Author: admin

106 சங்கீதம்

106 சங்கீதம் விருத்தம் 1   என்றென்றுந் தயவுநிலையுள்ளோரான     எகொவாவைத் துதியுங்கள் அவரே நல்லோர்     நன்றாக அவர் துதியை வல்லமையை     நாவினால்விண்டுசொல்லத் தகுந்தவன்யார்     என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும்     ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன்     என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும்    ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன் 2   உம்மாலே தெரிந்தெடுக்கப் பட்டிருக்கும்     உமதுசாதிச்சுதந்தரத்தை யொட்டி…

105 சங்கீதம்

105 சங்கீதம் கேதாரகௌளம்                                      திரிபுடைதாளம் கற்தரைத் துதித் தவருடை நாமத்தை வெற்றிப்பிரஸ்தாப மாக்குங்கள் சனமே 1     சுற்றிலுஞ்சனக் கூட்டங்கட் குள்ளேநாம்         சுவாமிசெய்கையை யறிவித்துச்சொல்லுவோம்              -கற்த             2     அவரைப்பாடுங்கள் கீர்த்தனம்பண்ணுங்கள்         அவரின் அதிசெயம் யாவையும் தியானித்து                     அவரின்தனிப்புகழ் நாமத்தின்கணிசத்தை                     ஆனந்தத்துடன் பாராட்டிச் சொல்லுங்கள்                     -கற்த 3     எகொவாவைத்தேடும் மாந்தர்களிருதயம்         மகிழட்டுமஅவர்…

104 சங்கீதம்

104 சங்கீதம் முகாரி                               திரிபுடைதாளம் 1     எகொவாவைத் துதிசெய்திடு எனக்குள்                    இருக்கும் ஆத்துமமே மகா    எகொவாவைத் துதிசெய்திடு எனக்குள்         இருக்கும் ஆத்துமமே 2     மிகவுமே பெரியவர்நீர் தெய்வமாம்                    மேன்மையின் ஏகொவாவே மிகுந்த    மகிமையைக் கனத்தையுமே அணிந்து         மகிழ்ந்துகொண்டுருப்பீர் 3     பரமநல் வெளிச்சந்தன்னை வஸ்திரம்                    பட்டுப்போ லுடுத்திக்கொண்டு…

103 சங்கீதம்

103 சங்கீதம் தாவீதின் சங்கீதம் 1 – வது பங்கு வச.1-13 காம்போதி                                     ரூபகதாளம் மனமேமுழு உள்ளமே இப்போவாழ்த்துனது எகொவாவை மனமேமுழு உள்ளமே 1     தனிவிசேடமாம் அவரின் நாமத்தைத்                    தாகத்துடனே தெரிவித்தேற்றியே                – மனமே 2     கற்தரைத்தோத்திரஞ் செய்து நின்றிடு                    காதலாக என் னாத்துமாவே நீ    கற்தர்செய்த நன்மைகள் யாவையுங்        …

102 சங்கீதம்

102 சங்கீதம் வெண்பா சிறுமையனுபவித்தோன் தீங்கினால்த்தோய்ந்து கிருபைஎகோவாவின்முன்னே சிறுமையாய்த் தன்கெஞ்சலூற்றியே தாழ்மையுடன் செய்யும் விண்ணப்ப மானதிதுவே 1 – வது பங்கு வச.1-12 பைரவி                                     ஆதிதாளம் ஆ! என்விண்ணப்ப்ங்கேளும் எகோவாஉம்மண்டைக் கென்கூக்ரல்சேரட்டும் 1     முடுகநெருக்கமுண்டாம் மோசமானநாளில்                    முகமறைக்காமல்க்கேளும் வெகு                  சடுதியாகஉத்தரவைத் தாருந்ததிநாளெனக்கு             – ஆ! என் 2     எனதுநாட்கள்புகைபோல இற்றுப்பரியும் எந்தன்                  …

