரித்துதம்பூர்
நாதகீதம் மேளஞ்சுரமண்டலத்தோடே – கெம்
3 அமவாசிநம்முடைய திட்டமான திருநா
ளானதிலும் எக்காள ஒசைமுழக்கி
அமவாசிநம்முடைய திட்டமான திருநா
ளானதிலும் எக்காள ஒசைமுழக்கி – கெம்
4 யாக்கோபுடைதெய்வம் வைத்த ஞாயமாமேஇது
நல்லஇசர வேல்ச் சபைக்குச் சட்டமாமே
யாக்கோபுடைதெய்வம் வைத்த ஞாயமாமேஇது
நல்லஇசர வேல்ச் சபைக்குச் சட்டமாமே – கெம்
5 அறியாதபாசையுள்ள எகிப்த்துத்தேசத் திருந்து
அகன்றெதிர்த்துப் புறப்பட்டுப்போகும்போது
அறிவுசாட்சி யாகச்சுவாமி யோசேப்பிலே பின்னால்
அதையவர் கட்கேற்படுத்திவைத்திட்டாரே – கெம்
2 வது பங்கு வச.6 – 16
விருத்தம்
தவயோசேப்பு தோளைச்சுமைக்ககற்றிவிட்டேன்
தப்பிப்போயிற் றவன்கையோ கூடைவிட்டு
உபத்திரவத்தில் எனைநோக்கிக் கூப்பிட்டாய் நீ
உன்னையப்போ கடத்திநான் மீட்டுவிட்டேன்
சவைகூடக்குமுறல்மப்பு மேகச்சார்பாய்த்
தந்தேன்நான் உனக்குமறு உத்தாரத்தை
தவனத்தில் மேரிபாத் தண்ணீரண்டை
தகுதியாய் உனைச்சோதித் தறிந்து கொண்டேன்
மத்தியமாவதி ஆதிதாளம்
உனக்குச் சாட்சியிடுவேன் கேள்நீ என்சனமே
உனக்குச் சாட்சியிடுவேன் கேள்நீ
1 தனிக்கநீ என் சொல்க்கேட்டால்
தாவிலை இசரவேலே
உனக்குள்ளே வேற்றுத்தெய்வம்
உண்டாகி யிருக்கவேண்டாம் – உனக்
2 அந்நியதெய்வத்தை நீ
அடிபணிந் திடவும் வேண்டாம்
உன்னைஎகிப்தி லிருந்து மீட்ட
உன்தெய்வமாம் ஏகொவா நான் – உனக்
3 உன்வாயை விரிவாய்த்திற
நம் மையால் நிரப்புவேன் நான்
உன்வாயை விரிவாய்த்திற
நன்மையால் நிரம்புமென்று – உனக்
4 என்சனம் இப்போதிங்கே
என்சத்தங் கேட்டதில்லை
என்னைநீ இசரவேலே
இசைந்துநாடி விரும்பவில்லை – உனக்
5 ஆகையாலவர்களிதைய
அட்டிக்கவர்களாகச் செய்தேன்
வேகமாய்த் தங்கள் நினைவின்
வினையத்தில் நடந்திட்டார்கள் – உனக்
6 என்சொல்லை எனதுசனம்
ஏற்றுக்கொண்டிருந்தால் நலம்
என்வழியில் நடந்துகொண்டால்
இசரவேல்ச் சபைக்கு நலம் – உனக்
7 கொஞ்சக்காலத்திலவர்கள்
குரோதக்காரரைத் தாழ்த்தி
என்சமர்த்தவர்கள் பகைவர்க்
கெதிராகத் திருப்பிடுவேன் – உனக்
8 அப்போது எகோவாபகைஞர்
அவர்கட்கு நட்பாய் பணிவர்
தப்பாமல் அவர்கள் காலம்
தரித்திடுமே என்றென்றைக்கும் – உனக்
9 நன்மையாய்க் கோதுமைத்தீன்
நல்குவார் அவர்களுக்குக்
கன்மலைத்தேனினாலே
உன்னைநான் நிரப்பிடுவேன் – உனக்