Author: admin

96 சங்கீதம்

96 சங்கீதம் முகாரி                                        சாபுதாளம் புதுப்பாட்டைப் பாடிடுங்கள் எல்லாப் பூதலமாந்தர்களே 1  துதித்துநம் சுவாமியி னாமத்துக் கானந்த    தோத்திரஞ்செய்திடுங்கள் அவரால்    தோன்றியஇரட்சிப்பைப் பாடியேதினந்தினம்    சுவிசேடமாய்ச் சொல்லுங்கள்                        -புது 2  சாதியார்க்குள்ளேகற்தர் மகிமைத்    தாரிப்பைவிவரியுங்கள் எல்லாப்    பூதலச்சங்கமாம் யாவர்க்குமவருடை    புதுமையைவிவரியுங்கள் அவர்    பூர்த்தியாய்ப்பெரியவர் மிகுதியுந்துத்தியம்    புகழ்ச்சியு…

95 சங்கீதம்

95 சங்கீதம் 1 வது பங்கு வச.1 -6 எதுகுலகாம்போதி                                        சாபுதாளம் சங்கீர்த்தனம்பண்ணுவோம் கெம்பீரமாய்ச் சங்கீர்த்தனம்பண்ணுவோம் 1  சங்கையாய்நம்மையே தற்காத்துரட்சித்த    சாமியுங்கன்மலைத் தாவு மாங்கற்தரை                  -சங் 2  கற்தரின்சன்னதி யானதின் முன்பாகக்    கா தலாய்த்துத்திய மாகவே வந்துநாம்    கற்தருக்கார்ப்பரிப் புடனேநாஞ் சங்கீதங்    கணித்துப்பாடியே குதித்துப்பாடுவோம்                    -சங் 3  நம்முடைய தெய்வமாங்…

94 சங்கீதம்

94 சங்கீதம் 1 வது பங்கு வச.1 -15 நாதநாமக்கிரியை                                        ஆதிதாளம் 1  நீதிசரிக்கட்டுகிற தெய்வமான சுவாமீ!    நீதிசரிக்கட்டுகிற நிமலா! வெளிச்சந்தாரும் 2  பூதலத்தைஞாயந்தீர்க்கும் புனிதாநீரே உயர்ந்து    வாதுப்பெருமைக்காரருக்கு வதிலைச்சரிக்கட்டும் 3  எந்தமட்டும் ஆகாதோர்கள்    இகழ்ச்சிபண்ணுவார்கள்    எந்தமட்டும்சுவாமீ! அவர்க    ளிகழ்ச்சிபண்ணுவார்கள் 4  அக்கிரமக்காரரெல்லாம்    ஆக்கிரமித்துப்பேசி    வக்ரமாகப்பெருமைபேசி…

93 சங்கீதம்

93 சங்கீதம் காம்போதி                                              ஆதிதாளம் கற்தர்ராச்யம் மகா மகத்வராச்யம் 1     சத்துவத்தா லரைகட்டினார்     சாமிமகத்வ மணிந்துகொண்டார்                       தத்தளிக்கா தென்றும் பூமி     தாபகமே யடைந்திருக்கும்              -கற்தர் 2     உம்முடைய ராசானாம்     உறுதியாமே ஆதிமுதல்                      உம்முடைய இருப்பனாதி     யுகங்களாய் நின்றிருக்கும்              -கற்தர் 3     ஆறுகளோ அமளியான     ஆலைகளை…

92 சங்கீதம்

92 சங்கீதம் அகவல்-ஒய்வுநாள்ப் பாட்டாம் நேய சங்கீதம் கழிநெடில் 1     தம்புரினாலும் விணையினினிமைச்     சத்தத்தின் தியானத்தினாலும்                       சாமியைத்துதித்து உன்னதர்நாமஞ்     சரிவரக் கீர்த்தனம்பண்ணி     தம்பிரானுண்மை தணை இராமாறுந்     தயவையோ காலமேதினமுஞ்     சத்தியமாகத் துத்தியஞ்செய்து     சஞ்சரிப்பது மகாநலமே     என்பராநீரோ உம்முடைசெயலால்     என்மனம் மகிழ்ந்திடச் செய்தீர்…