101 சங்கீதம்

101 சங்கீதம் தாவீதின் சங்கீதம் பைரவி                                         ஆதிதாளம் கிருபை நியாயத்தீர்ப்பைக் குறித்துப்பாடுவேன் நான் கீர்த்தனஞ்செய்திடுவேன்சுவாமீ! உம்மைத் தோத்திரஞ்செய்திடுவேன் 1     உத்தமமாம்வழியில் யுத்தியாக இருப்பேன்                    எத்ததிகாலத்திலே சுவாமீயிங்கே                  என்னண்டை வந்திடுவீர்                       – கிரு 2     என்வீட்டுக்குள்நான் உண்மையாக நடப்பேன்                    என்கண்முன்பேலியாளின் விசேடத்தை                  யானென்றும் வைப்பதில்லை                   – கிரு 3     வழிவிலகும்பேர்கள் அலுவல்களைப்பகைப்பேன்            …

100 சங்கீதம்

100 சங்கீதம் வராளி                                         ஆதிதாளம் பூமியின்குடிகாள் எல்லாருஞ் சாமிக்கென் றார்ப்பரியுங்கள் 1     சாமிக்குமகிழ்ச்சியோ டாராதித் துங்களின்                  சத்தங்கெம்பீரமாய்ச் சாமிமுன்வாருங்கள்           – பூமி 2     சாமிஏகொவாதான் அவர் தற்பரன்என்றறியுங்கள்                    நாமல்லஅவர்தாமே நம்மைத்தம்சுயசன                  நாட்டத்தின்மந்தையும் ஆக்கிக்கொண்டனர்             – பூமி 3     அவருடைவாசல்களில்த் துதிபுகழ்    அறைந்தங்கே புகுந்திடுங்கள்                    அவருக்கேமென்மேலுந் துத்தியம்செய்துகொண்                  டவருடைநாமத்தைத்…

99 சங்கீதம்

99 சங்கீதம் காம்போதி                                         ஆதிதாளம் கேரூபின்மேலேதங்கும் சுவாமி கிருபைஏகொவா அவர் கெட்டியாளுவார் சனத்திரள்மாந்தர்கள் கிடுகிடென்றஞ்சட்டும் பூமியுமசையட்டும் 1     பேர்பெறுஞ்சீயோனில் சுவாமி     பெரியவர் பெரியவரே அவர்    பிரசைக்கூட்டங்கள் யாவர்பேரிலும்                  பெருக்க உன்னத மாகவேயிருப்பவர்           – கேரூ 2     மகத்துவம்பயங்கரமாம் உமது     மகிமைநாமமொன்றே எங்கும்    மகாதனிப்புக ழானதாலதை                  மனிதக்கூட்டங்கள் வாழ்த்தியே…

98 சங்கீதம்

98 சங்கீதம் 1 வது பங்கு  வச.1-3 உசேனி                                         ஆதிதாளம் ஏகோவாவைப் பாடிடுங்கள் புதுப்பாட்டாக ஏகோவாவைப் பாடிடுங்கள் 1     மகா அதிசயங்களை வலதுகையாலுண்டுபண்ணி     வகைவகையாய்ரட்சித்தாரேவல்வி சேடக் கையினாலே    – ஏகோ 2     பிரஸ்தாபமாக்கினாரே எகொவாதம்     பெரியநல் மீட்பைத்தானே    அரங்கேற்றிவைத்தார் கற்தர் அவருடைய நீதிதன்னை                 தறணியிலுள்ள எல்லாச்சாதிக்குமுன்பாகவும்            – ஏகோ 3    …

97 சங்கீதம்

97 சங்கீதம் சங்கராபரணம்                                         ஆதிதாளம் 1     கற்தராளுகை செய்கிறார்     காசினி பூரிப்பாகுமே    மெத்தவுந்தீவுகள் மகிழுமே    மேகமந்தாரஞ்சூழுமே 2   நீதிநியாயங்கற்தரின்     நியாயாசனத்தின் மூலமே     மோதுமக்கினி யவர்க்கு     முன்னேவிளங்கி நிற்குமே 3   கற்தர்பகைவரை யக்கினி     சுற்றிலுஞ்சுட்டெரித் தழித்திடும்     கற்தர்மின்னல்கள் பூமியைக்     காட்சியா யொளி வாக்குமே 4  …