VII. சகரியா பாட்டு
VII. சகரியா பாட்டு
லூக்கா 1:67-80
(இராகம் உம்முடைய கிருபை யென்னை உறுதியாக)
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
இசரவேலின் தெய்வமான ஏகோவாவுக்குத்தோத்ரம்
இசரவேலின் தெய்வமான ஏகோவாவுக்குத்தோத்ரம்
1 உலகத்தோற்ற முதல் முனிவர் உரைத்த சொல்லின்படிக்குப்
பெலத்ததயைசெய்து தமதுசனத்தை மீட்டுக்கொண்ட
2. நம்முடையசத்துருக்கள் நம்மைப்பகைக்கும் மனுசர்
அம்மனுசர்கைக்கு மெல்லாம்நம்மை நீக்கிவிட்ட – இசர
3 தம்மடியான் தாவீதின் வம்மிசத்தில் மீட்பின்
கொம்பெழும்பச் செய்துவைத்த நம்பரனாயிருக்கும்
4. நமதுசத்ரு கையைவிட்டு நம்மைநீக்கி மீட்டு
நமக்கு மாற்றார்பயம் நீக்கி நன்மைசெய்துவைத்த – இசர
5 தேர்ந்தபத்தி நீதியுமாய் சீவநாளிலெல்லாம்
நாம்நமக்கு முன்நடக்க நற்கிருபை செய்த
6. எமதுபிதா ஆப்ரகாமுக் கிட்ட ஆணையான
தமது சுத்தஉடம்படிக்கைச்சாட்சி தனைநினைத்த – இசர
7 நம்முடைய பிதிர்களின்மேல் நற்றயவைச்சொரிந்த
நம்முடைய பிதிர்களின்மேல் நற்றயவைச்சொரிந்த
8. உன்னதத்திலிருந்துபகலுதையந் தோன்றச்செய்து
இன்னிலத்தோ ரிருள் நீக்கி ஏற்றவொளி தந்த – இசர
9 மரணநிழல் தனிலுட்கார்ந்து மயங்கிக்கிடந்தோர்க்கு
அருணோதயவெளிச்சந்தந்துஆற்றல் தயைபுரிந்த
10. உன்னதத்தி னொளியைத்தந்து ஒப்புரவின் வழியில்
என்னாளிலும் எமைநடத்த இன்பத்தயை செய்த – இசர
11 பாவமன்னிப்பறிவைச்சனம் தேவஇரக்கங்கொண்டு
பூவுலகி லறிவதற்குப் போதிப்பாய்நீ மகனே
12. கற்தாவின் வழியை நல்ல எத்தனத்துடன் வைக்க
கற்தாவுக்கு முன்நடப்பாய் கருத்துடன் என்மகனே
13 ஆகையால் நீ யுன்னதர்க்கு அதனத்தீர்க்கதரிசி
ஆகஇங்கேபேர்பெறுவாய் அருமையாமென்மகனே – இசர