91 சங்கீதம்

91 சங்கீதம் வெண்பா உன்னத தெய்வ ஒதுக்கி லிருக்கிறவன் இன்மமுமெல்லா வலுமையும் பண்ணிவரும் சாமிநிழலில் ராத் தங்கிவந்து நித்தமும் பூமியிலே சஞ்சரிப்பா னே மத்திய மாவதி                                         ஆதிதாளம் எகோவாதாம் எனதுதஞ்சம் நானேநம்பும் என்பரன் என்கோட்டை யென்பேன் 1     மிகுகொள்ளை நோய்க்கும் வேடர்     வினைக்கண்ணிக்கும் விலக்கிநிற்கும்                  -எகோ 2   அவர்சிறகு செட்டைக்குள்ளே திடமதாக     அமையஉன்னை…

90 சங்கீதம்

90 சங்கீதம் குறள் – தேசத்தில்த் தெய்வ மனுசனாத் தென்பட்ட மோசே செபமிந்தப் பாட்டு கலிப்பா 1  தலைமுறைக ளாயெமக்குச்    சாமிநீர் ஒதுக்கானீர்    மலைநில முருப் பிடித்து    வருமுன்னும் நீரே தெய்வம் 2  மானிடர்கள் நிருதூளி    யாகியே மடிந்தபின்பும்    மானிடர்காள் திரும்பியிங்கே    வாருங்களென்பீரே 3  ஆச்சரியங் கற்தாவே…

89 சங்கீதம்

89 சங்கீதம் குறள்-ஏசுரா கியகான எத்தானின் புத்தி வசனத்துச் சங்கீத மே 1 வது பங்கு வச.1 – 5 நாதநாமக்கிரியை                                        ரூபகதாளம் 1  எகொவாஉம்மை! உமது கிருபைத்திரள்    என்றும் பாடுவேன் நான்    எகொவாஉம்மை என்வாய்சொல்லும்    வம்ச பாரம்பரையாய் 2  செயமாய்த் தலை முறைத்துவமுன்    சிங்காசனம் நாட்டி    உயிர்த்தென்றுமுன்…

88 சங்கீதம்

88 சங்கீதம் 1 வது பங்கு வச.1 – 8 வெண்பா 1  எசுராகியனான ஏத்தானோ கோராச்    சிசுக்களிலோ ராகச் சிரேஷ்டர் இசையில்ப்    படிக்கத்தன் நோயாம் பலக்குறைவில்ப் பாடி    விடுத்ததாம் போதகத்தின் பாட்டு 2  என்னை யிரட்சிக்கும் ஏகோவா தெய்வமே    என்மன்றாட்டும்முடையமுன்வரட்டும் என்னுடைய    கூப்பா டுமதுசெவி கொள்ளட்டும் ராப்பகலாய்…

87 சங்கீதம்

87 சங்கீதம் குறள்-குப்பமாய்ப் பாடிவந்த கோராகின் புத்திரர்க்கு ஒப்புவித்த சங்கீதப் பாட்டு பரிசுத்த பற்வதத்தில்ப் பாரஸ்திவாரம் இருக்கவைத்த ஏகொவா யாக்கோ பரண்பதிகள் எல்லாஅரணைவிட இஷ்டசீயோன் மெய்த்தலத்தை நல்லாச் சிநேகிக்கிறார் துசாவந்தி                                        ஆதிதாளம் மாதெய்வ பட்டணமே மகிமைவிசேடங்கள் வகையாக உன்னிடத்தில் வசனிக்கப்பட்டிருக்கும் 1  ஆதிமுத லிசராவேல்    அறிந்த எகிப்துத் தேசம்    அந்தப்பாபிலோன் நாடுங்கூடவே   …